அது அந்த நடிகரோட கர்மா.. அதனால் தான் இப்படி பேசுறாரு.. இறந்துட்டேன்னு சொன்னாங்க.. சீதா வருத்தம்
சென்னை: நடிகை சீதா தன்னை பற்றி நெகட்டிவ்வாக வரும் கமெண்டுகள் மற்றும் தன்னைப் பற்றி வதந்திகள் பரப்பும் நடிகர்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். பல வருடங்களாக சினிமா துறையில் இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்தே தன்னைப் பற்றி அதிகமான வதந்திகள் பரவி வருவது குறித்து தன்னுடைய வருத்தத்தையும் சீதா தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல பவ்யமாக இருப்பார்கள். ஒரு சிலரை பார்த்தாலே அமைதியின் சொரூபமாகவும் டக்கென்று கவரும் விதத்தில் இருப்பார்கள். அதில் ஒருவர் தான் நடிகை சீதாவும். 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். 80ஸ் காலகட்டத்தில் இவர் கதாநாயகியாக நடித்த போதில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர்.

புகழில் உச்சத்தில் இருக்கும்போதே நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சீதாவும் பார்த்திபனும் விவாகரத்து செய்து விட்டனர். இது பற்றி பார்த்திபன் பேசுகையில் சீதா திருமணத்திற்கு பிறகு நடிக்க போறேன் என்று சொன்னார். அது அந்த நேரத்தில் எனக்கு தவறாகப்பட்டது, அதனால்தான் எங்கள் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டது.
ஆனால் இப்போ இருக்கிற மெச்சூரிட்டி அப்போ இருந்திருந்தால் தயவுசெய்து போயிட்டு வாம்மா உன்னுடைய திறமையை நீ காட்டு என்று சொல்லி இருப்பேன். ஆனால் அப்போது அந்த சரியான புரிதல் இல்லாததால் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது என்று கூறியிருந்தார். அதுபோல சீதா கூட பேட்டிகளில் நாம் ஒன்று நம்முடைய வாழ்க்கை துணையிடம் எதிர்பார்க்கிறோம். ஆனால் அங்கு அது ஏமாற்றமாக முடியும் போது தான் பிரிவு ஏற்படுகிறது என்று கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் பார்த்திபனை பிரிந்த பிறகு சீரியல் நடிகர் சதீஷை சீதா திருமணம் செய்திருந்தார். ஆனால் அந்த வாழ்க்கையும் அவர் நினைத்தது போல இல்லை என்று விவாகரத்து செய்துவிட்டு இப்போது தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். அதில் சீதா பேசுகையில் சமீபத்தில் ஒரு நடிகர் என்னைப் பற்றி யூடியூப் சேனல்களில் நான் வீடு கூட இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுகிறேன், பல பேருடைய வீட்டு வாசலை பெருக்கி அதில் வரும் வருமானத்தில் நான் வாழ்ந்து வருகிறேன் என்று பேசி இருக்கிறார்.
இது பற்றி பலரும் என்னிடம் கேட்டார்கள், அதுபோல இன்னொரு நபர் நான் இறந்து போய்விட்டேன் என்று கூட பேசி இருக்கிறார். அது தெரிந்ததும் என்னோடு பல வருடங்களாக பேசாமல் இருந்தவர்கள் கூட எனக்கு போன் செய்து எப்படி இருக்கிற? நலமாக இருக்கிறாயா? என்று பேசினார்கள். இந்த மாதிரி வதந்திகள் எனக்கு புதிதல்ல.
நான் சினிமாவில் அறிமுகமான புதியதிலிருந்து பல்வேறு வதந்திகளை கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் சினிமாவில் அறிமுகமானபோது இப்ப இருக்கிற மாதிரி கூட அப்போ பேசமாட்டேன். நான் என்னுடைய வேலையில் மட்டும் தான் அந்த நேரத்தில் கவனமாக இருந்தேன். ஆனாலும் ஏன் தான் என்னைப் பற்றி தப்பு தப்பா வதந்திகள் பரவியது என்று எனக்கு இப்ப வரைக்கும் தெரியவில்லை.
இப்போதும் ஒரு நடிகராக இருந்து தன்னை பத்திரிக்கையாளர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு நபர் ஒவ்வொருத்தரையும் தவறாக பேசிக் கொண்டிருக்கிறார். அது அந்த நடிகரோட கர்மா.. அடுத்தவர்களை பற்றி தவறாக பேசி அதில் வரும் வருமானத்தில் தான் இவர் உயிர் வாழ வேண்டும் என்று கர்மா இருக்கிறது. அதனால் தான் இவர் கண்டமேனிக்கு எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.
இது சில நேரங்களில் எனக்கு பிரச்சனையாக தெரியவில்லை என்றாலும் ஒரு சில நேரங்களில் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது என்று அந்த பேட்டியில் சீதா பேசியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications