குக் வித் கோமாளி சீசன் 5 ஷூட்டிங் தொடங்கியது.. கோமாளியாக இணைந்ததை உறுதிப்படுத்திய நடிகை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான சூட்டிங் நேற்று தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை நடிகை ஷபி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
நடிகை ஷபி தெய்வமகள் சீரியலில் தாரணி கேரக்டரில் நடித்து பிரபலமடைந்து இருந்தார். இவர் இப்போது ஜீ தமிழில் மாரி என்ற சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர்போன விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புதியது புதியதாக தொடங்கி வந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனாலேயே தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நான்கு சீசன்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில் ஐந்தாவது சீசன் நடக்குமா நடக்காதா என்ற எதிர்பார்ப்பும் சந்தேகங்களும் ரசிகர்களுக்கு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடுவர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று அடுத்தடுத்து எல்லோரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். இதனால் இந்த நிகழ்ச்சி இனி நடக்காது என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர். அந்த நேரத்தில் தான் விஜய் டிவி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தனர்.
அதாவது நடுவராக இருந்து விலகிய வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக நடிகராகவும் சமையல் கலைஞராகவும் இருக்கும் "மாதம்பட்டி ரங்கராஜன்" தாமுடன் இணைந்து இருக்கிறார். அதுபோல வழக்கமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் பலரும் இந்த சீசனிலும் தொடர்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் குக்காக இந்த சீசனில் பிரியங்கா தேஷ் பாண்டே, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் வசந்த், நடிகை திவ்யா துரைசாமி, நடிகர் வி.டி.வி கணேஷ், youtuber இர்பான் என்று பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் சுனிதா, குரோஸி, புகழ், ராமர் என நான்கு கோமாளிகள் கலந்து கொள்வது உறுதி ஆகி இருக்கும் நிலையில் தற்போது சீரியல் நடிகை ஷபியும் தான் இந்த கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தி இருக்கிறார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ப்ரொபைலில் குக் வித் கோமாளி 5 என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதுவரைக்கும் அவர் நடிகை ஷபி மற்றும் ஜீ தமிழ் என்று ப்ரோபைலில் வைத்திருந்த நிலையில் இப்போது விஜய் டிவி, குக் வித் கோமாளி சீசன் 5 என இரண்டை புதியதாக இணைத்து இருக்கிறார். இதனால் இவர் தான் இந்த சீசனில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தி இருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
அதே நேரத்தில் ஷபி ஏற்கனவே ராஜா ராணி சீசன் 1 மற்றும் பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவர் சீரியல்களில் துறுதுறுவென காமெடியாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இவரால் இந்த சீசன் கலகலப்பாக இருக்கும் என்பது ரசிகர்களால் எதிர்பார்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications