மணிமேகலை தப்புதான்! ஓடிப்போய் கல்யாணம் பண்ணினவங்க! அந்த வீடு எப்படி கட்டுனாங்க? பகீர் கிளப்பிய ஷகிலா
சென்னை: மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறியதற்கு காரணம் பிரியங்கா என்று அவருடைய பெயரை சொல்லாமல் ஒரு தொகுப்பாளர் என்று தன்னுடைய பதிவில் வெளியிட்டு இருந்தார். அதற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதில் நடிகை ஷகிலா பிரியங்கா தப்பு என்றால் மணிமேகலையும் தப்புதான்... மணிமேகலை மட்டும் சரியா? அவரும் ஓடிப்போய் கல்யாணம் செய்தவர் தானே? என்று பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.
சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பலருக்கும் மணிமேகலை பரீட்சையமானவர். youtube சேனலில் தான் சின்னதாக குண்டூசி வாங்கினால் கூட அதை அப்படியே ஒரு வீடியோவாக வெளியிட்டு விடுவார். தன்னுடைய ரசிகர்களிடம் தன்னுடைய வீட்டில் நடக்கும் சுகம், துக்கம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து வரும் மணிமேகலைக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை மணிமேகலை தொகுத்து வழங்கி இருந்தாலும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக கலந்து கொண்டது அவருக்கு பெரிய அளவில் பெயரை வாங்கி கொடுத்தது. ஆனால் கடந்த நான்காவது சீசனில் இருந்து அவர் வெளியேறி இருந்தார். பிறகு தொகுப்பாளராக அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இப்போது ஐந்தாவது நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக தொடர்ந்து கொண்டிருந்தார்.
ஐந்தாவது சீசனில் பலர் அந்த நிகழ்ச்சியை விட்டு விலகி விட்டனர். அதிலும் குறிப்பாக வெங்கடேஷ் பட் மற்றும் அந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என எல்லோரும் வெளியேறி இருந்தாலும் மணிமேகலை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார். நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்காமல் போயிருந்தாலும் கடந்த சனிக்கிழமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
அதாவது மணிமேகலை தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்துவிட்டேன். அதற்கு காரணம் இந்த சீசனில் போட்டியாளராக வந்த தொகுப்பாளர்தான். அவர் ஆரம்பத்தில் இருந்து என்னை என்னுடைய வேலையை சரியாக செய்ய விடாமல் தடுக்கிறார். அவர்தான் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார் என்று அந்த பதிவில் தெரிவித்து இருந்தார். இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மணிமேகலை பெயர் குறிப்பிடாமல் பேசியது பிரியங்காவை தான் என்று எல்லோரும் பிரியங்காவை திட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பிரியங்கா தரப்பில் இருந்து இது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. ஆனால் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் இப்போது பிரியங்காவிற்கு சப்போர்ட்டாக பேசிக் கொண்டிருக்கின்றனர். மணிமேகலை போஸ்ட் போட்டதும் அவருக்கு ஆதரவாக கமெண்ட் போட்ட குரோஷி உட்பட பலர் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வரிசையில் நடிகை ஷகிலாவும் பிரியங்கா மற்றும் மணிமேகலை விஷயத்தில் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். ஷகிலா ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான். தற்போதைய ஐந்தாவது சீசனிலும் இரண்டு எபிசோடில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிரியங்காவை பற்றி சமூக வலைத்தளத்தில் பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகிறது.
ரசிகர்கள் பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்தும் பேசி வருகிறார்கள். இதுவெல்லாம் ரொம்ப தவறு அப்படியே மணிமேகலைக்கு சப்போர்ட் செய்வதாக நினைத்துக்கொண்டு பிரியங்காவை மனதளவில் உடைய வைக்கும் வகையில் அதிகமான கமெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். மணிமேகலைக்கு பிரியங்கா மீது பொறாமை. நம்மை விட அதிகமாக சம்பாதிக்கிறார். நம்மை விட நிறைய ப்ரோக்ராம் செய்கிறார் என்று நினைக்கிறார்.
அதனால்தான் மணிமேகலையால் பிரியங்காவின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரியங்கா அயர்லாந்து போகிறார் என்றால் அவருடைய வருமானத்தில் போகிறார். பிரியங்கா மட்டும் அயர்லாந்துக்கு போவதற்கு எங்கிருந்து பணம் வந்தது என்று கேட்கும் ரசிகர்கள் மணிமேகலை புதியதாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறாரே அந்த வீடு கட்ட எப்படி பணம் வந்தது என்று கேட்கலாமே.
பிரியங்கா டைவர்ஸ் ஆகிவிட்டது என்று சிலர் அவருடைய வாழ்க்கையை பற்றி பேசுகிறார்கள். மணிமேகலை மட்டும் அப்போ சரியா? மணிமேகலை அவருடைய அப்பா அம்மாவை விட்டுவிட்டு ஓடிவந்து தானே கல்யாணம் பண்ணி இருக்கிறார். ஓடி வந்து கல்யாணம் பண்ணி இருக்கிறது சமூகத்துக்கு நல்ல உதாரணமா? இவங்களை உதாரணமாக காட்ட முடியுமா? நம்மை வீட்டு பெண்களை இதுபோல நீங்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கோங்க என்று யாராவது உதாரணமாக காட்ட முடியுமா?
பிரியங்கா தப்பு என்று சொன்னால் மணிமேகலையும் தப்புதான் என்று அந்த பேட்டியில் ஷகிலா பேசியிருக்கும் நிலையில் இது அதிகமான கருத்துக்களை, விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. மணிமேகலை காதலித்து இரு வீட்டின் எதிர்ப்பையும் மீறிதான் திருமணம் செய்து கொண்டார். மணிமேகலை இந்து அவருடைய கணவர் முஸ்லிம் என்பது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனாலும் தன்னுடைய காதலில் உறுதியாக இருந்த மணிமேகலை பல கஷ்டங்களை பட்டு ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார். இது குறித்து அவர் தான் புது கார் வாங்கும் போதும் சரி இடம் வாங்கும் போதும் சரி, தன்னுடைய ரசிகர்களிடம் அதை தெரிவித்து மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கிறார். என்னுடைய சொந்தங்கள் கூட என்னை கைவிட்டாலும் என்னுடைய ரசிகர்கள் என்னை கைவிடவில்லை. நீங்கள் தரும் சப்போட்டால் தான் என்னால் மேலே வர முடிகிறது என்று பல நேரங்களில் வீடியோக்களில் மணிமேகலை பேசியிருக்கிறார். இந்த நிலையில் இப்போது அவருடைய திருமண வாழ்க்கையை பற்றி ஷகிலா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications