தங்கையால் வந்த வினை.. 300 பேரு முன்பு இடுப்புக்கு மேலே ஆடை இல்லாமல் நின்றேன்.. நடிகை ஷகிலா பகீர்
சென்னை: நடிகை ஷகிலா சமீபத்தில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நடந்த அவலங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அப்போது தன்னுடைய தங்கை செய்த செயலால் தான் நீச்சல் குளத்தில் இருக்கும் போது தன்னுடைய மேல் ஆடை முழுவதுமாக கழண்டு போனதால் கிட்டத்தட்ட 300 பேரு முன்பு தான் ஆடையில்லாமல் நின்ற அவலம் குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார்.
அதே நேரத்தில் தனக்கு அந்த கூட்டத்தில் இருந்து கிடைத்த உதவி குறித்தும் பேசியிருக்கும் ஷகிலா தனக்கு முகம் தெரியாமல் உதவிய நபருக்கு நன்றி கூறியிருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகை ஷகிலா ஆரம்ப காலகட்டத்தில் மலையாளத்தில் நடித்து பெயர் வங்கி இருந்த நிலையில் இவர் கவர்ச்சிகரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அந்த நேரத்தில் மலையாளத்தில் இவருடைய படத்திற்கு பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலம் இருந்தது. அதனாலேயே ஷகிலாவுக்கு பிரச்சனையும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மலையாள திரைப்படங்களில் நடிக்க கூடாது என்று கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் ஒரு சில சீன்களில் நடித்துக் கொண்டிருந்த ஷகிலாவுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. அதுவரைக்கும் ஷகிலாவின் மீது இருந்த பார்வையை அடியோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாற்றிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் புகழ் ஷகிலாவை அம்மா என்று அழைத்து எல்லோருமே ஷகிலா அம்மா என்று இந்த நிகழ்ச்சியில் அழைக்க தொடங்கிவிட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஷகிலா ஒரு சில விஜய் டிவி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் சில youtube சேனல்களில் பிரபலங்களை பேட்டியெடுத்தும் கொண்டிருக்கிறார். அப்படியான நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஷகிலா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நினைவுகள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் நீச்சல் உடை உடுத்தி நடித்த அனுபவம் குறித்து பேசி இருக்கின்றார்.

அதில் ஷகிலா பேசுகையில் எனக்கு நீச்சல் கொஞ்சம் கூட தெரியாது. அதனால் நான் நீச்சல் உடை போட்டுக் கொண்டால் தண்ணீர் பக்கத்தில் போக மாட்டேன். அதற்கு காரணம் ஒருமுறை நானும் என்னுடைய தங்கச்சியும் சில்க் நடித்த ஒரு திரைப்படத்தில் நீச்சல் உடை போடுவது போன்று காட்சிகள் இருந்தது. நான் டூ பீஸ் உடை அணிந்து இருந்தேன். என்னுடைய தங்கச்சி ஒன் பீஸ் உடன் போட்டு இருந்தாள். முதலில் சில்க் நீச்சல் குளத்தில் குதித்ததும், நான் அடுத்ததாக குதிக்க வேண்டும்.
அதற்கு பிறகு என்னுடைய தங்கை குதிக்க வேண்டும் என்று காட்சிகள் சொல்லி இருந்தனர். நான் தண்ணீரை பார்த்ததுமே எனக்கு நீச்சல் தெரியாது சார் இந்த காட்சிகள் வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன். ஆனால் அங்கிருந்தவர்கள் இது நாலடி தான் எட்டடி தான் என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு இவர்கள் இப்படி சொன்னதுமே பெரியதாக தெரியவில்லை. நீச்சல் தெரியவில்லை... அதுபோல அடி கணக்கு சொன்னதும் பெரியதாக புரியவில்லை.
அதனால் சரி என்று அவர்கள் சாட் சொன்னதும் நீச்சல் குளத்தில் டக் என்று குதித்தேன். அதைத்தொடர்ந்து என் மீது என்னுடைய தங்கையும் குதித்து விட்டாள். அவள் என் மேலே விழுந்த வேகத்தில் நான் போட்டு இருந்த மேலாடை கழண்டு போய்விட்டது. இடுப்புக்கு மேலே எந்த ட்ரெஸ்ஸும் இல்லாமல் நான் தண்ணிக்குள் இருக்கிறேன். எனக்கு நீச்சலும் தெரியாமல் நான் கையை அங்கேயும் இங்கேயும் ஆட்டி தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.
அப்படியே மேல வருகிறேன்.. அப்போது அந்த ரெஸ்டாரட்டில் கிட்டத்தட்ட 300 பேருக்கு மேல் அங்கே இருந்திருப்பார்கள்.. அவர்கள் முன்பு நான் மேலாடை இல்லாமல் நிற்கிறேன். அந்த நேரத்தில் எங்கிருந்தோ ஒரு நபர் டக்கென்று ஒரு டவளை தூக்கி போட்டார். புராணங்களில் சொல்லுவார்கள் கிருஷ்ணர் ஆடை கொடுத்து மானத்தை காத்தார் என்று எனக்கு அந்த நேரத்தில் யார் என்று தெரியாமல் என் மானத்தை காத்த அந்த நபர் கிருஷ்ணராக தான் தெரிந்தார்.
பிறகு நான் நேராக ரூமுக்கு ஓடி விட்டேன். அன்று முழுக்க நான் ரூமை விட்டு போகவில்லை. என்னுடைய உடம்பை அங்கிருந்த புரொடியூசர், கேமராமேன் உட்பட எல்லாரும் பார்த்து விட்டார்களே இனி நான் அவர்கள் முன்பு எப்படி என் முகத்தை காட்டுவேன் என்ற கேவலத்தில் நான் இருந்தேன். அதற்குப் பிறகு எல்லோரும் என்னை சமாதானம் செய்த பிறகுதான் அடுத்த நாள் நான் சூட்டிங்கில் நடித்தேன். அதற்குப் பிறகு நான் எந்த காட்சிகளிலும் நீச்சல் குளத்தில் குதிக்கவே மாட்டேன். நீச்சல் உடை அணிந்து வெளியே தான் இருப்பேன் என்று அந்த பேட்டியில் ஷகிலா பேசியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications