அன்னைக்கு என்னை பார்க்க உள்ளே விடல.! இன்னைக்கு 1000 கண்கள் இருக்கு...கோவில் விழாவில் ஷகீலா உருக்கம்
நடிகை சகிலா கேரளாவில் இதற்கு முன்பு தான் வந்து இப்போது நடந்த நிகழ்வுக்கும் இப்போது நிலைமை மாறி இருக்கிறது என கோவில் விழாவில் உருக்கமாக பேசியிருக்கிறார்.
கேரளா: நடிகை ஷகிலா கோவில் விழாவில் உருக்கமாக பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கடந்த முறை என்னை நுழைய விடவில்லை ஆனால் இந்த முறை சிவனுடைய திட்டம்தான் என்று தனக்கு நடந்த நிகழ்வு பற்றி ஷகிலா பேசியிருக்கிறார்.
இதற்கு முன்பு கேரளாவில் தனக்கு நடந்த கசப்பான நினைவு பற்றி தற்போது ஷகிலா பேசியிருப்பது பல்வேறு கருத்துக்களை பற்றி வருகிறது.

கவர்ச்சி நாயகி
சினிமா உலகில் சில்க் சுமிதாவிற்கு பிறகு கவர்ச்சி நாயகியாக ரசிகர்கள் பலரால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் ஷகிலா.. 80ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக இருந்து வந்த சகிலா பெயரை சொன்னாலே ரசிகர்கள் குஷி ஆகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவர் தன்னுடைய படங்களின் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்து ஷகீலா தமிழ் சினிமாவில் கவுண்டமணியுடன் சில படங்களில் ஆரம்பத்தில் நடித்திருந்தார்.

குடும்ப சூழ்நிலையால் நடிப்பு
தன்னுடைய குடும்ப சூழ்நிலையின் காரணமாக மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து ஷகிலா கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான். இதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிகமான ரசிகர்கள் இப்ப வரைக்கும் இருந்து வருகிறார்கள். வாழ்க்கை செல்ல செல்ல கவர்ச்சியாக மட்டுமல்லாமல் சிறு சிறு வேடங்களில் தமிழ் படங்களிலும் அறிமுகமானார். குறிப்பாக ஒரு சில திரைப்படங்களில் ஷகீலா என்கிற கேரக்டரிலே இவர் அறிமுகமானார். குறிப்பாக ஜீவா நடித்த திரைப்படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு இவர் ஷகிலா கேரக்டரில் என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் பலர் பாராட்டி வந்தனர்.

பார்வையை மாற்றிய நிகழ்ச்சி
இவர் மீது இருந்த ஒரு பார்வையை மாற்றிய நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் பலர் ஷகிலா அம்மா என்று இவரை அழைக்க தொடங்கிவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய சமையல் திறமையால் பலருடைய மனதையும் கவர்ந்து விட்டார். அது மட்டுமில்லாமல் தன்னுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் சோகம் நடந்தது என்பது பற்றி இவர் அடிக்கடி தன்னுடைய youtube சேனல்கள் மூலமாகவும் பேசி வருகிறார். அதனாலே இவருடைய ரசிகர்கள் இவரை பாலோ பண்ண தொடங்கி இருக்கின்றனர்.

அனுமதி மறுப்பு
இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஒரு கோவில் பங்க்ஷனில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கோழிக்கோடு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள ஷகிலா அழைக்கப்பட்டு இருக்கிறார். ஷகீலா அங்கே சென்றபோது வணிக வளாக நிர்வாகத்தினர் அனுமதிக்க மறுத்து இருக்கின்றனர். அதோடு அந்த நிகழ்ச்சியையும் ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பாதுகாப்புக்கு காரணம் கருதியை நிகழ்ச்சி ரத்து செய்ததாக அப்போது வணிக வழியாக நிர்வாகத்தினர் கூறி இருந்தனர்.

எல்லாம் கடவுள் செயல்
இந்த நிலையில் ஷகிலா கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தைக்கட்டு ஸ்ரீ மகாதேவா கோவில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார். இந்த விழாவில் ஷகிலா பேசும்போது நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இங்கு சிறப்பு விருந்தினராக வந்திருப்பது கடவுளுடைய ஆசிர்வாதம் தான். நான் கடந்த முறை கேரளா வந்த போது பல பிரச்சனைகளை சந்தித்தேன். வணிகவளாகம் ஒன்றில் நுழைய கூட அனுமதிக்கவில்லை. ஆனால் கடவுள் எனக்காக இந்த திட்டத்தை செய்திருக்கிறார் என்று இப்போது உணர்கிறேன். வணிக வளாகத்தில் என்னை பார்க்க 200, 300 பேர் தான் வந்திருந்தார்கள். ஆனால் இப்போது என்னை ஆயிரம் பேருக்கு மேல் பார்க்கிறார்கள். இது சிவனுடைய திட்டம் தான் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications