நடிகரோடு காதல் திருமணம், கணவர் இறந்து 20 வருஷம்.. தனிமை வாழ்க்கை.. மொட்டை அடித்து சாந்தி பிரியா உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமான நடிகை சாந்தி பிரியா இப்போது மொட்டை அடித்து போட்டோ ஷூட் எடுத்து இருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் இவருக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் அவருடைய காதல் திருமண வாழ்க்கை, தன்னுடைய கணவர் இறப்பு, தான் இப்போது எதற்காக மொட்டை அடித்திருக்கிறேன் என்ற பல விஷயங்களை சாந்தி பிரியா பேசியிருக்கிறார்.

1987 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் நடிகை சாந்தி பிரியா தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படம் வெளியாகி 35 வருடங்களை கடந்து விட்டது. ஆனால் இப்போதும் இவர் அதே இளமை குறையாமல் இருக்கிறார். தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களிலும் பெண்களுக்கு மோட்டிவேஷன் கொடுக்கிற மாதிரி ஒர்க் அவுட் வீடியோக்கள் மற்றும் யோகா, தியானம் செய்வது போன்ற வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு பலரையும் வாவ் செல்ல வைத்திருக்கிறார்.

Shanthipriya

போட்டோ ஷூட் புகைப்படங்கள்

சாந்தி பிரியா நடிகை பானுப்ரியாவின் சகோதரி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். பானுப்பிரியாவோடு சாந்தி பிரியா எடுத்த புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாந்தி பிரியா பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் இவர் தலைமுடியை மொட்டை அடித்து வித்தியாசமான போட்டோ சூட் எடுத்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பானுப்ரியாவின் சகோதரி

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழிகளிலும் சாந்தி பிரியா நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கியதும் ஹிந்தி சீரியல்களிலும் நடித்து வந்தார். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே 1992 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சித்தார்த் ராய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சாந்தி பிரியா பேட்டி

திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கிறார். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் கடந்த 2004 ஆம் ஆண்டு சாந்தி பிரியாவின் கணவர் திடீரென மாரடைப்பு உயிரிழந்தார். இந்த செய்தி பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. தன்னுடைய கணவர் இறப்பிற்கு பிறகு தனியாகவே குழந்தைகளை கவனித்து வரும் சாந்தி பிரியா தன்னுடைய தற்போது நிலை குறித்து பிரபல தனியார் சேனல் ஒன்றில் பேசி இருந்தார்.

காதல் திருமணம்

அதில் நான் காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயம் என்னுடைய அம்மாவுக்கு ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. அதற்கு காரணம் ஹாலிவுட்டில் இப்போதுதான் நீ பிஸியா நடிச்சிட்டு இருக்க, இந்த நேரத்தில் கல்யாணம் தேவையா? என்று கேட்டார்கள். ஆனால் அந்த நேரத்தில் என்னுடைய காதல் என் கண்ணை மறைத்து விட்டது, திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகு குடும்பம் தான் முக்கியம் என்று தோன்றியதால் நான் சினிமாவை விட்டு விலகி குழந்தைகள் மற்றும் கணவரை கவனித்துக் கொண்டேன்.

Shanthipriya

கணவர் இறப்பு

என்னுடைய மூத்த மகனுக்கு 14 வயதும் சின்ன மகனுக்கு நான்கு வயதும் இருக்கும் போது என்னுடைய கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். அவருடைய மறைவுக்கு பிறகும் நான் மும்பையில் தான் வசித்து வருகிறேன். என்னுடைய அம்மா சென்னைக்கு வந்து விடு என்று கூப்பிட்டாங்க. ஆனால் எனக்கு அவர் வாழ்ந்த இடத்தை விட்டு வருவதற்கு மனசு இல்லை. நான் இப்போது மொட்டை போட்டிருக்கும் விஷயம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திடீர் மொட்டை

சாந்தி பிரியாவிற்கு என்ன ஆச்சு? ஏன் மொட்டை போட்டு இருக்காங்க? அவங்களுக்கு உடல்நிலை பிரச்சனையா? அல்லது கோவிலுக்கு வேண்டுதல் வைத்து மொட்டை போட்டு இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் எதுவுமே இல்லை. எனக்கு ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் என்று தோன்றியது அதனால் தான் நான் மொட்டை போட்டேன் என்று கூறியிருக்கிறார். சாந்தி பிரியா இப்போது தமிழிலும் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவருடைய தற்போதைய போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+