மோகன்லாலுக்கு நன்றி இல்ல! 9மாத கர்ப்பிணியா நகையை விற்று பணம் கொடுத்தேன்.. ஆனால்!- சாந்தி வில்லியம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகை சாந்தி வில்லியம் பேட்டி ஒன்றில் தன்னுடைய கணவர் வில்லியம்ஸ் ஒளிப்பதிவாளராக இருக்கும்போது நடிகர் மம்முட்டிக்கு பல உதவிகள் செய்திருந்தார். ஆனால் தன்னுடைய கணவரின் இறப்பிற்கு கூட மம்முட்டி வரவில்லை. ஒருமுறை என்னை பார்த்து தலைதெறிக்க ஓடிப் போய்விட்டார் என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சீரியல் நடிகை சாந்தி வில்லியம் சீரியல்களில் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளிலும் சாந்தி வில்லியம்ஸ் நடித்திருக்கிறார். சாந்தியின் கணவரான வில்லியம்ஸ் பிரபல ஒளிப்பதிவாளர். இப்போது ஒளிப்பதிவிற்கு பெரிய கிரேன் எல்லாம் வந்திருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் வில்லியம் எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் அதில் ஏறி தலைகீழாக தொங்கியபடி எல்லாம் ஒளிப்பதிவு செய்வாராம்.

actress Shanthi Williams angry to Mammootty did not come even to her husband s death

அதனாலேயே இவருக்கு சினிமாவில் தனி மதிப்பு இருந்திருக்கிறது. ஆனாலும் அவர் சொந்தமாக உருவாக்கிய சில திரைப்படங்கள் தோல்வியடைந்ததால் தன்னுடைய கடைசி காலத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டு தான் இறந்திருக்கிறார். இந்த நிலையில் வில்லியம்ஸின் மனைவியான சாந்தி தற்போது தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள் பற்றி பேசி இருக்கிறார். அதில் எனக்கு நடிகர் மம்முட்டியை கொஞ்சம் கூட பிடிக்காது.

அவரை எல்லோரும் பிடிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் அவரைப் பார்த்தாலே எனக்கு கோபம் தான் வரும். காரணம் மம்முட்டியின் இரண்டாவது படத்தை என்னுடைய கணவர் தான் தயாரித்து இருந்தார். அப்போது என்னுடைய வீட்டிற்கு எப்போதுமே வருவார். என்னுடைய அம்மாவிடம் சேச்சி இன்னைக்கு மீனு உண்டா? என்று கேட்பார். அம்மாவும் மீன், இறால் என்று விதவிதமாக அவருக்கு சாப்பாடு செய்து கொடுப்பார்.

மோகன்லால் வீட்டில் சாப்பிட்டது மட்டுமல்லாமல் பெரிய டிபன் கேரியர் கொண்டு வந்து சாப்பாடு எடுத்துட்டு போவார். மோகன்லால் வைத்து என்னுடைய கணவர் நான்கு படம் தயாரித்து இருந்தார். ஒருமுறை நான் நிறைமாதமாக கர்ப்பமாக இருக்கும் போது அவருக்கு 60 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்று என்னுடைய நகைகளை விற்று கொண்டு போய் கொடுத்தேன். அந்த நேரத்தில் என்னால் நடக்கக்கூட முடியவில்லை.

ஆனாலும் அவருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு நடந்து போய் கொடுத்தேன். ஆனால் அதை எல்லாம் அவர் மறந்துவிட்டார். என்னுடைய கணவர் இறப்பிற்கு கூட மோகன்லால் வரவில்லை. ஒரு முறை ஏர்போர்ட்டில் நான் அவரை பார்த்தும் என்னை பார்த்ததுமே தலைதெறிக்க ஓடி விட்டான்... என்று கடைசியில் ஒருமையில் கோபத்தோடு நடிகை சாந்தி வில்லியம்ஸ் பேசி இருக்கிறார்.

அதோடு என் கணவர் மோகன்லாலுக்கு மட்டுமல்ல மம்முட்டி போன்ற மலையாளத்தில் பிரபலமாக இருக்கும் பல நடிகர்களுக்கு சாப்பாடு போட்டு இருக்கிறார். அதை நான் சொல்லிக் காட்ட வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் யாருமே அவருடைய கஷ்ட காலத்தில் உதவி செய்யவில்லை. அவர் பணம் இருக்கும்போது எல்லோருக்குமே பார்த்து பார்த்து செய்தார். ஆனால் அவரால் வளர்ந்தவர்கள் யாருமே அவரை எட்டி கூட பார்க்கவில்லை.

என்னுடைய கணவரின் ஒளிப்பதிவு திறமையை இப்போதும் திரைத்துறையில் பலரும் பாராட்டுகிறார்கள். ஆனால் அவருடைய கடைசி காலகட்டத்தில் யாருமே அதை சொல்லவே இல்லை என்று சாந்தி வில்லியம்ஸ் தன்னுடைய வருத்தத்தையும் பதிவு செய்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+