சன் டிவி சீரியலில் அறிமுகமாகும் சிறகடிக்க ஆசை நடிகை.. இவருக்கு பதில் இவர்தானா? அப்போ அந்த நடிகை?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர் என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே சன் டிவியில் நடித்து வந்த சீரியல் நடிகை திடீரென்று விலகியிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
பொதுவாக சீரியலில் இவருக்கு பதில் இவர் என்பது புதியதல்ல. சீரியல்கள் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் திடீரென்று சில நடிகர்களால் சீரியலில் நடிக்க முடியாமல் போய்விடுகிறது. ஒரே நேரத்தில் பல சீரியல்களில் நடிப்பது மற்றும் சில குடும்ப பிரச்சனைகள் காரணமாக கூட சில சீரியலில் இருந்து விலகுகிறார்கள்.

புதுவசந்தம் சீரியல்
அந்த வகையில் தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புது வசந்தம் சீரியலில் இருந்து நடிகை ஒருவர் விலகி இருக்கிறார். இந்த சீரியலில் நடிகை வைஷ்ணவி நாயக் கீர்த்தி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அவருக்கு அம்மாவாக ராஜேஸ்வரி ஆக நடிகை சாந்தி வில்லியம்ஸ் நடித்து வந்தார். இவருக்கு பதிலாக தான் இப்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகை அறிமுகம் ஆகி இருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை
சாந்தி வில்லியம்ஸ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தற்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் பிசினஸ் எதிரியாக சிந்தாமணி கேரக்டரில் நடித்து வரும் சுஜாதா தான் புதுவசந்தம் சீரியலில் சாந்தி வில்லியம்ஸ்க்கு பதிலாக ராஜேஸ்வரி கேரக்டரில் அறிமுகமாகி இருக்கிறார்.

மீனாவின் எதிரி
ஏற்கனவே சிறகடிக்க ஆசை சீரியலில் இனி இவரை வைத்துதான் பல சம்பவங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மீனாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக விஜயாவிடம் டான்ஸ் கற்றபடியே மீனா பற்றி இல்லாததும் பொல்லாததுமாக சிந்தாமணி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
மீனாவின் சபதம்
இந்த நிலையில் இப்போதுதான் மீனாவிற்கு சிந்தாமணி தன்னை பழிவாங்க தான் விஜயாவிடம் டான்ஸ் ஸ்கூலில் சேர்ந்திருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது. அதைவிட விஜயா முன்பே சிந்தாமணியிடம் நான் என்னுடைய திறமைகளால் சாதித்து காட்டுவேன் என்று சவால் விட்டு இருக்கிறார். ஆனால் சிந்தாமணி விஜயாவிடம் உங்க மருமகளை பழி வாங்காமல் விடமாட்டேன் என்று சபதம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

இவருக்கு பதில் இவர்
இதனால் விஜயாவின் உதவியோடு மீனாவை பழி வாங்குவதற்காக அடுத்த கட்ட நடவடிக்கைகளை சிந்தாமணி தொடங்குவார் என்று தெரிகிறது. இந்த நிலையில் புதுவசந்தம் சீரியலில் இவருடைய என்ட்ரியால் அந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

நடிகை சுஜாதா
புதுவசந்தம் சீரியல் 500 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்து சாந்தி வில்லியம்ஸ் திடீரென்று விலகி இருப்பது எதற்காக என்ற தகவல் தெரியவில்லை என்றாலும் இனி அந்த கேரக்டருக்கு சுஜாதாவின் நடிப்பு கச்சிதமாக பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications