Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண் முன்னே சொந்த தங்கை இறக்கும்போது நடிகர் விஜய்யின் நிலை.!? மனம் திறந்த சின்னத்திரை நடிகை

நடிகர் விஜய்யின் சகோதரி இறக்கும்போது அவருடைய நிலை குறித்து பாண்டியன் ஸ்டோர் ஷீலா பல தகவல்களை கூறியிருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அம்மா கேரக்டரில் நடிகை ஷீலா நடித்து வந்தார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை ஷீலா நடிகர் விஜய் குறித்து பல தகவல்களை கூறியிருக்கிறார்.

சின்னத்திரை நடிகை ஷீலாவின் அக்கா மகன் தான் நடிகர் விஜய்.

பாண்டியன் ஸ்டோரின் அம்மா

பாண்டியன் ஸ்டோரின் அம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் கண்ணனின் அம்மாவாக நடிகை ஷீலா நடித்து வந்தார். திடீரென இந்த சீரியலில் இவர் இறந்து போவது போன்று கதை வந்ததால் இவர் இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் பற்றி பல தகவல்களை பேசி இருக்கிறார். நடிகை ஷீலா நடிகர் விஜய்யின் அம்மாவின் சகோதரி தான். அதுமட்டுமல்லாமல் நடிகர் ஷீலாவின் மகன் தான் விக்ராந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 சமத்துப் பிள்ளை விஜய்

சமத்துப் பிள்ளை விஜய்

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியில் ஷீலா, விஜய் பிறக்கும்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அவரை நாங்கள் அனைவரும் தான் வளர்ப்போம். எந்த பிரச்சினையும் செய்யாத சமத்துப் பையனாக விஜய் இருப்பார். அப்போது அவருடன் என்னுடைய பெரிய பையன் சஞ்சய் இருப்பார். தற்போது விஜய் பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் அவரைப் பார்த்து பல நாட்கள் ஆகிறது. விஜய் உடன் பேச முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. ஆனால் அவர் பெரிய இடத்தில் இருக்கிறார் என்ற மகிழ்ச்சியும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

தங்கையின் இறப்பு

தங்கையின் இறப்பு

மேலும் நடிகர் விஜய்யின் தங்கை இறக்கும்போது அனைவரும் ஒன்றாகத்தான் இருந்தோம். அந்த காலத்தில் இப்போது உள்ளது போல மருத்துவம் கிடையாது. போராடி பார்த்தார்கள் ஆனால் முடியவில்லை. விஜய் அதற்கு பிறகு மிகவும் சோகமாக ஆகிவிட்டார். அப்போது விஜய்க்கு சிறிய வயதுதான். இந்நிலையில் கூடவே கண்முன்னே இருந்த தன்னுடைய தங்கை நோய்வாய்ப்பட்டு இறந்து போனதே அவரை மிகவும் பாதித்திருந்தது. அதன் பின்னர் தான் விஜய் மிகவும் அமைதியாக மாறிவிட்டார்.

இளமைப் பருவம்

இளமைப் பருவம்

அப்போதெல்லாம் நாங்கள் அக்காவின் வீட்டு பக்கத்தில் தான் இருந்தோம். அங்கே பல படப்பிடிப்புகள் நடக்கும். அங்கே தான் நடிகர் விஜயகாந்தின் பல படங்களில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்திருக்கும். அந்த நேரத்தில் விஜய் பாவலோக உயர்நிலைப் பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தார் விஜய் பள்ளிக்கு சென்று வந்த பின்னர் அங்கிருந்து படப்பிடிப்பை பார்த்து ரசித்துக் கொண்டிருப்போம். தற்போது மிகப்பெரிய உயரத்திற்கு விஜய் சென்று விட்டார் என்பது பெருமையாக இருக்கிறது இன்று இருக்கிறார்.

பாசத்தில் வியப்பு

பாசத்தில் வியப்பு

அதுமட்டுமல்லாமல் விஜய் பற்றி விமர்சனங்கள் வரும்போது எங்களுக்கு கடினமாக இருந்தாலும் பிறகு அவர்களே அழைத்து விஜய்யை பாராட்டினார்கள். தொடக்கத்தில் விஜய் நடிக்க வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் அப்போது அவர் படித்துக் கொண்டிருந்தார். பின்னர் திடீரென சினிமாவுக்கு வந்துவிட்டார். ஆனால் அதற்குப் பிறகு அவர் படத்தில் நடிப்பதையும், நடனம் ஆடுவதையும் பார்த்து நம்முடைய விஜயா இது என்ற அளவிற்கு அவர் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.
இவ்வளவுக்கும் அவர் நடன பயிற்சி கூட சென்றது கிடையாது என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+