4 நாள் முன்னாடியே சொன்னா.. நடிகை ஸ்ருதி கணவர் மறைவு குறித்து பப்லு விளக்கம்.. இதுதான் காரணமா?
சென்னை: சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார்.
இந்த நிலையில் ஸ்ருதிக்கு அதிகமான ரசிகர்களும் பிரபலங்களும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் ஆறுதலோடு கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் பப்லு பிருத்விராஜ் நடிகை ஸ்ருதியின் கணவர் இறப்பு குறித்தும் அதற்கு சில நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பது குறித்தும் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகி பல சீரியல்களில் நடித்திருந்த நடிகை சுருதி சண்முகப்பிரியாவிற்கு கடந்த வருடம் தான் திருமணம் முடிந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவருடைய கணவர் அரவிந்த் திடீரென்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார்.

அதே நேரத்தில் ஸ்ருதியின் கணவர் சிவில் இன்ஜினியராகவும், உடற்பயிற்சி ஆர்வலராகவும் இருந்து வந்த நிலையில் அவருடைய மரணம் குறித்து அதிகமான தகவல்கள் தவறாகவும் பரவி வந்தது. அவர் ஜிம் டிரைனர் என்றும் சொந்தமாக ஜிம் வைத்திருக்கிறார் என்றும் கூறப்பட்டு வந்தது. அதுவெல்லாம் பொய் என்றும் தேவையில்லாத வதந்தியை பரப்பாதீர்கள் என்றும் ஸ்ருதி நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ஸ்ருதியோடு வாணி ராணி சீரியலில் ஒன்றாக நடித்த நடிகர் பப்லு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த வீடியோஸ் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், "ஸ்ருதி என்னுடைய மருமகள்தான். அது வாணி ராணி என்று சீரியலில் பல வருடங்களாக என்னுடைய மருமகளாக நடித்ததால் அப்படியே தான் எங்களுடைய உறவு இருந்தது. இந்த சீரியல் முடிந்து பல வருடங்கள் ஆனாலும் நாங்கள் இப்பவும் நன்றாகத் தான் பழகிக் கொண்டிருக்கிறோம்.

ஸ்ருதி ரொம்ப நல்ல பொண்ணு. அதே போல அவர் கல்யாணம் செய்த அரவிந்தும் நல்ல பையன். அழகாக இருப்பார். உடம்பை நன்றாகவே பராமரிப்பு செய்து வந்தார். நல்ல குணமும் உண்டு. எந்த கெட்ட பழக்கமும் அவருக்கு கிடையாது. அவருடைய குடும்பமும் நல்ல குடும்பம். ஸ்ருதி சந்தோசமாகத்தான் வாழ்ந்து கொண்டு இருந்தாள்.
நாலு நாளைக்கு முன்னாடி கூட நான் ஸ்ருதியிடம் பேசினேன். அப்போது அரவிந்துக்கு உடல்நிலை சரியில்லை என்றாள். என்னவென்று கேட்டதற்கு ஹார்ட்டை சுற்றி ஏதோ லிக்யூட் மாதிரி இருக்குது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். ரெஸ்ட்ல இருக்க சொல்லி இருக்காங்க என்று சொன்னா, என்று அந்த பேட்டியில் பப்லு பேசியிருக்கிறார்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications