ஒன்ஸ்மோர்.. அந்த ஷூட்டிங் பங்களாவில் விழித்த சிம்ரன்.. சிவாஜியின் பொறுமை! வாட்சை கழட்டி வீசிய எஸ்ஏசி
சென்னை: பிரபல நடிகை 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்ததற்கு காரணமே அவரது பங்சுவாலிட்டிதான் என்று கூறியிருக்கிறார் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு.. இதன் பின்னணியில் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம் ஒன்றையும் பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, "90களில் எங்கே திரும்பினாலும் சிம்ரன் பெயர்தான் அடிபடும்.. நீண்ட காலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக இருந்தவர்களில் சிம்ரனும் ஒருவர். சிம்ரன் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர்.. முதலில் இந்திப்பட வாய்ப்புக்காக முயற்சி செய்துள்ளார். ஆனால் கிடைக்கவில்லை.

தொகுப்பாளர்: அதனால், ஹிந்தி தூர்தர்ஷனில் டிவி நிகழ்ச்சியை தொகுத்து சூப்பர் ஹிட் முகப்லா என்ற டாப்-10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரிஷிபாலா என்ற தன்னுடைய பெயரில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதுமே, மிகப்பெரிய வரவேற்பை இந்த நிகழ்ச்சி பெற்றது. பிறகு இந்தி படங்களில் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் படங்கள் எதுவுமே சரியாக போகவில்லை.
வடமாநிலம் என்றாலும், தென்னிந்திய முகம் சிம்ரனுக்கு இருப்பதால், அவரது போட்டோக்கள் தமிழ்ப்பட இயக்குனர்களுக்கு கிடைத்துள்ளது.. அப்படித்தான் ஒன்ஸ்மோர், விஐபி என்று இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் கமிட் ஆனார்.
விஐபி படம்: விஐபி படத்தில் நடிக்கும்போதே, பிரபுதேவா, அப்பாஸ் இருவருமே டாப்பில் இருந்தனர். அதேபோல, ஒன்ஸ்மோர் படத்தில் சிவாஜி, சரோஜாதேவி, விஜய், மணிவண்ணன் என பெரிய ஸ்டார்கள் நடித்திருந்தனர். சிம்ரன் இந்த படங்களில் நடித்ததால், இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது. இதற்கு பிறகு, கன்னடம், தெலுங்கு, தமிழ் என 3 மொழிகளிலும் அதிகமான வாய்ப்புகள் வர துவங்கியது.
சிவாஜி கணேசனை பொறுத்தவரை, ஷூட்டிங்கிற்கு எப்போதுமே சரியான நேரத்தில் வரக்கூடியவர்.. இது சினிமா உலகில் அனைவருக்குமே தெரியும் என்பதால், எந்த படமாக இருந்தாலும், சிவாஜிக்கு முன்பே, அனைத்து நடிகர், நடிகைகளும் செட்டில் ஆஜராகிவிடுவார்கள். ஆனால், ஒருநாள், கீழ்ப்பாக்கம் கார்டனிலுள்ள சிவாஜி கணேசனின் வீட்டில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, சிவாஜி உட்பட அனைவருமே வந்துவிட்டார். ஆனால், சிம்ரன் மட்டும் ஷூட்டிங்குக்கு வரவில்லை.
சிவாஜி கணேசன்: அப்போது சிவாஜி, "யாருப்பா, அது, பாம்பே பொண்ணா? வரட்டும், வரட்டும்" என்றாராம். சிவாஜி இப்படி சொன்னாலும், டைரக்டர் எஸ்ஏசி-க்கு கோபம் அதிகமாகிவிட்டது. கடைசியில் 10.15 மணிக்கு சிம்ரன் வந்ததுமே, தன்னுடைய வாட்சை கழட்டி வீசியெறிந்து எஸ்ஏசி பயங்கரமாக திட்டிவிட்டாராம். இதை சிம்ரன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம்.
அதற்கு பிறகு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டரிடம் சிம்ரன், "நான் பஞ்சாபி பொண்ணு, எனக்கு சிவாஜி கணேசன் பற்றி தெரியாது.. அவரது பெயரை மட்டும் கேள்விப்பட்டிருக்கேன்.. இனிமேல் நேரத்துக்கு சரியாக வருகிறேன்" என்று சொல்லியிருக்கிறார். அத்துடன் சிவாஜி, எஸ்ஏசி உட்பட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.. ஆனால், அடுத்த நாளிலிருந்து ஷூட்டிங்கில் முதல் ஆளாக சிம்ரன் இருந்தார். அதற்கு பிறகு எல்லா படங்களிலும் இந்த நேரத்தை கடைப்பிடித்தார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications