பிரபல நடிகை "ஷோபா”.. பொணத்தை கூட.. அப்போ நடந்தது இதுதான்.. நொந்து போய் கண்கலங்கிய நடிகை பார்வதி
சென்னை: தமிழ் சினிமாவில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை விடவும் அவர்களுக்கு துணையாக நடிக்கும் நடிகர்கள் பல நேரங்களில் ஸ்கோர் அடித்து விடுகிறார்கள்.
அதனாலேயே பல துணை நடிகர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதும் உண்டு. ஒரு சில நடிகர்களுக்கு அந்த மாதிரி வாய்ப்பு கிடைக்காமல் போனதும் உண்டு.

அந்த வகையில் பிளாக் அண்ட் வொயிட் சினிமாவில் தொடங்கி இப்ப வரைக்கும் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கி வரும் நடிகை எஸ் என் பார்வதி தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.
பல திரைப்படங்களில் முன்னணி நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்.என் பார்வதி இப்போது சீரியல்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் "பசி" திரைப்படத்தில் தன்னோடு நடித்த நடிகை ஷோபா பற்றியும் அவருடைய இழப்பால் தான் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டேன் என்பது பற்றியும் உருக்கமாக பேசியிருக்கிறார்.
மனோரமா, வெண்ணிறாடை மூர்த்தி போன்ற பல பிரபலங்கள் பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலகட்டத்தில் தொடங்கி தற்போதைய காலகட்டத்திலும் பல சினிமாக்களில் நடித்திருந்தனர். அந்த வகையில் சினிமாவில் பல காலங்களாக இருந்து வருபவர் தான் எஸ் என் பார்வதி. இவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்பு கிடைத்ததை விடவும் இப்போது அதிகமான வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.
அந்த மாதிரி நேரத்தில் தான் இவருக்கு "பசி" போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்த நடிகை ஷோபாவுடன் நல்ல உறவு கிடைத்து இருக்கிறது. அப்போது ஷோபாவிற்கும் இவருக்கும் இருக்கும் பாசம் திரைத்துறையில் பலருக்கும் தெரிந்ததுதான் என்று எஸ்.என் பார்வதி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூட கூறியிருக்கிறார்.
மேலும் அதில் அவர் பேசுகையில் "ஷோபா" எனக்கு மகள் போன்றவள் தான். நான் தான் அவளுக்கு உணவு கூட ஊட்டி விடுவேன். அந்த அளவிற்கு எங்கள் இருவருக்கும் இடையே பழக்கம் இருந்தது. ஒருநாள் நான் ஏதோ ஒரு படபிடிப்புக்கு சூட்டிங் சென்றிருந்தேன். அப்போ ஷோபா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி எனக்கு வந்தது. ஆனால் அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காரணத்தால் என்னால் அந்த இறப்பிற்கு கூட செல்ல முடியவில்லை.
கடைசி வரை அவருடைய முகத்தை என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது. ஷோபா என்னிடம் மட்டுமல்லாமல் எல்லாரிடமும் அன்பாகத்தான் இருப்பார். ஆனால் எதற்காக அவள் இப்படி ஒரு முடிவை எடுத்தாள் என்பது எனக்கு வேதனையாக இருக்கிறது என்று தன்னுடைய வருத்தத்தை அந்த வீடியோவில் எஸ்.என் பார்வதி பகிர்ந்து இருக்கிறார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications