உட்காருங்க சோனா.. அம்மா எப்படி இருக்காங்க? அதான் சூப்பர் ஸ்டார் ரஜினி.. இமயமலை போய் பாருங்க: பிரபலம்
சென்னை: ரஜினிகாந்த்தை ஷூட்டிங் ஸ்பாட்டில், நான் என் கண்ணாலேயே பார்த்தேன். எல்லாரிடமும் சகஜமாக பேசுவார், சூப்பர் ஸ்டார் என்ற பந்தா, திமிர் அவரிடம் கிடையாது. ஒருமுறை நாம் சொல்லும் விஷயத்தை அப்படியே மனதில் வைத்திருப்பார் என்று நடிகை சோனா சமீபத்தில் புகழ்ந்து பேசியிருந்தார். இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு மீண்டும் நினைவுகூர்ந்துள்ளதுடன், நடிகர் ரஜினி பற்றியும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். AramNaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "குசேலன் படத்தில் ரஜினி நடிக்கும்போது, அவரை உற்றுகவனித்துள்ளார் சோனா..

ரஜினிகாந்த் எளிமை
எல்லாரும் சூப்பர் ஸ்டார் என்கிறார்களே, ஆனால், ரஜினி மிக எளிமையாக இருக்கிறாரே? எல்லாரிடமும் சிரித்து கை குலுக்கி பேசுகிறாரே? என்று இயல்பாகவும், எளிமையாகவும் இருக்கிறாரே? என்று வியந்து பார்த்துள்ளார். ஒருநாள் திடீரென ரஜினிகாந்த், "இங்கே வாங்க சோனா, உட்காருங்க" என்று சொல்லி நாற்காலியில் உட்கார வைத்து கேஷூவலாக பேசியிருக்கிறார்.. அத்துடன், சோனாவின் குடும்பம் குறித்தும் பல்வேறு விஷயங்களையும் விசாரித்துள்ளார் ரஜினி.. சோனாவும், தன்னுடைய குடும்பம், சினிமாவில் நடிக்க வந்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ரஜினியிடம் பகிர்ந்துள்ளார்.
ஹாய் சோனா - எப்படி இருக்கீங்க?
இதற்கு 7, 8 வருஷங்கள் கழித்து, ஏர்போர்ட்டில் யதேச்சையாக சோனாவை சந்தித்துள்ளார் ரஜினிகாந்த்.. ஹாய் சோனா, நல்லாயிருக்கீங்களா? என்று ரஜினி கேட்கவும், சோனாவுக்கு மிகவும் சந்தோஷமாகிவிட்டதாம்.. இவ்வளவு வருடங்களாக தன்னுடைய பெயரை நினைவு வைத்து கூப்பிடுகிறாரே என்று வியந்து நின்றுள்ளார்.. அப்போது ரஜினி, "உங்க அம்மாவுக்கு சர்க்கரை நோயால் காலில் விரல் எடுத்துட்டதாக சொன்னீங்களே, இப்ப எப்படி இருக்காங்க? உங்க தம்பி எப்படி இருக்கார்? என்று கேட்டாராம். சூப்பர் ஸ்டாராக 50 வருடம் மேலாக நிலைத்து நிற்பதற்கு இவையெல்லாம்தான் காரணங்கள் போல என்று சோனா நினைத்து கொண்டாராம்.
இமயமலையில் ரஜினி
ரஜினிகாந்த் இயல்பாகவே நல்ல மனிதன்.. சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தலைக்கேற்றி கொள்வதில்லை.. இமயலைக்கு போனால்கூட, ஒரு காவி துண்டை தலையில் கட்டிக் கொண்டு, எங்கோ ஓரிடத்தில் ரஜினிகாந்த் தூங்கி கொண்டிருப்பார்.. தலையில் கட்டியிருக்கும் துண்டை கழட்டினால்தான், அது ரஜினி என்றே அனைவருக்கும் தெரியும்.. அதுவும் தமிழ்நாட்டு நபர்களாக இருந்தால்தான் அவரை அடையாளம் காண முடியும்.. இல்லாவிட்டால், ரஜினி போலவே யாரோ ஒருவர் இமயமலையில் தூங்குகிறார் என்று நினைத்து கொள்வார்கள்.. 50 வருடமாக எளிமையாக பழகி கொண்டிருக்கும் மனிதர் ரஜினிகாந்த்" என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications