உலகத்துக்கு தான் ரஜினி சூப்பர் ஸ்டார்.. மனசுல அப்படி இல்ல! அவர் செய்த செயல் மறக்க முடியாது! - சோனா
சென்னை: நடிகை சோனா மனதில்பட்டதை எந்த இடத்திலும் வெளிப்படையாக பேசிவிடுவார். அதுபோலத்தான் நடிகர் ரஜினி குறித்து இப்போது அவர் பேசியதை ரஜினியின் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். குசேலன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
நடிகை சோனா பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்தது. கதாநாயகியின் பக்கத்தில் நிற்கும் துணை கேரக்டராக இருந்தாலும் அதிலும் பளிச்சென்று தெரியும் வகையில் இருப்பார். முதல் சில திரைப்படங்களில் ஹோமிலியாக வந்த சோனா அதற்குப் பிறகு கவர்ச்சி கேரக்டரில் நடிக்க தொடங்கி விட்டார்.

சீரியலில் அறிமுகம்
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது சின்னத்திரையிலும் அறிமுகமானார். அதிலும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான அபி டெய்லர் சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான மாரி சீரியலிலும் வில்லியாக நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகிவிட்டார்.
அடுத்ததாக வெப் சீரிஸ்
அதற்கு பிறகு தன்னுடைய பயோபிக்கை வெப் சீரியஸாக எடுத்திருக்கிறார். அது விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அந்த சீரிஸ்க்கான பிரமோஷனில் பிஸியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சோனா நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நடிகர் ரஜினிகாந்த் உலகத்துக்கு தான் சூப்பர் ஸ்டார். ஆனால் நிஜத்தில் அவர் அப்படியெல்லாம் கிடையாது.

திமிரு கிடையாது
அவருடைய மனதில் அந்த சிந்தனையுமே கிடையாது. சூட்டிங் ஸ்பாட்டில் நான் என் கண்ணாலே பார்த்தேன். அங்கு இருப்பவர்கள் எல்லோரிடமும் சகஜமாக பேசிக் கொண்டிருப்பார். சூப்பர் ஸ்டார் என்ற கர்வமும், திமிரும் அவரிடம் கிடையவே செய்யாது. அவரிடம் நாம் ஒரு முறை பேசிவிட்டால் அதை அப்படியே நினைவு வைத்திருப்பார்.
மறக்காத விஷயங்கள்
குசேலன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் அவரிடம் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னுடைய குடும்பத்தை பற்றி நான் பேசிக் கொண்டு இருந்தேன். அதற்குப் பிறகு எட்டு வருடம் கழித்து ஒருமுறை ஏர்போர்ட்டில் பார்த்தேன். அவர் என்னிடம் நான் குசேலன் படத்தில் எந்த இடத்தில் விட்டேனோ அதே விஷயத்தை அப்படியே தொடர்ந்து கேட்டார்.
வியக்க வைத்த ரஜினிகாந்த்
உங்க அம்மா இப்ப எப்படி இருக்கிறாங்க என்று கேட்டார். அம்மாவுக்கு குசேலன் திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது சுகர் பாதிக்கப்பட்டிருந்ததால் கால் விரல்கள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு கொண்டிருந்தது. அது குறித்து கூட அவர் எட்டு வருடம் கழித்து கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ரஜினிகாந்த் செய்த செயல்
அதோடு என் தங்கைகள் தம்பி குறித்து எல்லா விஷயங்களையும் கேட்டுக் கொண்டிருந்தார். நான் இந்த சம்பவத்திற்கு பிறகு இரண்டு மாதமாக எல்லாரிடமும் ரஜினிகாந்த் என்கிட்ட இந்த விஷயத்தையும் மறக்காமல் எட்டு வருஷம் கழிச்சு பேசினாரு என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
ரஜினிகாந்த் பற்றி பெருமை
ஆனால் அதற்கு பிறகு தான் எனக்கே தெரிய வந்தது அவர் என்னிடம் மட்டுமல்ல, அவரிடம் பேசும் எல்லாரிடமும் இப்படித்தான் இருப்பார் என்று... எந்த விஷயம் அவரிடம் பேசினாலும் அதை அவர் மறக்காமல் நினைவில் வைத்திருப்பார் என்று அந்த பேட்டியில் ரஜினிகாந்த் குறித்து சோனா பெருமையாக பேசி இருக்கிறார்.

வடிவேலுக்கு மறுப்பு
இந்த வீடியோக்களை ரஜினிகாந்தின் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அது போல ரஜினிகாந்த் குறித்து இவ்வளவு பெருமையாக பேசிய சோனா இதே குசேலன் திரைப்படத்தில் வடிவேலுவுடன் நடித்த பிறகு நான் அவரோடு நடிக்கவே மாட்டேன் என்று முடிவெடுத்ததாகவும் பேசி இருந்தார். குசேலன் திரைப்படத்திற்கு பிறகு அதிகமான படங்கள் வடிவேலுடன் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது ஆனால் கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் இனி வடிவேலுவடன் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறேன் என சோனா பேசியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications