காரைக்குடி தெப்பக்குளத்துக்கு பக்கத்துல 400 பேர் நின்ற கோலம்!விஷால் தான் அப்படி சொன்னாரு! சோனா ஓபன்
சென்னை: நடிகை சோனா பேட்டியில் கலந்து கொண்ட போது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத பல நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார். அப்போது சிவப்பதிகாரம் திரைப்படத்தில் தான் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடும் போது காரக்குடியில் நடந்த சம்பவம் குறித்து பேசி இருக்கிறார்.
சினிமா துறையில் உள்ளவர்களில் ஒரு சில நடிகர்கள், நடிகைகள் மனதில் பட்டதை டக் என்று பேசி விடுகிறார்கள். அதனால் என்ன பஞ்சாயத்து வந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து போய்விடுவார்கள். அது போல ஒருவர் தான் நடிகை சோனா.

முதல் படம்
சோனா பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு அந்த நேரத்தில் சில திரைப்படங்களில் ஹோம்லியாக நடித்து வந்தார். ஆனால் அதற்குப் பிறகு சில திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிக்க தொடங்கிவிட்டார். அதற்கு பிறகு சோனா என்றாலே கவர்ச்சி நடிகை என்ற ஒரு முத்திரை குத்தப்பட்டு விட்டது.
மன்னார்குடி கலகலக்க
அதுபோல ஒரு சில திரைப்படங்களில் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். அதிலும் குசேலன் திரைப்படத்தில் வடிவேலு மற்றும் சோனா காட்சிகள் பலருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும். இந்த நிலையில் தான் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் திரைப்படத்தில் "மன்னார்குடி கலகலக்க" என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி அனைவரையும் மிரள வைத்திருந்தார்.

தயாரிப்பாளர் அவதாரம்
அந்த பாடல் மூலம் குத்துப்பாடலில் டான்ஸ் ஆட தொடங்கிய சோனாவுக்கு ஒரு சில திரைப்படங்களில் குத்துப்பாட்டு வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் வெங்கட் பிரபுவின் உதவியாளர் இயக்கிய கனிமொழி என்ற திரைப்படத்தின் மூலமாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் நஷ்டத்தை கொடுத்து விட்டது.
சிவப்பதிகாரம் பாடல்
அதற்கு பிறகு தன்னுடைய பயோபிக்கை எடுக்க போகிறேன் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது பேட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் குறித்து அவர் பேசியிருக்கிறார். அதில் சிவப்பதிகாரம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடந்த சம்பவம் ஒன்றை கூறியிருக்கிறார்.

காரைக்குடியில் சூட்டிங்
அதாவது காரைக்குடியில் தெப்பக்குளத்தின் பக்கத்தில் தான் அந்த பாடலுக்கு சூட்டிங் நடைபெற்றதாம். அப்போது இரவு லைட் ஆன் செய்ததும் சோனா அந்த இடத்தில் நிற்கும்போது அங்கே சுற்றி 400 ஆண்கள் இவரையே பார்த்துக்கொண்டு இருந்தார்களாம். அப்போது இவர் என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் யோசித்தாராம். ஆண்கள் எல்லோரும் உற்று தன்னையே பார்த்துக்கொண்டிருந்ததை இவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் டிரஸ்சை பிடித்தபடி கேரவனுக்கு ஓடி சென்றுவிட்டாராம்.
விஷால் கொடுத்த தைரியம்
பிறகு 1:30 மணி நேரமாக நான் ஷூட்டிங் வரவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது விஷால் தான் நான் இருக்கேன் நீங்க வாங்க நான் பார்த்துக்கிறேன் என்று தைரியம் சொல்லி டான்ஸ் ஆட கூட்டிட்டு வந்தாராம். நான் மறைத்துக் கொள்கிறேன் என்று பல இடங்களில் விஷால் நின்று மறைத்து கொண்டே டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தாராம்.

சுற்றி நின்ற கூட்டம்
முதல் நாள் 400 பேர் இருந்தார்களாம். அதை தொடர்ந்து அடுத்த நாள் 800 பேர் வந்தார்களாம், அதற்கு பிறகு ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அங்கு சூட்டிங் பார்க்க வந்து சுற்றி நின்றார்கள். நான் ஒரு இடத்தில் சரிந்து டான்ஸ் ஆடும் போது மொத்த கூட்டமும் சரிந்து பார்க்கும் எனக்கு ரொம்ப தர்ம சங்கடமாக இருந்தது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அங்கிருந்த 1000 பேரும் என்னை தொடாமலேயே பார்வையால் கற்பழித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த மாதிரி தான் அவர்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டு நின்றார்கள் என்று சோனா சிரித்தபடியே சொல்லி இருக்கிறார்.

அஜித்தின் ரசிகை
அதுபோல தான் அறிமுகமான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் அஜித் உடைய நடிப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம் அந்த அளவிற்கு க்யூட்டாக இருக்கும். நான் அஜித்துடைய தீவிரமான ரசிகை. எனக்கு அஜித் தான் க்ரஷ். அந்த படத்தில் காதலை சொல்லவரும் காட்சியில் நான் கதாநாயகி பக்கத்தில் நிற்க வைக்கப்பட்டிருப்பேன். அது சூட்டிங்கிற்காக எடுத்தது அல்ல நான் நிஜத்தில் அப்படித்தான் அந்த நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்தேன். அதைத்தான் அப்படி எடுத்து வைத்திருந்தார்கள் என்று சோனா வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications