முற்றிய சண்டை.. நான் இருக்கணுமா? அவா இருக்கணுமா?மாரி சீரியலை விட்டு வந்த சோனா.. காரணம் இதுதானா?
சென்னை: மாரி சீரியலில் இருந்து நடிகை சோனா சமீபத்தில் விலகி இருந்தார்.
காரணம் அவருடைய மருமகளாக நடித்த நடிகை ஷப்னமோடு ஏற்பட்ட பிரச்சனை தான் என்று தகவல்கள் பரவி வருகிறது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இது ஒரு காதல் கதை கலந்த கடவுள் பக்தி உள்ள திரில்லர் சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் மாமியார் கேரக்டரில் நடிகை சோனா நடித்து வருகிறார். அவர் தான் இந்த சீரியலில் வில்லியாகவும் இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் இந்த சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதற்கு காரணம் அந்த சீரியலில் அவருடைய மருமகளாக அவரை எதிர்த்துப் பேசும் ஹாசினி கேரக்டரில் நடிக்கும் நடிகை ஷப்னம் தான் என்ற தகவல்கள் பரவி வருகிறது. ஷப்னம் ஏற்கனவே தெய்வமகள் சீரியலில் சந்தியாவின் சகோதரியாக நடித்திருப்பார்.
இந்த நிலையில் ஆரம்பத்தில் சோனா மற்றும் ஷப்னம் இருவருக்கும் இடையில் நல்ல ஒரு நட்பு இருந்ததாம். கிடைக்கும் பிரீ டைமில் கூட இருவரும் ஜாலியாக கிண்டல் செய்து கொண்டு கலகலப்பாக பல ரீல்ஸ்களையும் எடுத்துக் கொண்டு இருப்பார்களாம். ஆனால் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது, சீரியலில் ஒரு எபிசோடு படமாக்கப்படும் போது நடந்த இன்சிடெண்ட் தான் என்று சிலர் கூறி வருகிறார்கள்.

ஷப்னம் இயல்பிலேயே ஜாலியான டைப் தானாம். ஷூட்டிங்கில் எப்போதும் அவருக்கு கொடுக்கும் வசனத்தை அப்படியே பேசாமல் டைமில் கிடைக்கும் பஞ்ச் வைத்து அந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி பேசுவது தான் அவருடைய இயல்பாக இருக்கிறதாம். இவர் இதற்கு முன்பு நடித்த சீரியல்களிலும் கூட இதற்கு அனுமதி கொடுத்ததால் இந்த சீரியலிலும் இதுவரைக்கும் யாரும் எதுவும் கண்டு கொண்டது இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் ஒருமுறை சோனா கீழே விழுவது போன்று ஒரு காட்சி இருந்ததாம்.அப்போது அவரை ஷப்னம் தாங்கி பிடிக்க வேண்டும் என்பது போன்று இருந்திருக்கிறது. அப்படி தாங்கி படிக்கும் போது," என்ன அத்தை இந்த கனம் கணக்குறீங்க" என்றும் மேலும் சில வார்த்தைகளையும் ஷப்னம் பயன்படுத்தியதாகவும் அதனால் சோனா கோபம் அடைந்ததாகவும் அதற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் பேச்சுவார்த்தை நின்று போனதாகவும் கூறப்படுகிறது.

சீரியல் சூட்டிங் ஸ்பாட்டிலும் கூட இவர்கள் இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் குற்றம் சுமத்திக் கொள்வதும் சாடைமாடையாக பேசுவதும் தொடர்ந்து கொண்டிருந்தது என்றும் அதனாலேயே இவர்களுக்கு பிரச்சனை நீண்டு கொண்டே இருந்தது என்றும், நான் ஷப்னம் கூட நடிக்க மாட்டேன் என்று யூனிட்டில் சோனா கூறியதாகவும் சிலர் கூறுகின்றனர்.
சேனல் தரப்பில் இருந்தும் இவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் அதற்கு இருவரும் ஒற்றுமையாக சம்மதிக்கவில்லை என்றும் அதனால் முதலில் ஷப்னம் சீரியலை விட்டு விலகப் போகிறேன் என்று கூறி இரண்டு நாட்கள் சீரியல் ஷூட்டிங் வரவில்லை என்றும் பிறகு சேனல் தரப்பில் இருந்து அவரிடம் பேசிய பிறகு அவர் கலந்து கொண்டதாகவும் ஆனால் சோனா தான் இந்த சீரியலில் இருந்து விலகி விடுகிறேன் என்று கூறிவிட்டார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications