மாதவிடாய் காலத்தில் நடந்த சம்பவம்.. எதற்காக தயக்கம்? நச்சுனு கேள்வி கேட்ட நடிகை ஸ்ரீ லீலா
சென்னை: நடிகை ஸ்ரீலீலா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் மாதவிடாய் குறித்து பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக பலரும் வெளிப்படையாக பேசத் தயங்கும் இந்த விஷயத்தை, மிகவும் நேர்மையாகவும் தெளிவாகவும் அவர் பகிர்ந்திருப்பது பலரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.

நடிகை ஸ்ரீ லீலா பேச்சு
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "மாதவிடாய் பெண்களான நமக்கு ஒரு பிரச்சனையாக இருக்கக் கூடாது" என்று தொடங்கி, தனது சொந்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். மாதவிடாய் காலத்திலேயே பல பாடல்களுக்கு டான்ஸ் ஆடியதாகவும், அந்த பாடல்கள் பெரிய வெற்றி பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் உடல்நிலை காரணமாக பெண்கள் தங்கள் திறமையை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்பதை வலியுறுத்தினார்.
மாதவிடாய் பற்றி விளக்கம்
மேலும், சமத்துவம் குறித்து நாம் பேசும் நிலையில், மாதவிடாயை ஒரு தடையாகவே பார்க்கும் மனநிலையை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்றும் பெண்கள் தங்களுக்குள் இருக்கும் மனத் தடைகளை தாங்களே உருவாக்கிக் கொள்ளக் கூடாது, அதை காரணம் காட்டி பின்தங்காமல் முன்னேற வேண்டும் என்ற செய்தியையும் அவர் கூறியுள்ளார்.
இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. "பலர் பேசாத விஷயத்தை இப்படி ஓபனாக பேசினார்" என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
ஸ்ரீ லீலா யார்?
ஸ்ரீலீலா தென்னிந்திய திரையுலகில் வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகைகளில் ஒருவர். பெங்களூரில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே பாரம்பரிய நடனத்தில் தேர்ச்சி பெற்றவர். குறிப்பாக பாரதநாட்டியம் மீது தான் இவருக்கு ரொம்ப விருப்பமாம்.
கன்னட திரைப்படமான Kiss மூலம் அறிமுகமான அவர், அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு சினிமாவில் மிகவும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார். கொஞ்ச காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
தனி ஸ்டைல்
ஸ்ரீலீலாவின் முக்கிய பலம் அவரது எனர்ஜியான டான்ஸ் தான். பாடல் காட்சிகளில் அவர் காட்டும் வேகம் மற்றும் எக்ஸ்பிரஷன் ரசிகர்களிடம் தனி இடத்தை உருவாக்கியுள்ளது. பல ஹிட் பாடல்களில் அவர் நடனமாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அவரது முந்தைய பேட்டிகளிலும், "நான் எந்த சூழ்நிலையிலும் என் நடிப்பை நிறுத்த மாட்டேன். சவால்கள் இருந்தாலும் அதை சமாளித்து முன்னேறுவேன்" என்று கூறியுள்ளார். அதே மனநிலையே தற்போது மாதவிடாய் குறித்து அவர் பேசிய கருத்துகளிலும் தெளிவாக தெரிகிறது.
சமூக பார்வையில் முக்கியமான குரல்
மாதவிடாய் குறித்து சமூகத்தில் இன்னும் பல தடைகள், தயக்கங்கள் இருக்கும் நிலையில், இளம் தலைமுறையைச் சேர்ந்த நடிகை ஒருவர் இதை ஓபன் ஆக பேசுவது முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பெண்கள் தங்களை தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளாமல், தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்ற அவரது கருத்து பலரிடமும் ஒத்துப்போகிறது.
மொத்தத்தில்... ஸ்ரீலீலா கூறிய இந்த கருத்து ஒரு சாதாரண பேச்சு அல்ல. பெண்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் வந்த ஒரு தெளிவான கருத்தாகவே இது பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications