கமலுக்காக தான் அந்த முடிவு எடுத்தேன்.. எங்கள் பிரிவு விதி அல்ல..! ட்ரெண்டாகும் ஸ்ரீவித்யாவின் பேட்டி
சென்னை: நடிகர் கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு டிடி வித் காபி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தான் ஸ்ரீ வித்யாவை காதலித்தேன் ஆனால் சில காரணங்களால் பிரிந்து விட்டோம். ஆனால் அந்த காதல் என்றும் மாறாது என்று உருக்கமாக பேசியிருந்தார். இது பெரிய அளவில் வைரல் ஆனது. அதுபோல கமல்ஹாசன் குறித்து நடிகை ஸ்ரீவித்யா பேசிய பழைய பேட்டி ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு சில நடிகைகளை பார்க்கும்போது ஏதோ பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு தாக்கம் வரும். அதுபோல ஒருவர் தான் நடிகை ஸ்ரீவித்யா. அவர் சினிமாவில் கதாநாயகியாகவும், குணசித்திர நடிகையாகவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் கதாநாயகி என்ற வேடத்தை விடவும் குணசித்திர நடிகையாக தான் பலருக்கும் அவர் பிரபலம்.

எத்தனையோ திரைப்படங்களில் பலருடைய மனதை கவர்ந்த ஸ்ரீவித்யா அவருடைய நிஜ வாழ்க்கையில் பட்ட வேதனை யாரும் பட்டிருக்க முடியாது. அதே நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று அவருடன் நெருங்கி பழகிய பலரும் பேசி இருக்கிறார்கள். ஸ்ரீவித்யா தமிழில் மட்டுமல்லாமல் கேரளத்திலும் ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் 14 படங்கள் என்ற விகிதத்தில் நடித்து முன்னணி நடிகையாக இருந்திருக்கிறார்.
ஸ்ரீவித்யாவிற்கு ஒரே ஒரு அண்ணன் மட்டும் தான். அவருடைய அம்மா பாடகி என்பதால் ஸ்ரீவித்யா சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதுபோல ஸ்ரீவித்யா அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது கமலுடன் ஏற்பட்ட நட்பு பிறகு காதலாக மாறிய விஷயம் சினிமா துறையில் பலருக்கும் தெரிந்திருக்கும்.
அந்த நேரத்தில் இரு வீட்டாருக்கும் இவர்களுடைய காதல் விஷயம் தெரியவந்த போது ஸ்ரீவித்யாவின் அம்மா கமல்ஹாசனை நேரடியாக அழைத்து திருமணத்திற்கு சம்மதிக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் அதனால் கமல் ஸ்ரீவித்யாவை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு விட்டார் என்று ஸ்ரீவித்யாவின் நண்பர்கள் கூறி இருக்கிறார்கள்.

அதுபோல கமல் திருமணம் செய்த பிறகு சில ஆண்டுகள் தனிமையில் இருந்த ஸ்ரீவித்யா அதற்கு பிறகு மலையாள ப்ரொடியூசரான சார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தாராம். அந்த திருமணத்திற்காக ஸ்ரீவித்யா மதம் மாறி திருமணம் செய்து கொண்டது அவருடைய குடும்பத்திற்கு பிடிக்கவில்லை ஆனாலும் ஆரம்பத்தில் இனிமையாக தொடங்கிய அவருடைய வாழ்க்கை பிறகு ஜார்ஜ் சுயரூபம் தெரிந்து பிறகு பல முறை ஸ்ரீ வித்யா தற்கொலைக்கு முயன்று இருந்தாராம்.
ஸ்ரீவித்யா என் காதலி தான்.. கல்யாணம் பண்ண முடியாம போனது இதனால் தான்.. வெளிப்படையாக பேசிய கமல்ஹாசன்
அதுபோல ஸ்ரீவித்யாவின் கடைசி காலம் மிகவும் வேதனை நிறைந்ததாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் பேசிய பழைய பேட்டி ஒன்று ட்ரெண்டானது. அதில் ஸ்ரீவித்யா உங்களுக்கு தோழியா என்று கேட்க, அதற்கு கமல்ஹாசன் எனக்கு அவங்க தோழி மட்டுமல்ல எனக்கு காதலியும் தான். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. நான் 19 வயதில் அபூர்வராகங்கள் திரைப்படத்தில் நடித்தேன். அப்போ அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது நான் திறமையானவன் என்பதை எனக்கு உணர்த்தியது ஸ்ரீவித்யா தான். அந்த படம் மூலமாக எங்களுக்குள் ஏற்பட்ட காதல் கடைசி வரைக்கும் இருந்தது. அது கல்யாணத்தில் முடிய வேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை என்று சொல்லி இருப்பார்.
அதுபோல ஸ்ரீவித்யா இறப்பதற்கு முன்பு மலையாள சேனல் ஒன்றில் பேசிய பேட்டி இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அதில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்கும் போது நடந்த நிகழ்வுகள் குறித்து ஸ்ரீவித்யா பேசியிருக்கிறார். அப்போது எனக்கு 22 வயது தான் ஆனது ஆனால் நான் அந்த படத்தில் 45 வயது உள்ள கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தேன் என்று ஸ்ரீவித்யா சொல்ல,
அதற்கு தொகுப்பாளர் நீங்க அந்த படத்தில் எதற்காக நடிக்க சம்மதம் சொன்னீங்க கமல்ஹாசனுக்காகவா என்று கேட்க, ஆமாம் அப்படியும் கூட இருக்கலாம். அதுவும் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று ஸ்ரீவித்யா சொல்கிறார். பிறகு நீங்கள் இருவரும் எதற்காக பிரிந்தீர்கள் என்று கேட்க, அதற்கு ஸ்ரீவித்யாவோடு இருந்த ஒரு பெண் இவர்கள் இருவருக்கும் அன்பு இயற்கையானது.
யாருடைய ஊந்துதலாலும் அது உருவாகவில்லை. அதே நேரத்தில் விதியால் இவர்கள் பிரிந்து இருக்கலாம் என்று சொல்ல அதற்கு ஸ்ரீவித்யா கண்டிப்பாக இல்லை. நாங்கள் இருவரும் மனப்பூர்வமாக பேசி தான் பிரிந்தோம். எங்களுக்கு அந்த நேரத்தில் கடமைகளும் இருந்தது. அதுபோல நானும் கமலும் சினிமா வாழ்க்கையில் அடி எடுத்து வைத்திருந்த நேரம். அதனால் இருவரும் புரிந்து கொண்டு தான் பிரிந்தோம் என்று அந்த பேட்டியில் ஸ்ரீ வித்யா உருக்கமாக பேசியிருக்கிறார்.
தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதுபோல ஸ்ரீவித்யாவின் கடைசி காலத்தில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமாக இருந்த சமயத்தில் சினிமா துறையில் யாரையும் சந்திக்க விரும்பவில்லை, கமல்ஹாசனை மட்டுமே ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் அதற்காக கமல்ஹாசன் ஸ்ரீவித்யாவை கேரளத்தில் சென்று நேரில் பார்த்துவிட்டு வந்தார் என்று ஒரு பேட்டியில் நடிகரும் இயக்குனரும், கமல்ஹாசனின் நண்பருமான சந்தான பாரதி கூறி இருந்தார். அதுபோல ஸ்ரீவித்யா கடந்த 2006 ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி மரணம் அடைந்திருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications