புது சீரியலில் கதாநாயகியான பாக்கியலட்சுமி நடிகை.. அவரே வெளியிட்ட திடீர் பதிவு.. குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சுசித்ரா வெளியிட்ட பதிவு இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது. சுசித்ரா புதியதாக வேறு ஒரு சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலில் கமிட் ஆகி இருக்கிறார். அதற்குரிய அதிகாரம் பூர்வமான ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது.
ஒரு சில சீரியல்கள் மட்டும் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல வருடங்களை கடந்து விடுகிறது. சில சீரியல்கள் தொடங்கிய வேகத்தில் வேகமாக முடிவு அடைந்து விடுகிறது. அந்த வகையில் நான்கு வருடங்களுக்கு மேலாக விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் குடும்ப தலைவி ஒருவரின் சோகம் மற்றும் சந்தோஷம் கதையாக சொல்லப்படுகிறது. இதில் பாக்யா என்ற கேரக்டரில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். அவருடைய கணவராக கோபி என்று கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார். சுசித்ரா ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக சைவம் திரைப்படத்தில் நடித்திருப்பார்.
அதற்கு பிறகு தான் இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நான்கு வருடங்களாக சின்னத்திரை ரசிகர்களின் வீட்டில் பாக்கியாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியல் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதற்கு தகுந்தது போல தான் சீரியலில் கதையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரைக்கும் பாக்யாவிற்கு தொல்லையாக இருந்த கோபி இப்போது மனம் மாறி இருக்கிறார். அதுபோல பாக்கியா தன்னுடைய இரண்டு மகன்களையும் அவர்களுடைய சந்தோஷம் மற்றும் விருப்பத்திற்கு தகுந்தபடி வாழ்க்கையை வாழ பழக்கப்படுத்தி இருக்கிறார்.
இதுவரைக்கும் மாமியார் மற்றும் குடும்பத்திற்கு அடிமையாக இருந்த பாக்கியா இப்போது பல இடங்களில் மாமியாரின் தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறார். அதுபோல் பாக்கியா மற்றும் கோபிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்காக ஈஸ்வரியும் முடிவு செய்து அதற்காக பிளான் போட்டு இருக்கிறார்.
ஆனால் இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன், அம்மா இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் நான் அவருக்கு முன் நின்று வேறு ஒருவரை திருமணம் செய்து வைப்பேன் ஆனால் மீண்டும் அதே ஆளோடு (கோபியோடு) திருமணம் செய்து வைக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அதுபோல இனியா பாக்கியா வீட்டில் வேலை செய்யும் செல்வியின் மகனை காதலிக்கிறார். இனி ஒரு சில மாதங்கள் இந்த காதல் பஞ்சாயத்து வைத்தே கதை நகரும் அதற்கு பிறகு பாக்யாவின் திருமணத்தோடு இந்த சீரியல் முடிவடைகிறதா? அல்லது இனியாவின் திருமணத்தோடு முடிவடைகிறதா? எனபதுதான் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எது எப்படியோ இப்போது இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பலர் வேற சேனலுக்கும் புது சீரியலுக்கும் மாறிவிட்டார்கள். இந்த சீரியலில் ராதிகாவாக நடித்துக் கொண்டிருக்கும் ரேஷ்மா ஏற்கனவே ஜீ தமிழில் பல சீரியல்களில் நடித்து வருகிறார். அதுபோல ஈஸ்வரியாக நடித்துக் கொண்டிருக்கும் ராஜலட்சுமி சன் டிவியில் அன்னம் சீரியலில் கமிட்டாகி இருக்கிறார்.

செழியன் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகரும் ஜீ தமிழில் அண்ணா சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். அதுபோல இனியாவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகையும் சன் டிவியில் லட்சுமி சீரியலில் லட்சுமியின் சகோதரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த வரிசையில் மயூவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகையையும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2 சீரியலில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
இப்படி பலர் இந்த சீரியலில் இருந்து வேற சீரியலுக்கு மாறிக்கொண்டிருக்கும் நிலையில் சுசித்ராவும் புது சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். அதாவது கன்னட சீரியலில் தான் சுசித்ரா கமிட் ஆகி இருக்கிறார். சன் நெட்வொர்க்கின் கன்னட சேனலான உதயா டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சிந்து பைரவி என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் சுசித்ரா நடிக்கிறார்.

தமிழில் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ஆடுகளம் என்ற சீரியலின் கன்னட ரீமேக் தான் சிந்து பைரவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் காஸ்ட்யூமில் சுசித்ரா ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில், "நம் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் அழிக்க வருவதில்லை. மாறாக நம் மறைந்திருக்கும் திறனை உணர உதவுவதற்காக வருகிறது" கடவுளின் நாள்.. என்று பகிர்ந்து இருக்கிறார்.

-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications