அட பாவமே! நடிகை சுஹாசினிக்கு இப்படி ஒரு நோயா? இத்தனை நாளா மறைத்து வைத்த ரகசியம்! அவரே உடைத்த உண்மை
சென்னை: நடிகை சுஹாசினி 80ஸ் காலகட்டத்தில் இருந்து இப்போ வரைக்கும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தனக்கு காச நோய் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதற்குப் பிறகு தான் எப்படி அதிலிருந்து மீண்டு வந்தேன் என்பது குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளை பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்று இருப்பார்கள். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடுவார்கள் அது போல ஒருவர் தான் நடிகை சுஹாசினி. சுஹாசினி நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் மகள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அதுபோல இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி தான். சினிமா பின்புலம் பெரியதாக இருந்தாலும் சுஹாசினி நடித்த திரைப்படங்களில் அதிகமாக கவர்ச்சி காட்டியது கிடையாது. அதனாலேயே சினிமாவில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆறு வயதில் காச நோய்
அதுபோல கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லியாகவும், சைக்கோ கேரக்டரிலும் நடித்து பலரையும் மிரள வைத்த சுஹாசினி சொன்ன விஷயம் தான் இப்போது இணையத்தில் அதிகமான பேசப்பட்டு வருகிறது. அதாவது சுஹாசினிக்கு ஆறு வயதில் இருக்கும் போதே காச நோய் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு சிகிச்சை எடுத்து அது சின்ன வயதிலேயே சரியாகி இருக்கிறது.
காச நோய் பிரச்சனை
அதோடு இந்த பிரச்சனை முடிந்துவிட்டது என்று இவரும் இவருடைய குடும்பத்தினரும் நினைத்து இருக்கிறார்கள். ஆனால் அது அவருக்கு 36 வயதில் மீண்டும் பிரச்சனையை கொடுத்திருக்கிறது. மீண்டும் இவருக்கு காச நோய் வந்ததால் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார். அதனால் அவருடைய உடல் எடை அதிகரித்து காதும் சரியாக கேட்காமல் போயிருக்கிறது.

பலருக்கும் விழிப்புணர்வு
அதற்குப் பிறகு ஆறு மாதங்கள் தீவிர சிகிச்சை எடுத்த பிறகு காச நோயின் தாக்கத்திலிருந்து இவர் வெளியே வந்திருக்கிறார். அந்த நேரத்தில் இதை வெளியே சொன்னால் கவுரவ குறைச்சல் என்று இந்த நோய் குறித்து வெளியே சொல்லாமலேயே மறைத்திருந்திருக்கிறார். ஆனால் இப்போது தான் செய்தது தவறு என்று புரிந்து கொண்டதாகவும் இது பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்று தான் இப்போது வெளிப்படையாக பேச தொடங்கி இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
தைரியமான போராட்டம்
ஒரு நோயின் தாக்கம் இருக்கிறது என்றால் அதற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நோய் வந்துவிட்டது என்று யாரும் மனதுடைந்து வெட்கப்பட்டு இருந்து விடக்கூடாது அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். அது நம்மையும் நம்முடைய குடும்பத்தையும் கஷ்டப்படுத்தாத வகையில் அதிலிருந்து வெளிவருவதற்கான வழிமுறைகளை பார்க்க வேண்டும் என்று சுஹாசினி கூறி இருக்கிறார்.

சுஹாசினியின் மகன்
அதுபோல சுஹாசினி நடிகையாக மட்டுமல்லாமல் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திரா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகவும் மாறியிருக்கிறார். அதுபோல் தன்னுடைய கணவரின் மெட்ராஸ் டாக்கிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவராகவும் இருக்கிறார். சுஹாசினி மணிரத்தினம் தம்பதிக்கு நந்தன் என்ற ஒரு மகன் இருக்கிறார்.
மகன் விருப்பம்
சுஹாசினியும் மணிரத்தினமும் திரை உலகை சார்ந்தவர்கள் என்றாலும் இவருடைய மகன் திரை உலகின் வெளிச்சம் படாமல் ஒதுங்கி இருக்கிறார். அதுபோல இவரிடம் உங்களுடைய மகன் எதிர்காலத்தில் இயக்குனராகவோ அல்லது நடிகராகவோ வர வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு கூட அது அவருடைய விருப்பம் தான். அதில் எங்களுடைய தலையீடு இருக்காது என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications