கன்னியாகுமரி கடலில் ரஜினி உயிருக்கு போராடினாரு.. இப்போ மறுபிறப்பு.. நடிகை சுமித்ரா உடைத்த ரகசியம்
சென்னை: நடிகை சுமித்ரா சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் பற்றி பேசுகையில், நடிகர் ரஜினிகாந்துக்கு கன்னியாகுமரி கடலில் நடந்த விபத்து குறித்து அதிர்ச்சியோடு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். "புவனா ஒரு கேள்விக்குறி" என்ற திரைப்படத்தில் தான் நடிக்கும் போது சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ரஜினிகாந்துக்கு பெரிய விபத்து ஏற்பட்டது, அதில் அவர் பிழைத்ததே பெருசு என்று கூறி இருக்கிறார்.
பொதுவாக ஒரு திரைப்படத்தை பார்த்ததும் நாம் இது நன்றாக இருக்கிறது நன்றாக இல்லை என்று கதையை வைத்து முடிவு செய்கிறோம். ஒரு சிலருடைய நடிப்பு எதார்த்தமாக இருக்கும். ஆனால் அந்த எதார்த்தத்தை கொண்டு வருவதற்காக அவர்கள் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்கிறார்கள். அந்த மாதிரி தான் நடிகர் ரஜினிகாந்த் உயிரை பணயம் வைத்து நடித்த காட்சி குறித்து நடிகை சுமித்ரா பகிர்ந்திருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.

நடிகை சுமித்ரா ரஜினிகாந்த் உட்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். பிறகு அவருக்கே அம்மாவாகவும் நடித்திருந்தார். பணக்காரன் படத்தில் ரஜினிகாந்தின் அம்மாவாக சுமித்ரா தான் நடித்திருப்பார். ஆனால் அவருக்கு ஜோடியாக புவனா ஒரு கேள்விக்குறி என்ற திரைப்படத்தில் சுமித்ரா நடித்திருக்கிறார்.
அப்போது நடந்த மறக்க முடியாத நினைவுகள் குறித்து அவர் பேசுகையில், புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படத்தில் ஒரு காட்சி கன்னியாகுமரி கடலில் வைத்து எடுக்கப்பட்டது. அந்த படத்தில் ரஜினிகாந்த்தும் சிவகுமாரும் அந்த படத்தில் நண்பர்களாக இருப்பார்கள். ரஜினிகாந்தின் காதலி ஒரு விபத்தில் இறந்து போய்விடுவார்.

சிவக்குமார் என்னை காதலிப்பது போல ஏமாற்றி கர்ப்பமாக்கி விடுவார். பிறகு பணத்திற்காக இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய போவார். அதனால் புவனாவின் வயிற்றில் இருக்கும் குழந்தையை புவனா அழிக்க மாட்டேன் என்று சொல்கிறாள் என்ன செய்ய என்று இருவரும் விவாதித்து கொண்டிருப்பது போன்று காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சி கன்னியாகுமரி ஒரு பாறையில் வைத்து சூட் செய்யப்பட்டது.

அந்த நேரத்தில் திடீரென்று ஒரு பெரிய அலை வந்தது, கேமரா மேன், நடிகர் சிவகுமார் ரஜினிகாந்த் எல்லோரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு விட்டார்கள். அப்போது அங்கிருந்த பலருக்கு நீச்சல் தெரிந்ததால் அவர்கள் நீச்சல் அடித்து வெளியே வந்து விட்டார்கள். அந்த நேரத்தில் ரஜினிகாந்துக்கு நீச்சல் தெரியாது. அவர் கடலுக்குள் சிக்கிக் கொண்டார்.
சிவக்குமார் உட்பட எல்லோரும் வெளியே வந்ததும் ரஜினிகாந்தை தேடி பார்த்தார்கள். ரஜினியை காணவில்லை என்று எல்லோரும் கடலுக்குள் தேடலாம் என்று போட் உதவியுடன் முயற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது ரொம்ப தூரத்தில் ஒரு தலைமுடி மட்டும் மேலே தெரிந்தது. பிறகு அங்கிருந்தவர்கள் போட்டில் சென்று ரஜினியின் தலைமுடியை பிடித்து வெளியே இழுத்து வந்தார்கள். அவர் மயக்கத்தில் தான் இருந்தார்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ரஜினி அந்த நேரத்தில் பிழைப்பாரா? இல்லையா? என்ற ஒரு பயம் எல்லோருக்கும் இருந்தது. அவர் இப்போது இவ்வளவு நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது அவருடைய மறுபிறப்பு தான். அவருடைய மறுபிறவில்தான் இப்போது அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ரஜினிகாந்துக்கு நடந்த இந்த விபத்து அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது என்று அந்த பேட்டியில் சுமித்ரா பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications