விஜய் டிவி சீரியல் வில்லி நடிகைக்கு எளிமையான எங்கேஜ்மென்ட்.. எமோஷனலாக வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா சீரியலில் மேக்னா கேரக்டரில் நடித்த நடிகை சூர்யா சுரேந்தருக்கு எளிமையாக எங்கேஜ்மென்ட் நடைபெற்றிருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்களை சூர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செல்லமா சீரியலில் நடித்த அன்ஷிதா பெரிய அளவில் பிரபலம் அடைந்திருக்கிறார். அந்த சீரியலில் அவரோடு நடித்த அர்னவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவர்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் தெரியாதது போலவே ஆரம்பத்தில் நடந்து கொண்டனர். இது குறித்த விமர்சனங்கள் அதிகமாக எழுந்தது.

vijay tv

ஆனாலும் பிக்பாஸ் வீட்டிற்குள் நாங்கள் நண்பர்களாக செல்லவில்லை‌ போட்டியாளர்களாக தான் சென்றோம் அதனால் தான் நாங்கள் அப்படி நடந்து கொண்டோம் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ஷனாகி வெளியே வந்து அன்ஷிதா விளக்கம் கொடுத்திருந்தார்.

அதுபோல செல்லம்மா சீரியலில் அன்ஷிதாவிற்கு வில்லியாக நடித்தவர்தான் நடிகை சூர்யா சுரேந்தர். இவர் ஏற்கனவே ஒரு சில சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் இவருக்கு பிரபலம் கிடைத்தது செல்லம்மா சீரியல் தான். செல்லம்மா சீரியலில் நடிக்கும்போது அன்ஷிதா, சூர்யா சுரேந்தர், அர்னவ் மூன்று பேரும் அதிகமான ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து வெளியிடுவார்கள்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சூர்யா போட்டோ சூட் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவருக்கு எங்கேஜ்மென்ட் நடைபெற்றிருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்களை இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

vijay tv

அதோடு கடந்த ஆண்டு இதே நாளில் சந்தித்த இரண்டு பெரியவர்கள் சரியான நேரம், தேதி எதையும் தேர்ந்தெடுக்கவில்லை. ஏனென்றால் எங்களை பொறுத்தவரையில் பயமுறுத்தும் நாட்களை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்குள் ஒரு அன்பு மற்றும் நம்பிக்கை இயல்பாக உருவாக வேண்டும் என்று நினைத்தோம்.

இந்த ஒரு வருட காலத்தில் எங்களுக்குள் பல வாக்குவாதங்கள் வந்தது. ஆனாலும் சில நிமிடங்கள் மட்டும்தான் அது இருந்தது. எங்களுக்குள் ஏதோ இருக்கிறது என்ற ஒரு தீப்பொறியை இருவரும் உணர்ந்த தருணமும் வந்துவிட்டது. அதுதான் நாங்கள் இருவரும் அடுத்த கட்டத்திற்கு போகலாம் என்று யோசித்த தருணம்.

vijay tv

வாழ்க்கையில் புதிய நம்பிக்கையுடன் நிரப்பப்பட்ட பயணம் ஆக உணர தொடங்கினோம். காபி கடை விவாதங்கள் இரவு உணவாக மாறியது. இரவு உணவு தேதிகள் வார இறுதி விடுமுறையாக மாறியது. விடுமுறையில் காடுகளில் உள்ள மலை ஏற்றத்திற்கு பயணம் செய்யத் தொடங்கினோம்.

கடந்த சில தினத்தை விட ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாக இருந்தது. அது மிகவும் முக்கியமான விஷயம். யாரிடம் நாம் எந்த முகமூடியும் இல்லாமல், பாசாங்கு இல்லாமல் நம்மை முழுமையாக வெளிப்படுத்த முடிகிறதோ அவர்களோடு நம்முடைய வாழ்க்கையை தொடரலாம் என்ற ஒரு எண்ணம் வந்திருக்கிறது.

vijay tv

நம்மை சுற்றி வசதியாகவோ, மகிழ்ச்சியாகவோ இருக்கலாம் ஆனால் நாம் சோகமாக டவுன் ஆகும் போது அதிலிருந்து மீட்டு கொண்டு வரும் உறவு நம்முடைய பொக்கிஷம். இந்த ஒரு வருடத்தில் எங்கள் உறவில் ஒருவர் முதிர்ச்சி அடைந்தார்களா? என்பது எங்களுக்கு இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் இன்று கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நாங்கள் இருவரும் உறுதியாக இருக்கிறோம்.

எவ்வளவு குழப்பத்தனமாகவோ பைத்தியக்காரனாகவோ அல்லது அபத்தமாக இருந்தாலும் நம் வழியில் வரும் அனைத்தையும் ஏற்றுக் கொள்வோம் என்ற வாக்குறுதிதான். வாழ்க்கையில் எல்லாவற்றையும் உடன்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

vijay tv

கற்றது, கற்காதது மற்றும் சில சமயங்களில் நாம் செய்யும் புது விஷயங்களிலும் சரியாக வேடிக்கை உள்ளது. எங்கள் இருவருக்கும் புரிதலும் நம்பிக்கையும் உண்டாகி இருக்கிறது. நாங்கள் இனி அடுத்த கட்டத்திற்கு இணைந்து பயணிக்கிறோம் என்று அந்த பதிவில் சூர்யா சுரேந்தர் கூறியிருக்கிறார். இவருக்கு ரோஹித் என்பவரோடு எங்கேஜ்மென்ட் நடைபெற்றிருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்களை சூர்யா பகிர்ந்து இருக்கும் நிலையில் இவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+