ஒரே ஒரு டயலாக்கில் "மைனா" நடிகை காலி.. எப்ப வறீங்க? கஞ்சா போட்டுனு நடிப்பீங்களா? நொந்த சூசன் ஜார்ஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் படங்களில் நடக்கும் கேரக்டரை, கேரக்டராக மட்டுமே பார்க்காமல், அதனை நிஜ வாழ்க்கையுடன் பொருத்தி பார்ப்பது என்பது மிகவும் வருத்தத்துக்குரிய ஒன்று என்று மைனா புகழ் நடிகை சூசன் ஜார்ஜ் ஒருமுறை வருத்தத்துடன் கூறியிருந்தார்.. இதுகுறித்துதான், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.. சூசன் ஜார்ஜ் அன்று சொல்லியிருந்த கருத்தானது, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் பெண்களுக்கான பதிலாகவே இருந்தது என்றும் பாலு தெரிவித்துள்ளார்.

Cheyyaru balu என்ற தன்னுடைய சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "ஓரிரு படத்திலேயே சில நடிகைகள் காணாமல் போய்விடுவார்கள்.. அப்படி காணாமல் போனவர்தான் சூசன் ஜார்ஜ்.. இவர் மைனா படத்தில் நடித்திருப்பார்.. 'எப்போ வர்றீங்க' என்று டார்ச்சர் செய்யும் கேரக்டரில் பிரம்மாதமாக நடித்திருப்பார்.

Television Actress Suzane George mynaa

படம் பார்க்கும் நமக்கே கோபத்தை தந்துவிடும்.. யாரிந்த பெண் என்று அனைவருக்கும் கேட்கக்கூடிய நடிப்பை தந்திருந்தார் சூசன். அந்த படத்தில் அமலா பாலுக்கு பெயர் கிடைத்ததுபோலவே, சூசன் சார்ஜூக்கும் பெயர் கிடைத்தது. அதுபோன்ற வில்லியை டைரக்டர் பிரபுசாலமன் அற்புதமாக டிசைன் செய்திருந்தார்.

மைனா படத்தின் ஆடிஷன்

சூசன் ஜார்ஜ், என்ஜினியரிங் படித்துவிட்டு டிஎல்எப்-பில் நடித்து கொண்டிருந்தார்.. தென்றல் என்ற சீரியலில் வாய்ப்பு கிடைத்து அருமையாக நடித்திருந்தார்.. இதற்கு பிறகு நிறைய சீரியல்களில் நடித்தார்.. அங்கிருந்துதான் சினிமாவுக்கு சென்றார்.. அந்த சமயத்தில்தான், மைனா படத்துக்கு ஆடிஷன் நடந்துள்ளது.. அப்போது, பிரபு சாலமன் சூசனிடம், "எப்போ வர்றீங்க?" என்று கணவரை எரிச்சலுடன் கேட்கும் டயலாக்கை மட்டும் பேச சொன்னாராம். அதற்கு பிறகுதான், சூசனை அந்த படத்திற்கு செலக்ட செய்தார்களாம்.

மைனா படத்தின் ரெஸ்பான்ஸ் எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக, சூசன் ஒரு தியேட்டருக்கு சென்றிருக்கிறார்.. அப்போது, அரிவாளால் வெட்டும் சீனை பார்த்ததுமே தியேட்டரில் சில ரசிகர்கள், "வெட்டு, நல்லா வெட்டு" என்று சத்தம் போட்டுள்ளார்கள்.

மேடம் சரக்கு போட்டு நடிப்பீங்களா


பிறகு, படம் முடிந்து வெளியே வரும்போது, சூசனை அடையாளம் கண்ட சிலர், "போலீஸ்காரன் புருஷன் வேலைக்கு போனால், ஆயிரம் வேலை இருக்கும்.. இப்படித்தான் டார்ச்சர் செய்றதா? எப்போ வர்றீங்க?ன்னு கேட்டு ஏன் டார்ச்சர் பண்றே? உன்னை அரிவாளால் வெட்டியும்கூட, இப்படி தப்பிச்சி தியேட்டருக்கு சினிமா பார்க்க வந்திருக்கியே?" என்று திட்டியிருக்கிறார்கள்.. இதைக்கேட்டதுமே ஆச்சரியப்பட்டாராம் சூசன். ராட்சசன் படத்திலும் அருமையாக நடித்திருந்தார் சூசன். நெகட்டிவ் ரோல் என்றாலும், அதிலும் நல்ல பெயரை பெற்று தந்தது.

ஆனால் சிலர் சூசனிடம், "மேடம் நீங்க சரக்கு போட்டு நடிப்பீங்களா? ஸ்கிரீனில் நடிக்கும்போது அப்படித்தான் தெரிகிறது" என்று சொல்லியிருக்கிறார்கள்.. இதனால் நொந்துபோன சூசன், எங்கே போனாலும், நெகட்டிவ் விமர்சனம்தான் கிடைக்கிறது என்று சலித்து கொண்டாராம்.

கும்கி 2 படம் விரைவில்

அதற்கு பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி, பெங்களூரில் செட்டிலாகிவிட்டார். நீண்ட காலம் கழித்து, பிரபு சாலமன் சமீபத்தில் போன் செய்து, "ரெடியாக இருங்க சூசன், கும்கி 2 படம் எடுக்க போகிறேன்" என்றாராம்.. அந்தவகையில் மீண்டும் சூசன் ஜார்ஜ் நடிக்க உள்ளார்..

கேரக்டரை கேரக்டராக மட்டுமே பார்க்காமல், நிஜ வாழ்க்கையுடன் பொருத்தி பார்ப்பது மன வருத்தமாக இருந்ததாக அன்று சூசன் ஜார்ஜ் சொல்லியிருந்த கருத்தானது, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் பெண்களுக்கான பதிலாகவே இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+