குழந்தை பற்றி நெகிழ்ச்சியாக பேசிய “மாமன்” பட ஹீரோயின்.. வெட்கத்தில் முகம் சிவந்த கணவர் விஜய் டிவி சீரியல் நடிகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான நீ நான் காதல் சீரியலில் கதாநாயகனாக நடித்த நடிகர் பிரேம் ஜேக்கப்க்கும் நடிகை சுவாதிகாவுக்கும் கடந்த வருடத்தில் தான் திருமணம் நடந்தது. சுவாதிகா லப்பர் பந்து, மாமன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சுவாதிகா ஒரு பேட்டியில் பேசும் போது தன்னுடைய குழந்தை மற்றும் குடும்பம் பற்றி எமோஷனலாக பேசியிருக்கிறார்.

மாமன் திரைப்படத்தில் சுவாதிகா சூரியின் அக்காவாக நடித்திருந்தார். சுவாதிகா கேரக்டரை எல்லோரும் கழுவி ஊற்றி திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்தான் இந்த திரைப்படத்தின் வில்லி என்று எல்லோரும் விமர்சித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்படுகிறது. அதுபோல லப்பர் பந்து திரைப்படத்திலும் சுவாதிகா கெத்து மனைவி கேரக்டராகவே மாறி இருந்தார்.

Swathika Prem Jacob Vijay TV

நடிகை சுவாதிகா பேட்டி

இந்த நிலையில் சுவாதிகா சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய குடும்ப வாழ்க்கை பற்றி பேசும்போது தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சமநிலைப்படுத்தும் பெண்களை தான் எனக்கு பிடிக்கும் ஏனென்றால் நானும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார்‌. அதுபோல எதிர்காலத்தில் தன்னுடைய குழந்தைகளை அவர் எப்படி எல்லாம் பார்த்துக் கொள்வார் என்று அதில் பேசியிருக்கிறார்.

அம்மாவின் ருசி

உயர் பதவியில் இருக்கும் பல பெண்களை எனக்கு தெரியும். அவர்கள் குழந்தைகள் மற்றும் கணவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து போட்டு அழகு பார்க்கிறார்கள். நானும் அப்படித்தான் இருக்க விரும்புகிறேன். சிலர் அம்மாக்களின் சமையலைப் பற்றி பேசுவதை நான் பார்த்திருக்கிறேன். 10 வருடங்கள் கழித்து அப்படிப்பட்ட அம்மாக்களை பற்றி யாராவது பேசுவார்களா? என்று தெரியவில்லை. நான் வேலை செய்யும் அம்மாவாக இருப்பதால் இதற்கெல்லாம் நேரமில்லை என்று பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

Swathika Prem Jacob Vijay TV

பொங்கும் தாய்மை

அம்மாவின் ருசி என்று அப்போது சொல்ல முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என் குழந்தைகளுக்கு நானே சமைத்து போட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. எனக்கு நன்றாக சமைக்க தெரியுமா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் குழந்தைகளுக்கு என்னால் முடிந்த அளவிற்கு சமைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதுபோல நானும் என்னுடைய கணவரும் கல்யாணத்திற்கு முன்பாக குடும்ப கட்டுப்பாடு பற்றி பேசிக்கொண்டோம்.

காதல் திருமணம்

தாயாக வேண்டும் என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். திருமணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகிறது. ஒருவேளை அடுத்த வருடம் நடக்கலாம் என்று சிரித்தபடியே சுவாதிகா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். சுவாதிகா மலையாள சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் அவரோடு நடித்த பிரேம் ஜேக்கப்பை காதலித்து வந்தார். அந்த சீரியல் முடிவடைந்ததும் ஜேக்கப்பிற்கு விஜய் டிவியில் நீ நான் காதல் சீரியலில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதே நேரத்தில் சுவாதிகா தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பிரேம் ஜேக்கப் நடித்த நீ நான் காதல் சீரியல் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் அவருடைய புதிய சீரியல் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மாமன் படம் பார்த்துட்டீங்களா? அதில் சுவாதிகா நடிப்பு உங்களுக்கு பிடிக்குமா? இல்லை லப்பர் பந்து படத்தில் அவருடைய நடிப்பு பிடிக்குமா நண்பர்களே?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+