கனா காணும் காலங்கள் கௌதம், நந்தினியை ஏமாற்றி தீபிகாவோடு திருமணமா..?உருக்கமாக பேசிய தேஜு
சென்னை: கனா காணும் காலங்கள் சீரியலில் கௌதம் கேரக்டரில் நடிக்கும் ராஜா வெற்றி பிரபு மற்றும் தீபிகா இருவரும் திருமணம் செய்ய இருக்கும் தகவலை தெரிவித்து இருக்கின்றனர்.
அப்போ கௌதம் நந்தினியை ஏமாற்றிவிட்டு அபியை திருமணம் செய்யப் போகிறாரா? என்று சமூக வலைத்தளத்தில் அதிகமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நந்தினி கேரக்டரில் நடிக்கும் நடிகை தேஜு இது குறித்து விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

சினிமா என்றாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி அதில் நடிக்கும் நடிகர்கள் அந்த கேரக்டர்களின் படி தான் ரசிகர்களின் மனதில் பதிந்து விடுகிறார்கள். இப்போதும் கூட பல ரசிகர்கள் இவர்கள் திரையில் நடிக்கும் கேரக்டர்களை நிஜம் என்று நம்பி விடுகிறார்கள். தற்போது கூட அதுதான் கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர்களின் வாழ்க்கையில் நடைபெற்றிருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் வெற்றியை தொடர்ந்து இந்த சீரியல் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ஹாட்ஸ்டாரில் கனா காணும் காலங்கள் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பல நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கிறனர். அந்த வகையில் வகையில் அபி கேரக்டரில் நடிகை தீபிகாவும், கௌதம் கேரக்டரில் நடிகர் ராஜா வெற்றி பிரபு மற்றும் நந்தினி கேரக்டரில் நடிகை தேஜு நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தீபிகா தான் ராஜா வெற்றி பிரபுவை காதலிக்கும் செய்தியை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே சீரியலின் கதைப்படி கௌதம் நந்தினியை தான் காதலித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அதையே ரியல் லைஃபோடு கம்பேர் செய்து சில ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

அதாவது கௌதம் நந்தினியை காதலித்து ஏமாற்றி விட்டு அவரது தோழியாக இருக்கும் அபியை திருமணம் செய்து கொண்டு விட்டார் என்று கூறி வருகிறார்கள். இதில் பலர் தேஜுவை டேக் செய்தும் வருகிறார்கள். இந்த நிலையில் தேஜு இதற்கு விளக்கம் அளிக்கும் பொருட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தயவுசெய்து இந்த மாதிரி நீங்க பண்ணாதீங்க இது எனக்கு கஷ்டமாக இருக்கு நடிகர்களுக்கும் பிரைவேசி வேண்டும்.

அவர்களுடைய சொந்த வாழ்க்கையோடு நடிக்கும் கேரக்டர்களை இணைத்து பேசாதீங்க. இது உங்களுக்கே தவறு என்று தெரியும். ஆனாலும் பலர் இப்படி செய்து கொண்டிருக்கிறீர்கள். தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு திருமணம் செய்து கொள்வது அது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை. அதுக்கும் இந்த சீரியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் எங்களுக்கு என்ன சொல்கிறார்களோ அதை தான் கதைப்படி நடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதை எங்களுடைய நிஜ வாழ்க்கையோடு இணைத்து பேசாதீர்கள் என்று உருக்கமாக வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது..
-
"குடும்ப வாழ்க்கை” மொத்த சர்ச்சைகளுக்கும் போல்டாக முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுகன்யா.. பாராட்டும் ரசிகர்கள் -
திரிஷா பிரண்ட் நடிகை சார்மியோட மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காதீங்க! எச்சரித்த விஜய் சேதுபதி! பின்னணி காரணம் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
"29 வயசுல உங்களுக்கு இந்த ஃபீலிங் வந்திருக்கா? Netflix-ல் டிரெண்டாகும் ‘29’ படம் ஏன் இளைஞர்களின் மனசை கலக்குது!" -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை... ரவி மோகனுக்கு என்ன ஆச்சு? நீதிமன்றத்துக்கு தெரியாதா? பிரபலம் கேள்வி -
100ஐ தொடாமல் போன சூப்பர் குட் பிலிம்ஸ் RB சௌத்ரி.. காற்றில் கரைந்த ரியல் ஜென்டில்மேனின் கடைசி ஆசை -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications