ராதிகா கூட நடிக்கிறதை பெரும்பாலும் அவாய்ட் பண்ணுவேன்.. காரணம் இதுதான்! வடிவுக்கரசி ஓபன்
சென்னை: நடிகை வடிவுக்கரசி ஒரு பேட்டியில் பேசும்போது நான் ராதிகாவோடு நடிக்க வாய்ப்பு வந்தால் அவாய்ட் பண்ணிடுவேன் அதற்கு காரணம் இதுதான் என்று தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார்.
நடிகை வடிவுக்கரசி பல வருடங்களாக சினிமா மற்றும் சீரியல்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் இளம் வயதிலேயே சிவாஜிக்கு அண்ணியாகவும் நடித்து மிரட்டியவர். அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்துக்கு பாட்டியாக அருணாச்சலம் படத்தில் நடித்து இவர் பேசிய வசனங்கள் இப்போதும் பார்ப்பவர்களை பயப்பட வைக்கும்.

அருணாச்சலம் படத்தில் வடிவுக்கரசியை பார்த்து ரஜினிகாந்த் மட்டுமல்ல அப்போது உள்ள 90ஸ் கிட்ஸ்கள் கூட பயந்து இருக்கிறார்கள். ஆனால் வடிவுக்கரசி நிஜத்தில் படத்தில் நடித்ததற்கு நேர் மாறான கேரக்டர் உடையவர் என்பது அவருடைய பல பேட்டிகளில் தெரியும். அதுபோல அவரோடு நடித்த பல நடிகர்களும், நடிகைகளும் கூட வடிவுக்கரசி குறித்து பெருமையாக பேசி இருக்கிறார்கள்.
எந்த சூழ்நிலையிலும் யாரையும் சார்ந்து வாழ கூடாது, தான் தனித்து வாழ வேண்டும் என்று தைரியமாக இப்போதும் கம்பீரமாக நடித்துக் கொண்டிருக்கும் வடிவுக்கரசி பேட்டி ஒன்றில் நடிகை ராதிகா குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் ராதிகாவோடு அதிகமாக நடிக்க மாட்டேன். ஏதாவது வாய்ப்பு வந்தால் கூட யோசிப்பேன்.
அதற்கு காரணம் ராதிகாவுக்கும் எனக்கும் சில மாதங்கள் தான் வயது வித்தியாசம். ராதிகா மனதில் பட்டதை டக் என்று அப்படியே பேசி விடுவார். “மெட்டி” படத்தில் நானும் ராதிகாவும் ஒண்ணா நடிச்சோம். அந்த படத்திற்கு பிறகு உண்மையான அக்கா தங்கச்சி போல தான் நாங்கள் இருந்தோம்.

அவங்களை என்னுடைய தங்கச்சி போல தான் நானும் ட்ரீட் பண்ணுவேன். ஆனால் ராதிகாவுக்கு நல்ல மூடு இருந்தால் வடிவு அக்கா, வாங்க வடிவு... என்று கூப்பிடுவாங்க, இல்லன்னா சொல்லு வடிவு... என்று சொல்லுவாங்க. அப்போ நல்ல மூடுல இல்லன்னு அர்த்தம். இப்படித்தான் அவங்கள புரிஞ்சு நான் நடந்துக்குவேன்.
அதனால நான் அவங்கள கொஞ்சம் டிஸ்டன்ஸ்லயே வச்சிக்குவேன். சேலை இருந்தால் செடியும் பகை என்பது போல கொஞ்சம் தள்ளி தான் இருப்பேன். இதனால தான் நான் அவங்களோட சீரியல்ல கூட நடிக்க கூப்பிட்டா எனக்கு நடிக்க பயம். அவங்க ஏதாவது சொல்லிடுவாங்களோனு நான் ரொம்ப யோசிப்பேன். ஏன்னா சண்ட வந்துடுச்சுன்னா அதுக்கு அப்புறம் ஃபேஸ் பண்ணுவது ரொம்ப கஷ்டம் என்பதற்காக நான் ஏதாவது வாய்ப்பு வந்தால் கூட எப்படியாவது அவாய்ட் பண்ணிடுவேன் என்று அந்த பேட்டியில் வடிவுக்கரசி கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications