கல்யாணம் முடிந்த ஒரு வாரத்தில் சீரியல் நடிகை வைஷ்ணவி போட்ட எமோஷனல் போஸ்ட்.. குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: விஜய் டிவியில் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வைஷ்ணவி சுந்தர் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக தன்னுடைய கணவர் வெற்றி வசந்த் பற்றி ஒரு எமோஷனலான போஸ்ட் போட்டு இருக்கிறார்.
சின்னத்திரையில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிது அல்ல. பல பிரபலங்கள் இதுபோல காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். சரவணன் மீனாட்சி சீரியல் நடித்த ஸ்ரீஜா- செந்தில் ஜோடி முதல் ராஜா ராணி சீரியலில் நடித்த ஆலியா மானசா சஞ்சீவ் ஜோடி வரை பலரும் திருமணம் செய்து இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் வெற்றி வசந்த் மற்றும் விஜய் டிவியில் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் வைஷ்ணவியும் கடந்த மாதத்தில் தான் தங்களுடைய காதலை தெரிவித்து இருந்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரின் வீட்டின் சம்மதத்தோடு திருமணமும் நடைபெற்றிருக்கிறது. ஆனால் வெற்றி வசந்த் இரண்டு வருடங்களுக்கு முன்பே வைஷ்ணவியின் வீட்டில் அவரை பெண் கேட்டு இருக்கிறார். ஆனால் முதலில் வைஷ்ணவி இந்த திருமணத்திற்கு யோசித்து இருக்கிறார். பிறகு வெற்றி வசந்த்தின் கேரக்டரை பார்த்து அவரை பிடித்து போன பிறகுதான் அவரிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலை தெரிவித்து இருக்கிறார்.

பிறகு இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்களின் திருமணம் நடைபெற்றது. அதுபோல இவர்களின் ரிசப்ஷன் புதுக்கோட்டையில் உறவினர்களின் முன்பு நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு வெற்றி வசந்த் சிறகடிக்க ஆசை சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுபோல வைஷ்ணவியும் பொன்னி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். பொன்னி சீரியலில் இப்போது காட்டுக்குள் பொன்னி மாட்டியது போன்ற காட்சிகள் போய்க் கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் நேற்று வைஷ்ணவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவர் வெற்றி வசந்த் பற்றி எமோஷனலாக ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.

அதில், என்னை மிகவும் நேசித்ததற்கு நன்றி. என் முகத்தில் இந்த அளவிற்குக்கான மகிழ்ச்சியை நான் பார்த்ததில்லை. அந்த மகிழ்ச்சியை கொடுத்ததற்கு நன்றி. என் காதல் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டிருக்கிறது. என்னை சிரிக்க வைக்கிறீர்கள், உங்களுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த சந்தோஷத்தை வேறு யாராலும் எனக்கு கொடுக்க முடியாது. இந்த அளவிற்கு என்னை பற்றி நான் யாரிடமும் இவ்வளவு வெளிப்படையாக பகிர்ந்து கொண்டதில்லை. என்னை முழுவதும் தெரிந்து கொண்ட நபர் நீங்கள் மட்டும்தான். நீங்கள் என் வாழ்க்கையில் வருவதற்கு முன்பு நான் என் வாழ்க்கையில் நிறைய அனுபவித்திருக்கிறேன்.
இருந்தும் நீங்கள் வந்து தரையில் உடைந்து கிடந்த துண்டுகளை எடுத்து என்னை மீண்டும் ஒன்றாக சேர்த்தீர்கள். மீண்டும் ஒருவரை எப்படி நம்புவது என எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள். என்னை எப்படி நேசிக்க வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக் கொடுத்தீர்கள். நீங்கள் அற்புதமான மனிதராக இருந்ததற்கு மட்டுமல்ல இந்த பயணத்தில் சிறந்த நபராக என்னை மாற்றியதற்கு உங்களுக்கு நன்றி! ஐ லவ் யூ ஆல்வேஸ்.. என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த பதிவிற்கு “ஐ லவ் யூ மா” என்று வெற்றி வசந்த் கமெண்ட் செய்து இருக்கிறார். தன்னுடைய கணவருக்கு நன்றி தெரிவித்து மனைவி வைஷ்ணவி போட்ட பதிவு வைரலாகி வருகிறது. அதிலும் பலர் இந்த அன்பும் காதலும் உங்களுக்கு எப்போதும் நிலைத்திருக்க வேண்டும், உங்களுடைய வெற்றிகளில் ஒருவருக்கொருவர் இதே போல உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ஆசீர்வாதங்களையும் கமெண்ட்ஸில் அள்ளி தெளிக்கிறார்கள். இந்த அழகான தம்பதியின் காதல் பயணம் குறைவில்லாமல் தொடர நம்முடைய வாழ்த்துக்களையும் கூறிக் கொள்ளலாம்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications