மனோஜ் இறப்பு.. எல்லாமே கடவுள் பிளான் தான்! இதை செய்திருந்தால் உயிரோடு இருந்திருப்பார்.. வனிதா ஆதங்கம்
சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதி கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். இது குறித்து நடிகை வனிதா தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். அதோடு மனோஜ் இதை செய்திருந்தால் அவர் இப்போது உயிரோடு இருந்திருப்பார் என்று சில விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
பல நடிகர்களை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி தமிழ் சினிமா ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் அவருக்கு இதய ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து சில நாட்கள் கழித்த நிலையில் திடீரென்று அவருக்கு மீண்டும் மாரடைப்பு வந்து காலமானதாக கூறப்படுகிறது.

பல வருட நட்பு
இந்த நிலையில் அவர் பற்றிய நினைவுகளை அவருடன் பழகிய பலரும் பகிர்ந்து வருகிறார்கள். அதுபோல நடிகை வனிதாவும் மனோஜ் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் வனிதா பேசுகையில் எங்களுடைய குடும்பமும் பாரதிராஜாவின் குடும்பமும் பல வருடங்களாகவே பழக்கமாக இருக்கிறோம்.
இதை செய்யவில்லை
மனோஜ் எனக்கு ஆரம்பத்தில் இருந்து தெரியும். எப்பவும் ஜாலியாக இருக்கக்கூடிய நபர். நாங்க சின்ன வயசில் எல்லாரும் ஒன்றாக விளையாடியிருக்கிறோம். ஆனால் அவருக்கு இப்படி ஒரு மரணம் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவும் இல்ல, இது நடந்திருக்கவே கூடாது. அவன் எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேசியிருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்பார் என்று நம்புகிறேன்.
நிறைவேறாத ஆசைகள்
காரணம் அவனுக்குள் ஆயிரம் ஆசைகள் இருந்தது ஆனால் யாரிடமும் அதை செய்ய வேண்டும் என்று கேட்டது கிடையாது. பாரதிராஜா எத்தனையோ பேரை சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் ஆனால் அவரிடம் தான் இயக்குனராக வேண்டும் என்று மனோஜ் நின்றது கிடையாது. எல்லாமே நானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற மனநிலை தான் மனோஜ்க்கு இருந்தது அது தவறு என்று சொல்லவில்லை.
கடவுள் செயல்
ஆனால் சில விஷயங்களை சிலரிடம் மனம் விட்டு பேசி அதற்கான தீர்வு செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து அதுபோல இந்த உலகத்தில் ஒருவர் பிறக்கிறார் என்பதும் இறக்கிறார் என்பதும் எல்லாமே கடவுளுடைய செயல் என்று நான் நம்புகிறேன். ஒருவர் இந்த இடத்தில் இருந்து கிளம்பினால் தான் இன்னொரு இடத்தில் அவர்கள் ஏதாவது செய்ய முடியும் என்பதற்காகத்தான் கடவுள் எல்லாவற்றையும் செய்கிறார்.
வனிதா கொடுத்த விளக்கம்
ஒருவேளை மனோஜியின் ஆசை இந்த ஜென்மத்தில் நடக்கவில்லை என்றால் அடுத்ததாக அவன் இன்னொரு ரூபத்தில் அதை செய்து முடிப்பான். அதற்காக கூட கடவுள் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. ஆரம்பத்தில் ஒரு சின்ன இழப்பு வரும்போது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கும். கடவுள் நமக்கு மட்டும் இப்படி சோதனை தருகிறார் என்று யோசித்து இருக்கிறேன். ஆனால் இப்போதுதான் அதை யோசித்து பார்க்கும்போது எல்லாமே ஏதோ ஒரு காரணத்துக்காக தான் நம்முடைய வாழ்க்கையில் நடக்கிறது என்று தெரிகிறது.
குடும்பத்திற்கு இழப்பு
நாம் நம்முடைய நெருக்கமானவர் ஒருவர் பிரியும்போது ஒருவர் இறக்கும்போதும் வாழ்க்கையிலே அவ்வளவுதானா ஏன் இப்படி ஆயிடுச்சு என்று ரொம்ப யோசிச்சிட்டு இருக்கிறோம். ஆனால் அதைத் தொடர்ந்து அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டம் என்ற ஒன்று இருக்கிறது. அதற்காக கடவுள் இப்படி செய்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது. மனோஜின் இறப்பு அவருடைய குடும்பத்திற்கு பெரிய இழப்புதான். ஆனாலும் அவர்கள் இதிலிருந்து மீண்டு வெளியே வரவேண்டும். மனோஜ் உடைய கனவையும் அவர்களுடைய கனவையும் அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று அந்த பேட்டியில் வனிதா விஜயகுமார் பேசி இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications