மீண்டும் திருமணம் செய்த வனிதா..? இனி விவாகரத்துக்கு வாய்ப்பே இல்லையாம்.. அவரே சொன்ன தகவல்
சென்னை: வெள்ளித்திரை சின்னத்திரை என கலக்கி வரும் நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் மீண்டும் திருமணம் செய்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே நடிகை வனிதாவின் திருமண வாழ்க்கை மற்றும் அதைத் தொடர்ந்து விவாகரத்து செய்திகள் பலருக்கும் தெரிந்திருந்தாலும் இப்போது திடீர் திருமணம் என்ற செய்தி அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் நான் இப்போது செய்த திருமணத்தில் பிரிவே கிடையாது. விவாகரத்துக்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறியிருக்கிறார். என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

நடிகர் விஜய், ராஜ்கிரண் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த வனிதா குடும்ப வாழ்க்கை சர்ச்சைகளும், பிரச்சனைகளும் நிறைந்ததாக தான் இருந்து வருகிறது. அதனாலேயே இணையத்தில் அடிக்கடி வனிதாவின் பெயர் அடிபட்டுக் கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது.
இந்த நிலையில் நடிகை வனிதா நடிகர் ஆகாஷை 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் அவரை பிரிந்து விவாகரத்து செய்து விட்டார். நடிகர் ஆகாஷ் உடன் ஒரு மகன் மற்றும் மகளை வனிதா பெற்று எடுத்திருந்தார். இந்த நிலையில் முதல் கணவரை பிரிந்த பிறகு 2007 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை வனிதா இரண்டாவதாக திருமணம் செய்து இருந்தார்.
அதைத்தொடர்ந்து ராபர்ட் மாஸ்டர், பீட்டர் பால் போன்றவர்களை இவர் காதலித்து வந்ததும் இணையத்தில் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த நிலையில் தான் தற்போது எல்லோரையும் பிரிந்து இருந்தாலும் தன்னுடைய மூத்த மகளோடு தனியாக வசித்து வருகிறார். அதுபோல தன்னுடைய சினிமா வாழ்க்கையை மீண்டும் தொடங்கிய வனிதா சின்னத்திரை வெள்ளித்திரை என பிசியாக இருக்கிறார்.

தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் வனிதா தெலுங்கில் சமீபத்தில் நடந்த பிரஸ் மீட்டிங்கில் பேசியிருக்கிறார். அப்போது அங்கே அவரிடம் தொடர்ச்சியாக நீங்கள் திருமணம், அதைத் தொடர்ந்து விவாகரத்து செய்து கொண்டிருக்கிறீர்களே என்று கேள்வி கேட்கப்பட, ஆமாம் "இப்போது நான் மீண்டும் திருமணம் செய்து விட்டேன். ஆனால் இனி விவாகரத்துக்கு இடமே இல்லை" என்று கூறியிருக்கிறார். அங்கிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் புரியாமல் திகைத்து இருக்கின்றனர்.
அதை பார்த்த வனிதா, அவரே விளக்கமும் கொடுத்து இருக்கிறார். "நான் என்னுடைய சினிமா வாழ்க்கையை தான் காதலிக்கிறேன். என்னுடைய சினிமா வாழ்க்கையை நான் இப்போது மீண்டும் திருமணம் செய்து இருக்கிறேன். இனி இதிலிருந்து விவாகரத்துங்கிற பேச்சுக்கே இடம் இல்லை. இனி நான் என்னுடைய நடிப்பை தொடர்ந்து கொண்டு இருப்பேன்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications