நயன்தாராவிற்கு போட்டியாக வனிதா செய்த செயல்.. ஆனால்..! ஒரே ஒரு வருத்தம் மட்டும் இருக்காமே
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய மகள் ஜோவிகாவுடன் ஹாங்காங் சென்றிருக்கும் நிலையில், அங்கு நடிகை நயன்தாரா சென்று வந்த டிஸ்னி லேண்டில் நயன்தாரா புகைப்படம் எடுத்த அதே இடத்தில் நின்று தன்னுடைய மகளோடு வனிதாவும் புகைப்படம் எடுத்திருக்கிறார். ஆனால் தனக்கு ஒரு வருத்தம் இருப்பதாகவும் அந்த பதிவில் வனிதா குறிப்பிட்டு இருக்கிறார்.
பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகளான வனிதா சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து சமூக வலைத்தளத்திலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். வனிதா 90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டும் அல்லாமல் 2கே கிட்ஸுகளுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும். ஆரம்பத்தில் சந்திரலேகா திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான வனிதா அதற்கு பிறகு மாணிக்கம் திரைப்படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தார்.

அதற்கு பிறகு திருமண வாழ்க்கையில் இணைந்து நடிப்பை விட்டு விலகி இருந்தார். ஆரம்பத்தில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில், பிறகு அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடல் பிரிந்து ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் அவரோடும் கருத்து வேறுபாடு ஏற்பட அவரிடம் இருந்தும் வனிதா விவாகரத்து வாங்கிவிட்டார்.
வனிதாவிற்கும் திருமண வாழ்க்கைக்கும் ஏழாம் பொருத்தம் எட்டாம் பொருத்தம் என்று சொல்லும் வகையில் தான் அவர் காதலிக்கும் நபர்கள் எல்லாம் சில மாதங்கள் அல்லது வருடங்களுக்குள்ளே கருத்து வேறுபாடால் பிரிந்து போய் விடுகிறார்கள். ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத வனிதா அடுத்தடுத்து தன்னுடைய வாழ்க்கையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில் வனிதாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். அதில் மகன் அவருடைய அப்பா ஆகாசுடன் இருக்கிறார். அதுபோல வனிதா ஜோவிகா மற்றும் ஜெயா என்ற இரண்டு மகள்களை வளர்த்து வந்த நிலையில் ஜெயாவும் அவருடைய அப்பாவோடு வளர்ந்து வருகிறார். ஜோவிகா மட்டும்தான் வனிதா உடன் இருக்கிறார்.
ஜோவிகா பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பெரிய அளவில் பிரபலமடைந்திருக்கிறார். அதே நேரத்தில் வனிதா தன்னுடைய மகளோடு வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறார். வனிதாவும் அவருடைய முன்னாள் காதலருமான ராபர்ட் மாஸ்டரும் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் உதவி இயக்குனராக ஜோவிகாவும் இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கான சூட்டிங் வெளிநாட்டில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக வனிதா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளோடு ஹாங்காங்கில் உள்ள டிஸ்னி லேண்டில் புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டு இருந்தார்.
அந்த புகைப்படத்திற்கு கீழே விக்னேஷ் சிவன் 12 வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் போடா போடி திரைப்பட சூட்டிங்கிற்கு அனுமதி கேட்டு காலில் வெறும் செருப்புடன் கையில் ஆயிரம் ரூபாய் உடன் வந்து நின்றேன். இன்று என்னுடைய மனைவி மற்றும் மகன்களுடன் வந்திருக்கிறேன் என்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.
அதே இடத்தில் இப்போது நடிகை வனிதா தன்னுடைய மகள் ஜோதிகாவோடு புகைப்படத்தை எடுத்து பகிர்ந்து இருக்கிறார். அதோடு தன்னுடைய இன்னொரு மகள் ஜெயாவை தான் மிஸ் பண்ணுவதாக அந்த பதிவில் வனிதா பகிர்ந்து இருக்கிறார். ரசிகர்கள் இந்த பதிவிற்கு அதிகமான கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications