நெகட்டிவா பேச நீ யாரு? எங்க கஷ்டம் தெரியுமா? எங்களுக்கு தான் ஊதியம் குறைவு- வரலட்சுமி எமோஷனல்
சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு எதிராக வரும் நெகடிவ் கமெண்ட்கள் குறித்து கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அதே நேரத்தில் உலகத்திலேயே நடிகர், நடிகைகள் தான் குறைவான சம்பளம் வாங்குவது. எங்களுக்கு சூட்டிங் இருந்தால் மட்டும் தான் சம்பளம் என்று மேலும் பல விஷயங்களையும் வரலட்சுமி கூறியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அதில் வதந்திகளும் சர்ச்சைகளும் அளவுக்கு அதிகமாக பரவி வருகிறது. அதில் ஒரு சில நடிகைகள் அடிக்கடி சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை வரலட்சுமி அடிக்கடி இடம் பிடிக்கிறார். தன்னை பற்றி வரும் வதந்திகளுக்கும் நெகட்டிவ் கமெண்ட்களுக்கும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வரலட்சுமியும் விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

ஆனாலும் அவர் பற்றிய செய்திகள் மட்டும் இன்னும் குறைந்தபாடு இல்லை. நடிகர் சரத்குமார் சாயா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தபோது மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதற்குப் பிறகு ராதிகா மற்றும் சரத்குமாருக்கு ராகுல் என்ற மகனும் பிறந்திருக்கிறார்.
இந்த நிலையில் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்த வரலட்சுமி மற்றும் சரத்குமாரின் இரண்டாவது மனைவி ராதிகா எல்லோருமே ஒற்றுமையாக தான் இருக்கின்றனர். சமீபத்தில் வரலட்சுமி என்கேஜ்மென்ட் எளிமையாக நடைபெற்ற போது நடிகை ராதிகாவும் அதில் கலந்துகொண்டு இருந்தார். இந்த நிலையில் தன்னை பற்றி வரும் நெகட்டிவ் கமெண்ட்களுக்கு வரலட்சுமி பேட்டி ஒன்றில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில், அடுத்தவங்களைப் பற்றி நெகட்டிவா கமெண்ட் போடறதுக்கு நீ யாரு...? நெகட்டிவா கமெண்ட் போடுறவங்க வாழ்க்கை என்ன மாதிரி இருக்கிறது? ஒருத்தங்க வேலை பார்த்து கஷ்டப்பட்டு ஒரு இடத்திற்கு வந்திருக்காங்க. ஆனால் அவங்க எளிமையாக நல்ல இடத்திற்கு வந்து விட முடியாது. அவங்க என்னெல்லாம் கஷ்டப்பட்டாங்க என்று உங்களுக்கு தெரியுமா? ஆனால் நெகட்டிவா பேசுறவங்க ஈஸியா அடுத்தவங்களை பற்றி பேசுறாங்க.
அவங்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஒருத்தங்களை பற்றி தப்பு தப்பா கமெண்ட் போடுவதற்கு முன்னாடி அவங்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று யோசிச்சுக்கோங்க? அதுபோல நடிகைகளை பார்த்து நீங்க ஏன் இவங்களுக்கு ஹெல்ப் பண்ணல? அவங்களுக்கு ஹெல்ப் பண்ணலன்னு? கேக்குறாங்க. அதை கேட்கிற நீங்க பண்ண வேண்டியது தானே?

உண்மைய சொல்லனும்னா உலகத்திலேயே நடிகைகளுக்கு தான் சம்பளம் குறைவு. ஏன்னா எங்களுக்கு எப்போ காசு வரும்னே தெரியாது. எங்களுக்கெல்லாம் சூட்டிங் நடக்கலைனனா அன்னைக்கு சம்பளம் கிடையாது. ஆனா நெகட்டிவா கமெண்ட் போடுறவங்க நெனச்சிட்டு இருக்காங்க எங்களுக்கு நிறைய சம்பளம் வருது, நாங்க ரொம்ப வசதியா இருக்கோம்னு... ஆனா அப்படியெல்லாம் கிடையாது.
எங்களுக்கும் மாதா மாதம் பில் இருக்கும். எங்களிடம் வேலை பார்க்கிறவங்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால் எங்களுக்கு அப்படி மாசா மாசம் சம்பளம் வராது. ஷூட்டிங் நடக்கும் போது சம்பளம் வரும் அதே நேரத்தில் திடீரென்று ப்ரொடியூசர் வீட்டில் ஏதாவது சிக்கல் என்றாலோ அல்லது அவர் வீட்டில் ஏதாவது இறப்பு நடந்து விட்டாலோ எங்களுக்கு சூட்டிங் நிறுத்தி விடுவார்கள்.
சம்பளம் அனுப்புவதையும் நிறுத்தி விடுவார்கள் அப்போ நாங்க யாரு கிட்ட போய் நிற்கிறது? எங்களிடம் வேலை பார்க்கிறவங்க கிட்ட நாங்க எங்களுக்கு இன்னைக்கு சூட்டிங் நடக்கல ப்ரொடியூசர் எங்களுக்கு பணம் அனுப்பல என்று ஒன்றாம் தேதி சொல்ல முடியாதில்ல.. அதனால எங்க வேலை ஒன்னும் அவ்வளவு ஈஸியானது கிடையாது என்று அந்த பேட்டியில் வரலட்சுமி கோபமாக பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications