அன்று நடிகை ஐஸ்வர்யா சொன்னாரே! அதே போல் பாத்ரூம் கழுவவும் ரெடினு கண்ணீர் வடிக்கும் காமெடி நடிகை
சென்னை: நான் டாய்லெட் கழுவ கூட ரெடியாக இருக்கேன். யாராவது எனக்கு வேலை கொடுங்கள் என கவுண்டமணியுடன் காமெடியில் கலக்கிய நடிகை ஒருவர் பரிதாபமாக கேட்பது காண்போரை கலங்கச் செய்கிறது. ஒரு நடிகைக்கு இப்படிப்பட்ட நிலையா என அதிர வைக்கிறது.
நடிகர்கள் கவுண்டமணி, செந்திலுடன் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்தவர்தான் நடிகை வாசுகி. அவர் நடிகர் கவுண்டமணியுடன் ரிக்ஷாமாமா படத்தில் நடித்த பேங்க் அதிகாரி டூ பிச்சைக்காரி வேடம் எப்போதும் பார்த்தாலும் சிரிப்பை வரவழைக்கும்.

பட வாய்ப்புகளால் பிஸியாக இருந்த வாசுகி தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். 2001ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த இவர் 22 ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தார். இவர் தற்போது சாப்பாட்டுக்கே வழியில்லை என கூறி ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து நடிகை வாசுகி, கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கு வாசுகி என்ற பெயரை எம்ஜிஆர்தான் வைத்தார். என் அப்பா அதிமுகவில் தொண்டர் படையில் இருந்தார். அப்போது எம்ஜிஆர் காரைக்குடிக்கு வந்த போது இந்த பெயரை எனக்கு வைத்தார். எனக்கு சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என ஆசை. ஆனால் என் குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை.
எனக்கு சினிமாவில் அந்த அளவுக்கு பணம் கிடைக்கவில்லை. அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்த போதும் நான் பணம் சேர்க்கவில்லை. எனது அப்பாவும் அம்மாவும் எம்ஜிஆர் வெறியர்கள். அதனால் நானும் அரசியலுக்க சென்றேன். எனக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவருக்கு அறிஞர் அண்ணாதான் தமிழரசி என பெயர் வைத்தார்.
எனது சொந்தக்காரர்கள் என்னை வீட்டில் தங்க வைக்க முடியாது என்கிறார்கள், "வர்றியா 10 நாள் இருக்கியா சாப்பிடுறியா போ" என்கிறார்கள். அவர்களுடனேயே என்னை தங்க வைக்க முடியாது என்கிறார்கள். காரணம் அவர்களும் சிறிய வீட்டில் இருக்கிறார்கள். அரசியலுக்கு போனதால்தான் எனக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போனது.
ஜெயலலிதா புகைப்படம் பதிந்த பெரிய டாலர் வைத்த செயின், வைர மூக்குத்தி, காலில் அரை கிலோவுக்கு கொலுசு இதெல்லாம் போட்டிருந்தேன். எல்லாவற்றையும் விற்றுவிட்டேன். ஜெயலலிதா அம்மா இறந்த பிறகு கஷ்டம் , எனக்கு கர்ப்பப்பையில் 3 கட்டி இருந்தது. அதையும் எடுத்துவிட்டார்கள்.

காரைக்குடியில் குறைந்த வாடகையில் வீடு எடுத்து ரேஷன் அரிசியில் உணவு செய்து சாப்பிட்டுவந்தேன். எனக்கு வேலையே யாரும் கொடுக்கவில்லை. நான் கக்கூஸ் கழுவ கூட ரெடியாக இருக்கேன். அந்த வேலையையும் யாரும் கொடுக்காவிட்டால் நான் எப்படி ஜீவனை நடத்துவது?
உங்கள் ஆபிஸ்ல டீ, காப்பி குடுக்குற வேலை இருந்தா கொடுங்க.. ஆங்கரிடம் கேட்ட சத்யராஜ் பட காமெடி நடிகை
ஜெ லலிதா என்ற எனது தோழி, நான் காரைக்குடி சென்றதையும் எனது நிலையையும் அறிந்து என்னை சுமன் டிவியில் இன்டர்வியூ எடுக்க வைத்தார். அது ஒரு தெலுங்கு டிவி சேனல்! நான் தெலுங்கில் பிரபலம். பிறகு எனக்கு இன்டர்வியூவுக்கு காசு கொடுத்தார்கள். எனக்கென வேலை வேண்டும், நான் தங்குவதற்கு இடம் வேண்டும்.
நான் காதலித்து கல்யாணம் செய்துகிட்டேன். நான் கட்சியில் இருந்த பொறியாளர் ஒருத்தரை திருமணம் செய்து கொண்டேன். அவர் ஒரு ஆண்டு என்னை நன்றாக பார்த்துக் கொண்டார். பிறகு என் மீது சந்தேகம் கொண்டு என்னை அடித்து உதைத்தார். அப்படி அடிக்கும் போதுதான் என் வயிற்றில் இருந்த குழந்தை அபார்ஷன் ஆகிவிட்டது. அந்த குழந்தை இருந்திருந்தால் நான் கஷ்டப்பட்டிருக்க மாட்டேன் என நடிகை வாசுகி கண்ணீர் விட்டார்.












Click it and Unblock the Notifications