அபிநய்குள் இருந்த சோகம்! தனியா குடிச்சிட்டு இருந்தாரு! அப்போ நடந்த சம்பவம்! நடிகை விஜயலட்சுமி உருக்கம்
சென்னை: 'துள்ளுவதோ இளமை' நடிகர் அபிநய் இறப்புத் திரையுலகத்துல பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கு. கல்லீரல் நோயால கஷ்டப்பட்டு, ரொம்பத் தனிமையில போன அபிநய் பத்தி, அவருடன் நடிச்ச நடிகை விஜயலட்சுமி ஒரு உருக்கமான பதிவை இன்ஸ்டாகிராம்ல போட்டிருக்காங்க. அதை படிச்சா, பலருடைய மனசு ரொம்பவே கனமாகிடுது! ஒரு வெற்றிப் பாதைல இருந்த மனுஷன், எப்படி தனிமைக்குள்ள போயிருக்காருன்னு தெரியுது!

விளம்பர படப்பிடிப்புல பார்த்த அபிநய்
விஜயலட்சுமி, அபிநயை சந்திச்ச அந்தக் கடைசி சந்திப்பைப் பத்திச் சொல்லும்போது, "'சென்னை 28' படத்துக்குப் பிறகு, நான் ஒரு சாட்டிலைட் ரேடியோ விளம்பரத்துல அபிநய் அண்ணன் கூட நடிச்சேன். அப்போ அவர் விளம்பர உலகத்துல நம்பர் 1 இடத்துல இருந்தார்." கதைப்படி, கல்யாணம் ஆன புதுசா வடநாட்டுக்கு போற ஒருத் தமிழ்க் couple-ஆக நடிச்சிருக்காங்க. அந்த விளம்பர ஷூட்டிங் டெல்லியில 4 நாள் நடந்திருக்கு. அது பற்றி விஜயலட்சுமி பதிவில் "நான் அப்போ கூச்ச சுபாவத்தோட, அறிமுகமில்லாதவங்களை பார்த்தா பயப்படுற பொண்ணா இருந்தேன். எனக்கு ஒதுக்குன அப்பார்ட்மெண்ட் ரூம்ல, திடீர்னு இன்னொரு ஆளா அபிநய் வந்துத் தங்கினார்."
ஜெண்டில்மேன்
"நான் அப்போ என் கணவர் ஃபெரோஸைக் காதலிச்சுட்டு இருந்தேன். இன்னொரு ஆணுடன் ஒரே ரூம்ல தங்குறதை ஃபெரோஸ் கிட்ட சொல்லாம ரொம்பப் பதற்றத்தோட சமாளிச்சேன். ஆனா, அபிநய்... என்ன ஒரு ஜெண்டில்மேன்!"என்று விஜயலட்சுமி கூறியிருக்கிறார்.
இதயத்திலிருந்து வெளியான வலிகள்
அபிநய் தொழில் ஒழுக்கத்தையும், அவர் தன் உழைப்பைப் போடுற நேர்த்தியையும் விஜயலட்சுமி ரொம்ப பாராட்டியிருக்காங்க. ஆனா, இரவுகள்ல அவர் நடந்துகிட்ட விதம் தான் அவங்க மனசை ரொம்பக் கனமாக்கி இருக்கு. "ஷூட்டிங் முடிஞ்சு நைட் ரூமுக்கு வந்ததும், நான் உள்ள போயிடுவேன். ஆனா, அவர் வரவேற்பறையில தனியாக் குடித்துக்கொண்டிருப்பார். கதவைத் திறந்துப் பார்க்கும்போது, அங்கேயே அமைதியாக் குடிச்சு, ஒரு முழு பாட்டிலையும் முடிச்சுத் தன்னை மறந்து கிடப்பார்."என்று கூறி இரக்கிறார்.
இளம் நடிகர் ஒருத்தர் இப்படித் தனியாக் குடித்துக்கொண்டிருப்பதை பார்த்ததும் அவங்களுக்கு ரொம்பக் கஷ்டமா இருந்திருக்கு. ஒரு நாள், "ஏன் இப்படி குடிக்கிறீங்க? நீங்க நல்லா பேர் எடுத்து உழைக்கிற வெற்றி பெற்ற இளம் நடிகர். ஏன் இந்தப் பழக்கம்?"ன்னு கேள்வி கேட்டிருக்காங்க. அதுக்கு அபிநய், தன் தனிப்பட்ட வாழ்க்கை, கடமைகள், அம்மா, அழுத்தங்கள், வலிகள், தனிமைன்னு 2 மணி நேரத்துக்கும் மேலாக பேசியிருக்கார்! "அவர் இதயத்திலிருந்து எல்லாமே வெளிய வரட்டும்னு நான் எதுவும் சொல்லாமக் கவனிச்சுக் கேட்டுக்கிட்டே இருந்தேன்."
கடைசி சந்திப்பு
படப்பிடிப்பு முடிஞ்சு ஏர்போர்ட்ல இருந்துப் பிரியும் போதுதான் ரொம்பவே நெகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கு. அபிநய் விஜயலட்சுமி கிட்ட, "நன்றி விஜி. இதற்கு முன் யாரும் என் வலிகளைக் குறித்து இவ்வளவு கேட்டதில்லை. கடவுள் இப்படியும் சில பெண்களைப் படைக்கிறாரா? ஒருவேளை, உனக்கு இரட்டைக் (ட்வின்) சகோதரி இருந்தால் எனக்குத் தெரியப்படுத்து"ன்னுச் சொல்லி இருகாகாங்க. அவங்க சிரிச்சுட்டு, அவரை கட்டியணைத்து வழியனுப்பி இருக்காங்க. "அதுதான் நாங்க சந்திச்சுக் கடைசிச் சந்திப்பு!"
இப்போ அபிநய் இறந்துட்டாருன்னு கேள்விப்பட்டதும் விஜயலட்சுமிக்கு அழுகை வருது. ஆனா, அவர் பட்ட போராட்டம் இப்போ முடிவுக்கு வந்ததை நினைச்சுச் சந்தோஷமா இருக்குன்னும், அவர் இறுதியாகத் தன் அமைதியைக் கண்டடைந்துவிட்டார்ன்னும் பதிவிட்டிருக்காங்க. சினிமா வெளிச்சத்துக்குள்ள எத்தனைப் பெரிய வலிகளை மறைச்சுட்டு ஒரு மனுஷன் சிரிச்சிருக்காருன்னு இந்தச் செய்தி நமக்கு உணர்த்துது. அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications