கீழே ட்ரஸ் இன்றி சட்டை மட்டுமே அணிந்து நடித்தேன்! ஆனா, ஐயர் குடும்பத்து ஆச்சார பெண் நான்- வினோதினி
சென்னை: நடிகர் பிரசாந்த் நடித்த வண்ண வண்ண பூக்கள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த வினோதினி தற்போது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
சினிமா உலகில் இருக்கும் அட்ஜஸ்மெண்ட் பிரச்சனைகள் இப்போது அம்பலமாகிக் கொண்டிருக்கிறது. பல துறைகளிலும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை வெடித்து கொண்டு இருந்தாலும் சினிமா துறையில் தாங்கள் சந்தித்த கஷ்டங்கள் குறித்து சில நடிகைகள் வெளிப்படையாக பேச தொடங்கி விட்டார்கள். அதனால் புகழின் உச்சத்தில் இருக்கும் பல நடிகர்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

ஒரு சிலர் சில வருடங்களுக்கு முன்பு செய்த தவறுகளுக்கு இப்போது சிலர் அவமானப்பட்டு நிற்கிறார்கள். சமீபத்தில் மலையாள சினிமாவில் நடக்கும் அவலங்களை ஹேமா கமிட்டி அறிக்கை வெளிபடுத்தியது. அதற்குப் பிறகு சினிமா நடிகைகள் சந்தித்த பிரச்சனைகள் குறித்து தைரியமாக பேசி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை வினோதினி தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
நடிகை வினோதினி ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக மணல் கயிறு உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாலு மகேந்திரா டைரக்டர் செய்த வண்ண வண்ண பூக்கள் திரைப்படத்தில் பிரசாந்த் ஜோடியாக நடித்திருப்பார். அந்த படத்தில் இடம்பெற்ற "கண்ணம்மா காதல் எனும் கவிதை சொல்லடி" என்ற பாடல் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.

அந்த படத்தில் காட்டுக்குள் சிக்கிய வினோதினி பிரசாந்தின் ஒரு சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு படத்தில் பாதி நேரம் வலம் வருவார். இது அந்த நேரத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. அது குறித்து தற்போது அவர் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் வண்ண வண்ண பூக்கள் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் நல்ல அனுபவம். அந்த படத்தை பாலு மகேந்திரா தான் டைரக்ட் செய்து இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அந்த படத்தை ஒளிப்பதிவு செய்ததும் பாலு மகேந்திரா தான். அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. உண்மையில் அந்த படம் எனக்கு கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணருகிறேன். அந்த படத்தில் நான் உடுத்திய ஆடை குறித்தான விமர்சனம் பரவலாக அப்போது பேசப்பட்டது. ஆனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அந்த நேரத்தில் நான் என்ன டிரஸ் போட்டு இருந்தாலும் அது குறித்து விமர்சனம் செய்திருப்பார்கள்.

புடவை கட்டி இருந்தால் கூட அதையும் விமர்சனம் தான் செய்வார்கள். ஆனால் அதை நான் கண்டுகொண்டது கிடையாது. அதுபோல டீனேஜில் நீங்க எப்படி இப்படி ஒரு சட்டையை மட்டும் போட்டு கொண்டு நடிக்கிறீங்க என்று கேட்டார்கள். ஆனால் அதைப்போல 30 வருடத்திற்கு முன்பே பாலிவுட்டில் பலர் நடித்து விட்டார்கள். தமிழ் சினிமாவில் அப்போது வெறும் டீ சட்டை மட்டும் அணிந்து யாரும் நடிக்கவில்லை. ஆனால் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு நடிகைகள் கபடி காட்சிகள் எல்லாம் நடித்திருந்தார்கள்.
ஆனால் நான் ஒரே ஒரு சட்டையை அணிந்து நடித்த காரணத்தால் அது அந்த நேரத்தில் பெரியதாக பேசப்பட்டது. அதுபோல தற்போது மீ டூ பிரச்சனை மீண்டும் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி வினோதினி பேசுகையில், தங்களுக்கு நடந்த அச்சஸ்மெண்ட் பிரச்சனை குறித்து வெளியே சொல்ல யாரும் பயப்பட வேண்டிய தேவையே கிடையாது. காரணம் என்னவென்றால் நாம் தவறு செய்யவில்லை என்பதால் அதை தைரியமாக வெளியே சொல்லலாம்.

ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை சினிமாவில் மட்டும் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அந்த மாதிரி பிரச்சனை எல்லா தொழில்களிலும் இருக்கிறது. அதனால் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி யாராவது நம்மிடம் கேட்டால் அதற்கு அந்த இடத்திலேயே ரியாக் செய்து விட வேண்டும் என்று நினைக்கிறேன். அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தையே மிகவும் கொச்சையாக இருக்கிறது.இன்றைய காலகட்டத்தில் ஆண் பெண் இருவரும் டேட்டிங் செய்கிறார்கள் அப்போ அதற்கு என்ன பெயர்? ஆனாலும் அது அவர்களுடைய வாழ்க்கை முறை.
அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதற்கு யாருக்கும் தொல்லை இருக்கக்கூடாது அவ்வளவுதான். நாங்கள் ஐஏஎஸ் முத்திரை குத்திய ஐயர்கள். நான் மிகவும் கட்டுப்பாடு அடங்கிய குடும்பத்தில் இருந்து தான் வந்தேன். ஆனால் என்னுடைய தொழில் சினிமாவாக மாறிவிட்டது. சினிமாவுக்கு வந்த பிறகு நிறைய படங்களில் நடிக்க தொடங்கினேன்.
அதற்குப் பிறகு என்னுடைய ஜாதியிலேயே ஒருவரை கல்யாணம் செய்து கொண்டேன் என்று வினோதினி பேசியிருக்கிறார். வினோதினி ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக நடிப்பை விட்டு விலகி இருந்தார். அதற்கு பிறகு இப்போது மீண்டும் சின்னத்திரை மற்றும் சினிமாகளில் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஜீ தமிழில் சமீபத்தில் முடிவடைந்த சீதாராமன் சீரியலில் நடித்திருந்தார். அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலிலும் இவர் நடித்திருந்தார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications