ஒரு வீடே தாங்காது.. 2 வீட்டுடன் அதகளப்படும் பிக்பாஸ் சீசன் 7.. "இந்த" வில்லி நடிகையும் இருக்காராமே!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு வில்லி நடிகையும் கலந்து கொள்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது ராஜா ராணி ஆகும். இதில் சஞ்சீவும் ஆலியா மானசாவும் நடித்திருந்தனர். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து ராஜா ராணி 2 சீசன் தொடங்கியது. இதில் ஆல்யா மானஸா நடித்து வந்தார். அது போல் சஞ்சீவுக்கு பதிலாக சித்து நடித்து வருகிறார். இந்த சீரியலின் போது ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தார்.
ஒரு கட்டத்தில் நிறைமாதத்தை அடைந்ததால் ஆல்யா மானஸா அந்த சீரியலிலிருந்து விலகினார். இதையடுத்து அவருக்கு பதிலாக யாரை நடிக்க வைப்பது என யோசித்த நிலையில் மாடல் ரியா சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார். அந்த சீரியலில் அவர் நடித்து வந்தார். அவரும் உடல்நல பிரச்சினை காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.
அவருக்கு பதிலாக ஆஷா வெங்கடேஷ் கவுடா நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை பிரவீனாவின் முதல் மருமகள் கேரக்டரில் நடித்து வந்தவர் அர்ச்சனா. இவர் சந்தியாவுக்கு எதிராக வில்லத்தனம் செய்து வந்தார். வில்லி என்றாலே முகத்தில் அத்தனை கோபம், அரக்க சிரிப்புடன் பார்த்திருக்கிறோம். ஆனால் அர்ச்சனா வித்தியாசமான வில்லியாக வலம் வந்தார்.
இவரது காமெடி கலந்த வில்லத்தனத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இந்த சீரியிலில் இருந்து நடிகை அர்ச்சனா விலகிவிட்டார். இந்த நிலையில் இந்த கேரக்டரில் வேறு ஒருவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 7இல் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்குகிறது.
இவர் ஏற்கெனவே பிக்பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்கிறார் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது இந்த சீசனில் அவருடைய பெயர் அடிபடுகிறது. இந்த முறை பிக்பாஸ் இரு வீடுகளை கொண்டிருக்கிறது. இரு வீடுகளிலும் யார் யாரை தங்க வைக்க போகிறார்கள். விதிகளில் ஏதேனும் மாற்றமா என்பது குறித்த தகவல்கள் எல்லாம் இனிதான் வெளியாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications