தாடி பாலாஜிக்கு டஃப் கொடுத்த ரசிகர் செயல்.. மறக்க முடியாத பதில் கொடுத்த யாஷிகா ஆனந்த்
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்தின் தீவிரமான ரசிகர் ஒருவர் செய்த செயலை பார்த்து கடுப்பாகி யாஷிகா அதற்கு யாரும் எதிர்பார்க்காத பதில் கொடுத்திருக்கிறார். அதை இணையத்தில் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
யாஷிகா ஆனந்த் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதிகமாக கிளாமர் காட்சிகளில் நடித்து இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகியாக ஆரம்பத்தில் இருந்தார். அதற்கு பிறகு துருவங்கள் 16 என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமாகி பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் மூலமாக ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார்.

இதுவரைக்கும் யாஷிகா ஆனந்த் பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமான திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அதில் எல்லாம் அதிகமாக கவர்ச்சி ரோலாக தான் கிடைத்து வருகிறது.
ஆனாலும் எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் விட மாட்டேன் என்று அதில் யாஷிகா கலக்கிக் கொண்டிருக்கிறார். அதுபோல சின்னத்திறையில் ஒரு சில சீரியல்களிலும் கெஸ்ட் ஆக கலந்து கொண்டு இருக்கிறார். அதுபோல கடந்த சில வருடங்களுக்கு முன்பு யாஷிகா ஆனந்த் விபத்து ஒன்றில் சிக்கி இருந்தார். அப்போது அவர் பிழைத்ததே மறு பிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

அவருடைய தோழி சம்பவ இடத்திலேயே காலமானார். தன்னுடைய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்து மீண்டும் போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருக்கும் யாஷிகா ஆனந்துக்கு அவருடைய ரசிகர் ஒருவர் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதாவது யாஷிகா ஆனந்தின் உருவத்தை தன்னுடைய நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறார்.

அந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர் யாஷிகா ஆனந்த்தை டேக் செய்திருக்கிறார் அதை பார்த்து கடுப்பான யாஷிகா ஆனந்த், "என்னுடைய புகைப்படத்தை ரசிகர் ஒருவர் நெஞ்சில் டாட்டூ போட்டு இருப்பதை பார்த்தேன். அப்படி செய்த போது எவ்வளவு வலித்திருக்கும்? ஏன் இப்படி செய்கிறீர்கள்? உங்களுடைய அம்மாவை சந்தோஷப்படுத்துங்கள் அதுதான் எனக்கு சந்தோஷம்" என்று பதிவிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கும் முன்பு நடிகர் தாடி பாலாஜி நடிகர் விஜய்யின் உருவத்தை தன்னுடைய நெஞ்சில் பச்சை குத்தியிருந்தார். இப்போது அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் யாஷிகா ஆனந்த் ரசிகர் செயல்பட்டு இருக்கிறார் என்று இணையத்தில் சிலர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

அதுபோல யாஷிகா அஜித் போல ரசிகர்கள் செய்யும் செயலைப் பார்த்து கடுப்பாகி பதிவிட்டு இருப்பதை சிலர் பாராட்டியும் வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சில மாதங்களுக்கும் முன்பு யாஷிகா ஆனந்த்தின் புகைப்படத்திற்கு ஒரு ரசிகர் கையில் சூடம் ஏற்றி வழிபடுவது போன்று போஸ்ட் போட்டிருந்தார்.
அதையும் ஷேர் செய்த யாஷிகா அதற்கும் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருந்தார். அதில், "நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதர் தான். அன்பை மட்டும் பரப்புவோம். நமக்கெல்லாம் மேலே இருக்கும் கடவுளை மட்டும் வணங்குவோம்" என்று அறிவுரை கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications