அட்ஜஸ்ட்மென்ட்.. இந்த நடிகையை கூட விட்டு வைக்கவில்லையா.. படுக்கைக்கு அழைத்த படக்குழு
சென்னை: சினிமா மற்றும் சின்னத்திரையில் இருக்கும் பல நடிகைகள் தாங்கள் அட்ஜஸ்மெண்ட் பிரச்சனையை சந்தித்ததாக பேட்டிகளில் பேசி இருக்கிறார்கள். அந்த வரிசையில் டாப் நடிகைகளாக இருக்கும் ஒரு சிலருக்கும் அட்ஜஸ்மென்ட் பிரச்சனை வந்திருக்கிறது என்று அவர்கள் வெளிப்படையாக பேசி இருக்கும் நிலையில் அது பற்றி பார்க்கலாம்.
சினிமாவில் ஹாஸ்டிங் கவுச் என்று அழைக்கப்படும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் மோசமான செயல் நடைபெற்று வருவதாக பல நடிகைகளும் பேட்டிகளில் பேசியிருக்கிறார்கள். இது குறித்து தான் சமீபத்தில் கூட மலையாள திரை உலகில் நடக்கும் அவலங்களை ஹேமா அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தது.
இந்த அட்ஜஸ்டமென்ட் பிரச்சனை தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் ஹாலிவுட், சின்னத்திரை என்று எல்லா இடத்திலும் நடிகைகளுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதில் ஒரு சில நடிகைகள் மட்டும் தாங்கள் அனுபவித்த பிரச்சனைகள் அல்லது தாங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக பேசி விடுகிறார்கள். அந்த வகையில் தாங்கள் அனுபவித்த பிரச்சினைகள் பற்றி பேசிய ஒரு சில டாப் நடிகைகள் பற்றி பார்க்கலாம்.
நடிகை பாயல் கோஷ்: இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி நடிகையாக இருக்கிறார். அதோடு இந்திய குடியரசு கட்சியின் மகளிர் பிரிவின் துணை தலைவராக இருக்கிறார். அவர் திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் காசியப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

நடிகை மம்தா குல்கர்னி: இவர் தயாரிப்பாளர் ராஜ்குமார் சந்தோஷி தயாரித்த ஒரு படத்தில் தான் நடித்த போது ராஜ்குமார் சந்தோஷி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.

நடிகை மல்லிகா ஷெராவத்: மல்லிகா ஷெராவத் பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் தசாவதாரம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அவரும் தான் ஹாஸ்டிங் ஹவுச் பிரச்சனைகளை எதிர்கொண்டதாக கூறியிருக்கிறார்.

நடிகை அஹானா கும்ரா: அஹானா தன்னிடம் தொகுப்பாளர் மற்றும் காமெடி நடிகரான சஜித் கான் தவறாக முறையில் நடந்து கொண்டதாகவும், 100 கோடி கொடுத்தால் நாயுடன் உடலுறவு வைத்துக் கொள்வீர்களா? என்று கேட்டதாகவும் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

நடிகை டிஷ்கா சோப்ரா: டிஸ்கா சோப்ரா நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், எழுத்தாளர் என்று பல முகங்கள் கொண்ட இவர் தானும் ஹாஸ்டிங் கவுச் பிரச்சனைகளை சந்தித்ததாக கூறி இருக்கிறார்.

நடிகை மந்தனா கரிமி: மந்தான கரிமி தான் நடிக்க இருந்த படத்தின் தயாரிப்பாளர் தன்னை ஒரு அறையில் அடைத்து அங்கு தன்னுடைய உடைகளை கழட்ட சொன்னதாகவும் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.













Click it and Unblock the Notifications