எதிர்நீச்சலில் இனி ஆதி குணசேகரனின் நிலைமை..? வேல ராமமூர்த்தி வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரன் கேரக்டரில் தற்போது நடித்து வருகிறார்.

ஏற்கனவே இந்த கேரக்டரில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்த நிலையில் அவர் திடீரென்று காலமானதால் அவருக்கு பதிலாக வேல ராமமூர்த்தி கடந்த வாரத்திலிருந்து சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார்.

Adi Gunasekarans situation in ethirneechal serial Posted by Velaramamurthy

இந்த நிலையில் அவர் சீரியலில் இனி அதிகமாக வர மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்திருக்கிறது. அதே நேரத்தில் தற்போது வேல ராமமூர்த்தி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தான் எங்கே இருக்கிறேன் என்பது பற்றிய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் குறித்த எதிர்பார்ப்பும் அந்த சீரியல் பற்றிய பரபரப்பும் சமூக வலைத்தளத்தில் எப்போதுமே இருந்து வருகிறது. ரசிகர்களின் மத்தியில் எதிர்நீச்சல் சீரியலில் இனி என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலில் இருந்து வருகிறது. இந்த சீரியல் இரண்டு வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வந்திருந்தாலும் கண்டிப்பாக இந்த சீரியல் 5 வருடங்கள் ஒளிபரப்பாகும் என்று சீரியலில் இயக்குனர் கூறியிருக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்தே கதையின் வேகம் மற்றும் நடிகர்களின் நடிப்பு திறமை வித்தியாசமான காட்சி அமைப்புகள் போன்றவை ரசிகர்களின் மத்தியில் இந்த சீரியலுக்கு தனி இடத்தை பெற்று விட்டது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அதிகமான ஒப்பனைகள் இல்லாமல் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் போன்று இருப்பதும் இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த நிலையில் தான் இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் குணசேகரனாக நடித்து வந்த மாரி முத்துவின் மரணம் ஏற்பட்டது.

Adi Gunasekarans situation in ethirneechal serial Posted by Velaramamurthy

அதுவரைக்கும் வீட்டு பெண்கள் எப்போது சுயமாக முடிவெடுத்து வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பும் அதே நேரத்தில் குணசேகரனின் நக்கல் நையாண்டி தனத்தையும் அதிகமான ரசிகர்கள் ரசித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு அவருடைய கேரக்டரில் நடிகர் வேல ராமமூர்த்தி அறிமுகமானார்.

அறிமுகமான முதல் நாளே தான் வேற ரகம் என்று சொல்கிற மாதிரி தன்னுடைய நடிப்பை தத்துரூபமாக காட்டி இருந்தார். ஆனால் ஏற்கனவே மாரிமுத்துவின் நடிப்போடு ஒன்றி போன ரசிகர்கள் குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடிப்பை வித்தியாசமாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில் புது குணசேகரன் தினமும் தன்னுடைய நடிப்பை ரசிகர்களின் மத்தியில் காட்டி வந்தாலே அவர் அந்த கேரக்டரில் ரசிகர்களின் மனதில் பதிய தொடங்கி விடுவார். ஆனால் அவர் ஆரம்பமான ஒரு சில நாட்களிலேயே தான் ஜெயிலுக்கு போகிறேன் என்று டாடா வேல ராமமூர்த்திவிட்டு கிளம்பி போயிருக்கிறார். இந்த நிலையில் அவர் நிஜத்தில் நான் பாரிஸில் இருக்கிறேன் என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Adi Gunasekarans situation in ethirneechal serial Posted by Velaramamurthy

ஏற்கனவே வேல ராமமூர்த்தி படங்களில் பிசியாக இருந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் அவர் குணசேகரன் ஆக அறிமுகமாகி விட்டு தன்னுடைய பழைய திரைப்படங்களின் நடிப்பதற்கு பாரிஸிற்கு கிளம்பி போய்விட்டார். இனி அங்கு சூட்டிங் முடிந்த பிறகு தான் எதிர்நீச்சல் சீரியலில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சீரியலில் அவர் இல்லாததால் இனி கதை சொதப்பி விடுமோ என்றும் ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+