திருமணத்திற்கு பிறகு கண்ணீரோடு தீபிகா வெளியிட்ட பதிவு.. ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்
சென்னை: கனா காணும் காலங்கள் சீரியல் நடிகை தீபிகாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் முடித்தது.
அந்த சீரியலில் அவரோடு நடித்த நடிகர் ராஜா வெற்றி பிரபுவை தான் தீபிகா திருமணம் செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் வெளியிட்ட வீடியோ ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து இருப்பது குறித்து கண்ணீரோடு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் சீரியல் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் அதன் கேரக்டர்களின் படியே ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த சீரியலில் அபி கேரக்டரில் நடிகை தீபிகா நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோ ஷூட் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வரும் தீபிகாவிற்கு அதிகமான ரசிகர்கள் பாலோவர்ஸ்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் அவரோடு கௌதம் கேரக்டரில் நடிக்கும் ராஜா வெற்றி பிரபுவை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து இருந்தார்.

அடிக்கடி லைவில் வந்து பேசும் தீபிகா தன்னுடைய காதல் விஷயங்களை கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். தான் ஆறு வருடங்களாக நண்பராக பழகி வந்த தன்னுடைய நண்பரை தன்னுடைய வீட்டில் உள்ளவர்களின் சம்மதத்தோடு விரைவில் திருமணம் செய்யப் போகிறேன் என்று இவர் கூறியிருந்தார். ஆனால் யார் அந்த நண்பர் என்பதை கூறாமல் இருந்த நிலையில் தன்னுடைய நிச்சயதார்த்த நாள் அன்று, அது ராஜா வெற்றி பிரபு தான் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதற்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்றிருந்த தீபிகா மற்றும் ராஜ வெற்றி பிரபு அங்கிருந்தும் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தனர்.

வாழ்வில் வரும் சோகம், சந்தோசங்களை instagram-யில் பகிர்ந்து கொள்ளும் பிரபலங்களில் தீபிகாவும் ஒருவர். தன்னுடைய ரீல்ஸ் வீடியோ ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருப்பதை குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு வெளியிட்ட தீபிகா கண் கலங்கி படி ஆனந்த கண்ணீர் விட்டிருக்கும் இமேஜ்களை அதில் பகிர்ந்து இருக்கிறார்.
அதோடு தான் இந்த பதிவு வெளியிட்டது விளம்பரத்திற்காக அல்ல. என்னுடைய அன்பை வெளிக்காட்டுவதற்காக, என்னுடைய பதிவை படித்த ரசிகர்களுக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார்.அது மட்டும் அல்லாமல் தன்னுடைய திருமண புகைப்படம் ஒன்றை இன்னொரு பதிவாகவும் பதிவிட்டு இருக்கிறார். அதில் தனக்கு ஒரே பெண்மை பீலிங்காக இருக்கிறது என்று உருக்கமாக அவர் தன்னுடைய பீலிங்கை பகிர்ந்து இருக்கிறார்.
-
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications