மாரிமுத்து இறந்தது இயற்கை இல்ல.. இதனால்தான் இறந்தார்..! பகீர் காரணம் சொன்ன திடீர் அகோரி கலையரசன்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் ஆரம்பத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து கடத்த வருடத்தில் திடீரென டப்பிங் பேசும் போது ஏற்பட்ட உடல்நல பிரச்சனையால் மருத்துவமனைக்கு சென்ற சென்றிருந்த நிலையில் அங்கு காலமாகி இருந்தார். இந்த நிலையில் இவருடைய இறப்பு இயற்கை கிடையாது என்று சமீபத்தில் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் அகோரி கலையரசன் கூறியிருக்கிறார்.
அகோரி கலையரசன் சில வருடங்களுக்கு முன்பு டிக் டாக்கில் அதிகமான வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமாகி இருந்தார். கலையரசனும் அவருடைய மனைவியும் டிக் டாக் பிரபலங்களாக இருந்தனர். ஆனால் இப்போது அவர் அகோரியாக மாறியிருக்கும் நிலையில் சமீபத்தில் பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார். அந்த நிலையில் தான் நடிகர் விஜயகாந்த் மற்றும் மாரிமுத்துவின் இறப்பு குறித்து அகோரி கலையரசன் பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடிகர் மாரிமுத்து உதவி இயக்குனராக சில திரைப்படங்களில் வேலை செய்துவிட்டு இயக்குனராக புலிவால், கண்ணும் கண்ணும் என்ற ஒரு சில திரைப்படங்களை இயக்கிவிட்டு பிறகு பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். அதிகமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் தான்.
இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்த நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட உடல்நல பிரச்சனையால் மருத்துவமனைக்கு போயிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் காலமாகி இருந்தார். இந்த செய்தி மாரிமுத்துவின் குடும்பத்தினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிக அளவில் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இப்ப வரைக்கும் அடிக்கடி மாரிமுத்து குறித்து பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இணையத்தில் வைரலாக இருக்கும் அகோரி கலையரசன் மாரிமுத்துவின் இறப்பு இயற்கையானது கிடையாது என்று பேசி இருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. அதாவது கலையரசன் அந்த வீடியோவில் பேசுகையில் நடிகர் மாரிமுத்து இறந்தது பலரும் உடல் நலக்குறைவு, மாரடைப்பு என்கிறார்கள்.
ஆனால் அது எல்லோரும் சொல்வது போல அது இயற்கை மரணம் அல்ல அதுபோல சிலர் அவருக்கு நடந்தது விதிப்படி நடந்து இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அது விதிப்படி நடந்ததும் கிடையாது. மாரிமுத்து ஒரு சீரியலில் கேரக்டராக நடித்திருக்கிறார். ஆனால் அந்த சீரியல் இந்தியாவில் உள்ள எல்லா வீடுகளிலும் ஓடக்கூடியது. மக்கள் அதை தினமும் பார்க்கிறார்கள். அந்த சீரியலில் அவர் முழுக்க முழுக்க பெண்களை வற்புறுத்துவராகவும் டார்ச்சர் செய்வாராகவும் நடிக்க வைத்திருக்கின்றனர்.
சீரியலில் அவர் பெண்களை கொடுமைப்படுத்தும் கேரக்டராக இருந்திருக்கிறார். அதனால் ஊரில் உள்ள எல்லோருமே அந்த சீரியலை பார்க்கும்போது மாரி முத்துவை காட்டும்போது இவனுக்கு ஒரு சாவு வராதடா.. இப்படி பொம்பளைகளை டார்ச்சர் பண்ணுன்னு வாய் வழியாக சொன்ன அபசகுன வார்த்தைகளால் தான் அவர் இறந்து போனார் என்று ட்ரெண்டிங் சாமியார் கலையரசன் பேசியிருக்கையில் இந்த வீடியோவிற்கு அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
அதுபோல நடிகர் விஜயகாந்த் மற்றும் சமீபத்தில் காலமான பங்காரு அடிகளார் போன்றோரின் இறப்பு எனக்கு முன்பே தெரியும் என்றும் அந்த வீடியோவில் கலையரசன் பேசியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் என் கண் முன்பு யார் வந்தாலும் அவர்களுடைய மரணத்தை நான் கணித்து விடுவேன் என்று அனைவரையும் பயமுறுத்தி இருக்கிறார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications