நளினி, ராமராஜன் அன்பு.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் வாழ்வில் அதே மகிழ்ச்சி.. நொறுங்கிய ஈகோ: பிரபலம்
சென்னை: நடிகர் தனுஷ், குபேரன் பட விழாவில் பேசியபோது, "இருட்டுல நான் வழி தவறி காணாமல் போகும்போது என்னுடைய ஒவ்வொரு ரசிகனும் தீப்பந்தம் ஏந்தி என்னை வழிநடத்தி கூட்டி செல்கிறார்கள். என்னை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் வதந்திகளை பரப்புங்கள். என் ரசிகர்களின் உதவியுடன் நான் மேலே சென்று கொண்டே இருப்பேன். இதை நீங்க காலி பண்ணனும் நினைத்தீர்கள் என்றால் அது உங்களின் முட்டாள் தனம். உங்களால் ஒரேயொரு செங்கலைக்கூட ஆட்ட முடியாது" என்றார். தனுஷின் இப்பேச்சுக்கு மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் கருத்து கூறியிருக்கிறார்.
BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள ராஜ கம்பீரன், "தமிழ் சினிமாவில் எந்த விவாகரத்து நடந்தாலும், அதற்கு சம்பந்தமே இல்லாமல் தனுஷ்தான் காரணம் என்று ஒரு டயலாக் இங்கு கிரியேட் ஆகிவிட்டது.. எனவேதான், இதற்கெல்லாம் ஆவேசமாக தனுஷ் பதிலளித்துள்ளார்.

எனினும், இது குடும்பத்திலுள்ள பெண்கள் குறித்த விஷயம் என்பதால், அந்தரங்கம் சம்பந்தப்பட்டது என்பதால், நேரடியாக பகிரங்கமாக பேச முடியாது.. இதுபோன்ற குடும்ப பெண்கள் குறித்த வதந்திகள் தனக்கு, தனக்கு திரைத்துறையில் பின்னடைவாக மாறிவிடும் என்று அச்சப்பட்டுத்தான், மறைமுகமாக எச்சரித்து பேசியிருக்கிறார் தனுஷ்..
வாழ்ந்து காட்ட வேண்டும்
தன்னை விமர்சிப்பவர்களை பழிவாங்குவதில் 2 வகை உண்டு.. விமர்சிப்பவர்களை நேரடியாக பழிவாங்க வேண்டும் என்ற அவசியமில்லை.. நம்மை சாபம் விட்டவர்கள், சபிக்கிறவர்கள், தோற்று போக வேண்டும் என்று துடிப்பவர்களுக்கு மத்தியில் வாழ்ந்து காட்டுவதும் ஒருவகையான பழிவாங்குதல்தான்..
வெற்றிதான் ஒருவரின் முகவரி.. உங்களது திறமைகளை நிரூபித்துவிட்டால், உலகம் உங்கள் பின்னால் வராது.. தனுஷ் நடிக்கும் படங்களாகட்டும், தேர்வு செய்யப்படும் கதைகளாகட்டும், மகத்தான கலைஞனாக தன்னை நிரூபித்து வருகிறார்..
தொடர்ந்து வரும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் தனுஷூக்கு இன்று ஏற்பட்டுள்ளது.. எந்த வதந்திகளுக்குமே பதில் சொல்லாவிட்டால், அது உண்மை என்றுகூட பலர் எடுத்து கொள்ள நேரிடும்.. எனவே, குபேரன் பட விழாவில் ரியாக்ட் செய்ய வேண்டியதாயிற்று..
தம்பதியின் நெகிழ்ச்சி தருணம்
மகனின் பட்டமளிப்பு விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே கலந்து கொண்டார்கள்.. தம்பதிக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், குழந்தைகளுக்கு அப்பா, அம்மா இருவருமே வேண்டும்.. அந்த நெகிழ்ச்சி தருணம்தான் அது.
அளவுக்கு அதிகமான புகழ் அடைபவர்களுக்கு, அளவுக்கு அதிகமான செல்வத்தை கொண்டவர்களுக்கு, அளவுக்கு அதிகமான கொண்டாட்டத்தில் ஈடுபடுவோருக்கு சாதாரண வாழ்க்கை நிலைக்காமல் போய்விடும்.. பெரிய கலைஞர்களுக்கு விவாகரத்து நடப்பதற்கு இதெல்லாம்தான் ஒரு காரணம்.. நீ இல்லாமல் என்னால் வாழ முடியாதா? என்ற ஈகோ பிரபலங்களுக்குள் வந்துவிடும்..
சார்லி சாப்ளின்
சார்லி சாப்ளின் முதல் இந்த துயரம் நடந்துள்ளது.. எனவே பிரபலங்கள் யாராக இருந்தாலும்சரி, ரசிகர்கள் பார்க்க வேண்டியது, கலைஞர்களின் அந்தரங்கத்தை இல்லை.. அவர்களின் தனிமனித வாழ்க்கையை ஆராய தேவையில்லை.. அவர்களது கலைப்படைப்பை, கலைத்திறனை மட்டும் பார்க்கவேண்டும்.
அதையும் மீறி நடிகர்களை ஃபாலோ செய்வதாக இருந்தால், அது ரசிகர்களின் தவறுதானே தவிர, நடிகர்களின் தவறு கிடையாது.. இப்படியிருந்தால் எந்த செங்கல்லையும் யாருமே உருவ முடியாது'' என்கிறார் ராஜகம்பீரன்.
நளினி ராமராஜன்
அதேபோல, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில், ராமராஜன், நளினி பிரிந்தார்கள்.. பார்த்திபன் சீதா பிரிந்தார்கள்.. தங்களது வாரிசுகளின் திருமணத்தில் மட்டும் கலந்து கொண்டார்கள்..
இப்போதும் நண்பர்களாகவே இருக்கிறோம் என்று இந்த 2 ஜோடிகளுமே சொல்கிறார்கள்.. ஆனால், தனுஷ் - ஐஸ்வர்யா இருவருமே பிரிந்துவிடுவதாக சேர்ந்து அறிவித்துவிட்டார்கள்.. அவர்களுடைய உடல்தான் பிரிந்திருக்கிறதே தவிர, ஐஸ்வர்யா உள்ளமும்,தனுஷ் உள்ளதும் இணைந்துதான் உள்ளது என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications