'எதிர்நீச்சல் 2'க்கு வரப்போகும் திருப்பம்! - கோலங்கள் ஆதி களமிறங்குகிறாரா? அஜய் சஸ்பென்ஸ் பேட்டி
சென்னை: சன் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல் 2' சீரியல், தனது முதல் பாகத்தைப் போல டிஆர்பியில் பெரிய அளவில் ஜொலிக்காத நிலையில், வரவிருக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரம் கதையைத் திசை திருப்பி, டிஆர்பியை எகிற வைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 'கோலங்கள்' சீரியல் புகழ் நடிகர் அஜய் (ஆதி), அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக மறைமுகமாகத் தெரிவித்தது, சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

கோலங்கள் ஆதி கொடுத்த சூப்பர் சஸ்பென்ஸ்
சமீபத்தில் ஒரு பேட்டியில், 'கோலங்கள்' சீரியல் மூலம் பிரபலமான நடிகர் அஜய், 'எதிர்நீச்சல் 2' குறித்துப் பேசும்போது, "இயக்குநர் திருச்செல்வம் சார் முக்கியமான ஒரு கேரக்டர் கதை எழுதி வைத்திருக்கிறார். அந்தக் கேரக்டர் இந்த சீரியலில் வந்த பிறகு டிஆர்பி இன்னும் சூடு பிடிக்கும். அந்தக் கேரக்டர் வருகைக்குப் பிறகுதான் இந்த சீரியலில் கதை தொடங்கப்போகிறது" என்று கூறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
அப்போது தொகுப்பாளர், "அந்த முக்கிய கேரக்டரில் நடிக்கப்போவது நீங்கதானா?" என்று கேட்டதற்கு, சிரித்தபடியே, "அது சஸ்பென்ஸ்! அந்தக் கேரக்டரில் பெரிய எதிர்பாராத திருப்பங்கள் வரும். அதுவும் மக்கள் எதிர்பார்த்தபடியே இருக்கும்," என்று கூறி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளார். இந்த அஜயின் பேட்டி இணையத்தில் வைரலாகி வருவதால், 'எதிர்நீச்சல் 2' சீரியலில் 'கோலங்கள்' ஆதி மீண்டும் நடிக்கப் போகிறார் என்ற தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. இது உண்மையா இல்லையா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எதிர்நீச்சல் ஒரு வெற்றிப் பயணம்
'எதிர்நீச்சல்' முதல் பாகம், பெண்களின் உரிமை, குடும்பத்திற்குள் நடக்கும் அரசியல், சுயமரியாதை எனப் பல புரட்சிகரமான கருத்துக்களைப் பேசியது. இயக்குநர் திருச்செல்வத்தின் யதார்த்தமான காட்சி அமைப்புகளும், வசனங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. குறிப்பாக, மாரிமுத்து (ஆதி குணசேகரன்), கனிகா (ஈஸ்வரி), மதுமிதா (ஜனனி) , ஹரிப்பிரியா (நந்தினி),பிரியதர்ஷினி (ரேணுகா), சத்யபிரியா (விசாலாட்சி) போன்றோரின் நடிப்பு அபாரமாக இருந்தது.
ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மாரிமுத்துவின் வில்லத்தனமான நடிப்பு, சீரியலின் மிகப்பெரிய பலமாக இருந்தது. அவரது வசனங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆனது. 'எதிர்நீச்சல்' சீரியல் உச்சத்தில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக நடிகர் மாரிமுத்து காலமானார். இது சீரியல் குழுவிற்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்குப் பிறகு, 'ஆதி குணசேகரன்' கதாபாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்தார் ஆனாலும், மாரிமுத்துவின் ஆளுமையையும், பாத்திரத்திற்கு அவர் கொடுத்த உயிரோட்டத்தையும் வேறு யாராலும் முழுமையாக ஈடு செய்ய முடியவில்லை. இது முதல் பாகத்தின் இறுதிப் பகுதியில் டிஆர்பியில் சற்றுக் குறைவை ஏற்படுத்தியது.
எதிர்நீச்சல் 2- புதிய அத்தியாயம்
முதல் பாகம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, 'எதிர்நீச்சல் 2' தொடங்கப்பட்டது. இந்தப் பாகத்தில், கதை சற்று வேறு திசையில் பயணிக்கிறது. இந்தப் பாகமும் குடும்ப உறவுகள், சவால்கள், புதிய கதாபாத்திரங்கள் எனத் தொடர்கிறது. இருப்பினும், முதல் பாகம் ஏற்படுத்தியிருந்த பெரிய எதிர்பார்ப்பை இரண்டாம் பாகம் இன்னும் முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்பதே ரசிகர்களின் கருத்து. இந்தச் சூழ்நிலையில்தான், நடிகர் அஜய் ஒரு முக்கிய கதாபாத்திரம் குறித்துப் பேசியிருப்பது, 'எதிர்நீச்சல் 2' சீரியலுக்குப் புத்துயிர் அளிக்கும் ஒரு திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. அஜய் அந்த கதாபாத்திரத்தில் நடித்தால், அது டிஆர்பியை உயர்த்த உதவுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications