குட் பேட் அக்லி சக்சஸ்? அதுவிடுங்க, அஜித்தை "இவர்" ஏன் சந்திக்கணும்? "இடிக்குதே".. சர்ப்ரைஸ் தர்றாரா
சென்னை: அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ளது. முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்பட்ட இந்த படம், இப்போது ஏப்ரல் 10ம் தேதி வெளியாக போகிறது.. தமிழ் புத்தாண்டு விடுமுறையை கணக்கில் கொண்டு, இந்த படம் ரிலீஸ் செய்யப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில், அஜித், விஜய் குறித்த முக்கிய தகவல் ஒன்று கசிந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "மே 1ம் தேதி பிறந்தார் அஜித்.. அதேபோல, தன்னுடைய படங்கள் அனைத்தையுமே, 1ம் எண் வரக்கூடிய தேதிகளிலேயே வெளிவருவதை பார்த்து கொள்வார்.. 1ம் நம்பர் என்பது சூரியனை குறிப்பது.. அதுபோல, அஜித்தின் படங்களும் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதால், இப்படி 1ம் எண்ணுடன் வருவது போல ரிலீஸ் தேதிகளை பார்த்து கொள்வார்.

அஜித்தின் அடுத்த படத்துக்கு 4 டைரக்டர்கள் இப்போதே வரிசைகட்டி நிற்கிறார்கள். அஜித்தின் அடுத்த படத்தை தான் செய்வதாக சிவா ஏற்கனவே கூறியிருந்தார்.. அதேபோல, பில்லா படம் எடுத்த விஷ்ணுவர்த்தனும், அஜித்தை வைத்து எடுக்க உள்ளதாக தெரிகிறது..
அடுத்தடுத்த படங்கள்
குட் பேட் அக்லி படத்தை அஜித் பார்த்துவிட்டு, அந்த படம் தனக்கு எப்படி போகிறது என்பதை பார்த்துதான், தன்னுடைய அடுத்த டைரக்டர் யார் என்பதை முடிவு செய்வார். தற்போதைய படம் சூப்பராக ஓடினால் ரவிச்சந்திரனுக்கே அடுத்த படம் தரலாம்.. அல்லது சிவாவுக்கு தரலாம் அல்லது விஷ்ணுவர்த்தனுக்கும் தரலாம்..
இந்நிலையில், அஜித்தை சந்திக்க விஜய் டைம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.. ஏற்கனவே, கார் ரேஸில் அஜித் வெற்றி பெற்றபோது, விஜய் வாழ்த்துவார் என்று எல்லாருமே எதிர்பார்த்தார்கள்.. ஆனால், எதுவுமே சொல்லவில்லை..
அஜித்தால் கடுப்பான விஜய்
அதுமட்டுமல்ல, துபாயில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித், "அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?" என்று ரசிகர்களுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.. அஜித் இப்படி கேட்டது விஜய்யை கடுப்பாக்கியதாக சொன்னார்கள்..
அதேபோல, அஜித்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டபோது, விஜய்யின் மகன் சஞ்சய் உடனே அஜித்துக்கு போனில் பேசி வாழ்த்து சொன்னதாக தெரிகிறது.. அப்போது அஜித், தற்போது மேற்கொண்டு வரும் சினிமா பணிகள் எப்படி செல்கின்றன? என்பது குறித்தெல்லாம் சஞ்சயிடம் விசாரித்தாராம் அஜித்.. எனினும், பத்மபூஷன் தந்தபோதும் விஜய் வாழ்த்துவார்கள் என்று அனைவருமே எதிர்பார்த்தார்கள். அப்போதும் அஜித்தை விஜய் வாழ்த்தவில்லை.
எதற்காக அப்பாயிண்மென்ட்?
இதுவரை எதற்காகவும் அஜித்தை வாழ்த்தாதவர், இதுவரை போனில் பேசாதவர், இப்போது நேரில் சந்திக்க டைம் கேட்டுள்ளார்.. இதற்கான காரணம்தான் தெரியவில்லை.. ஒருவேளை ஜன நாயகன் கடைசி படம் என்பதால், அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, அது பற்றி பேசலாம்.
அதேபோல, விஜய் கட்சி துவங்கியிருப்பதால், அஜித்துடன் நல்ல நட்பில் தான் இருப்பதாக வெளிக்காட்டி கொண்டால், அஜித்தின் ரசிகர்களும் தனக்கு ஆதரவு தருவார்கள் என்றும் விஜய் நம்பலாம்.. அதுமட்டுமல்ல, ஜன நாயகன் கடைசி படம் வெற்றி பெற வேண்டும் என்பதால், அதையும் அஜித்தின் ரசிகர்கள் வெற்றி பெற செய்வார்கள் என்றும் விஜய் கணக்கு போடலாம். எப்படியோ தனக்கான ஆதரவை கோரவே அஜித்தை விஜய் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications