Ajith: "என்னை போன்றவனுடன் வாழ்வது எளிதல்ல!" ஷாலினியின் தியாகம் குறித்து நெகிழ்ந்த அஜித்! ரகசியம் உடைந்தது
சென்னை: தமிழ் திரையுலகில் தனதுத் தனித்துவமான ஆளுமை, எளிமை, மற்றும் வெளிப்படையாக பேசுவதால் ரசிகர்களின் இதயத்தில் ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் அளித்தப் பேட்டியில், தனது வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ஒரே சக்தி -- தனது மனைவி ஷாலினிதான் என்றுப் பெருமையுடனும், நெகிழ்ச்சியுடனும் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித்தின் ஆழமான வார்த்தைகள்
சினிமா உலகில் 'தல' என அழைக்கப்படும் அஜித், தற்போது தனதுத் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில விஷயங்களைப் பகிர்ந்து அனைவரையும் கவர்ந்துள்ளார். குறிப்பாக, தனதுக் கடினமானப் பயணத்தில் மனைவி ஷாலினியின் பங்களிப்பை பற்றி அவர் பேசிய வார்த்தைகள், அவரதுப் பந்தத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது:
"நான் ஷாலினிக்குக் கடமைப்பட்டுள்ளேன். ரேஸிங்கில் பங்கேற்கிறேன்... சண்டை காட்சிகளில் நானே நடிக்கிறேன்... என்னைப் போன்றவனுடன் வாழ்வது எளிதான விஷயமல்ல. ஆனால் ஷாலினி எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். இவையெல்லாம் அவரின் துணை இன்றி சாத்தியமாகி இருக்காது."
நடிகர் அஜித், சாகசங்களில் ஆர்வம் கொண்டவர். கார் மற்றும் பைக் ரேஸிங், சண்டை காட்சிகளில் துணிச்சலாக டூப் இல்லாமல் நடிப்பது போன்ற விஷயங்களால் அவர் பலமுறை விபத்துக்களைச் சந்தித்துள்ளார். அவருக்கு 129க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடந்திருப்பதாகக் கூட சமீபத்தியப் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இவ்வளவுச் சவால்களுக்கு மத்தியில், மன உறுதியோடு அவருக்குத் துணையாக இருக்கும் ஷாலினியின் தியாகத்தை அஜித் ஒருபோதும் மறப்பதில்லை.
அமர்க்களம் காதல்
அஜித் குமார் மற்றும் ஷாலினியின் காதல், 1999ஆம் ஆண்டு வெளியான 'அமர்க்களம்' திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது மலர்ந்தது. அந்தக் காலத்திலேயே இவர்களின் காதல் வாழ்க்கை ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2000ஆம் ஆண்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டு தங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினர். அஜித்தின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களில், ஷாலினியின் நிதானமான ஆதரவு அவருக்குப் பெரிய பலமாக இருந்தது.
தியாகம்
திருமணத்திற்குப் பிறகு, ஷாலினி தனது வெற்றிகரமான சினிமா வாழ்க்கையிலிருந்து விலகி, முழுமையாகக் குடும்பத்தைப் பராமரிக்க முடிவு செய்தார். ஷாலினியின் இந்தத் தியாகத்தை அஜித் பலமுறைப் பொது மேடைகளில் பெருமையாகக் குறிப்பிட்டு, தனது நன்றி உணர்வை வெளிப்படுத்தி வருகிறார்.

அஜித்தின் வேறுபட்ட பார்வைகள்
அஜித், ஷாலினி குறித்து பேசியது மட்டுமின்றி, பொதுவெளியில் தான் வெளிப்படுத்தும் சில விஷயங்களுக்காகவும் சமீபத்தில் பாராட்டுகளைப் பெற்றார். சமீபத்தில் நடந்த கரூர் துயர சம்பவம் மற்றும் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சிக் கொண்டாட்டம் குறித்துப் பேசிய அஜித், ரசிகர்கள் மோதிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தனது ரசிகர்கள் எப்போதும் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுரைகளை வழங்கியிருந்தார். ரசிகர்களை ஒரு நேர்மறையானப் பாதைக்கு வழிநடத்த அவர் எடுக்கும் முயற்சி மிகுந்தப் பாராட்டுகளைப் பெற்றது.

மகனின் ஏக்கம்
தனது மகன் ஆத்விக் தன்னை ஏன் பள்ளிக்கு அழைத்துச் செல்ல மறுக்கிறார் என்று அழுது கேட்டதாகவும், ஆனால் ஒரு நடிகர் என்பதால், அவர் காரில் சென்றால் பலர் பைக்கில் போட்டோ எடுப்பதற்காக பாலோ பண்ணுவாங்க என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காகவே தவிர்ப்பதாகவும் அவர் உருக்கமாக பேசியது, அஜித்தின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் சவால்களை வெளிப்படுத்தியது.
தன் மனைவியின் உறுதுணையையும், தன்னுடைய ரசிகர்களின் பாதுகாப்பையும் மதித்து வாழும் அஜித்தின் இந்த வெளிப்படையான பேச்சு, சினிமா நட்சத்திரங்களை பற்றிய ரசிகர்களின் பார்வையை மேலும் ஆழப்படுத்தியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications