Ajith: என் அப்பா இறந்த போது கூட அப்படி பண்ணுனாங்க! நானும் தப்பு பண்ணி இருக்கிறேன்! உருக்கமாக பேசிய அஜித்
சென்னை: தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். பல வருடங்களாகவே இவருக்கும் விஜய்க்கும் சினிமாவில் ஆரோக்கியமான போட்டியில் இருந்தனர். இப்போது விஜய் தீவிர அரசியலுக்குப் போய்விட்ட நிலையில், சினிமாவில் அவருக்குப் போட்டி இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. பொதுவாகப் பல வருடங்களாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டி கொடுக்காத அஜித், அவ்வப்போது தனது கார் ரேஸ் போன்ற பொழுதுபோக்கு துறைகள் தொடர்பான சில ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தனது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பத்தின் வலிகள், அரசியல் நிலைப்பாடு, மற்றும் சக நடிகரான விஜய் குறித்த பார்வை என பல விஷயங்களை மனம் திறந்துப் பேசியுள்ளார்.

விஜய்க்கு ஆதரவாக அஜித்
அஜித் குமார், சமீபத்தில் நடந்த கரூர் சம்பவத்திற்கு, சக நடிகரான விஜய்க்கு ஆதரவாக பேசியது கவனத்தை ஈர்த்தது. "கரூர் சம்பவத்திற்கு ஒருவரை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது, நம் அனைவருமே பொறுப்பேற்க வேண்டும்" எனக் குரல் கொடுத்தார். அதன்பின், "நான் பேசியதை விஜய்க்கு எதிராகச் சிலர் சித்தரிக்கிறார்கள். அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்" என்றும், தான் எப்போதும் விஜய்க்கு நன்மையே விரும்புவதாகவும் தெளிவுபடுத்தினார்.
உடைந்து போன அஜித்
நடிகரான பிறகு தான் சந்திக்கும் தனிப்பட்ட வாழ்க்கை சவால்கள் குறித்துப் பேசிய அஜித், தனது குழந்தைகளை பற்றி கூறியபோது கலங்கிப் போனார். "நடிகரான பின் **பிரைவசியாக இருக்க முடியவில்லை. என் விருப்பப்படி எங்கும் தனியாகச் செல்ல முடியவில்லை." "என் குழந்தைகள் இருவரும் 'அப்பா, உங்களால் ஏன் மற்ற அப்பாக்களை போல எங்களுடன் இருக்க முடியவில்லை? ஏன் பள்ளிக்கு வர முடியவில்லை?' என்று கேட்கிறார்கள்" என்று தான் ஒரு தந்தையாக படும் வலியைப் ஃபீல் பண்ணிப் பேசியிருக்கிறார்.
உயிர் இல்லாத உடலின் வீடியோ
தனது தந்தையின் இறுதி சடங்கின் போது, ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் குறித்து பேசிய அஜித், தனதுக் கோபத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். "என் தந்தை உயிரிழந்த போது, அவரின் உடலை நான் அடக்கம் செய்ய எடுத்துச் சென்று கொண்டிருந்த போது சில ஊடகங்கள் எங்கள் பின்னால் வந்து கேமராவுடன் அதைப் படம் பிடிக்க முயற்சி செய்தார்கள். உயிர் இல்லாத அந்த உடலின் வீடியோ காட்சிகளை பதிவு செய்ய முயற்சி செய்தார்கள். மிகவும் கஷ்டப்பட்டு அதைத் தடுத்தோம்."
பொறுப்பேற்ற அஜித்
"ஊடகங்களே இப்படி எனில், ரசிகர்களையும், தொண்டர்களையும் நாம் குறை சொல்ல என்ன உரிமை இருக்கிறது? ஏற்கனவே நான் சொன்னது போல, இந்தத் தவறுகளுக்கு நானும் பொறுப்பேற்கிறேன். என்னிடமும் தவறுகள் இருக்கிறது" என்று அவர் பேசியிருப்பது, நடிகர்கள் மீதான பொதுமக்களின் எதிர்பார்ப்பு குறித்தக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
நான் தமிழன் என சொல்ல வைப்பேன்
அஜித் எப்போதும் தன் பூர்வீகம் குறித்துப் பேசப்படுபவர்களுக்குத் தைரியமாகப் பதிலளித்துள்ளார். "நான் தமிழன் இல்லை என்றுச் சிலர் பேசுகிறார்கள். ஆனால், ஒரு நாள் அவர்கள் நான் தமிழன் எனச் சத்தமாகச் சொல்ல வைப்பேன்." "கார் ரேஸில் சாதனை செய்து இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன்" என்றெல்லாம் தடாலடியாகப் பேசியிருக்கிறார் அஜித்.
அஜித்தின் இந்த பேட்டி, ஒரு நடிகனின் பிரபல வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் குடும்பத் தியாகங்கள், தனிப்பட்ட வலிகள் மற்றும் சமூகத்தில் நிலவும் விமர்சனங்கள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த பேட்டி பலரிடமும் பாராட்டை பெற்று வருகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்!












Click it and Unblock the Notifications