அஜித்தா இப்படி? ஹெல்மெட்டை காலடியில் வைத்து.. கண்ணீர் ததும்ப.. ரோல் மாடலுக்காக செய்த செயல்!
சென்னை : தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளிலும் சிறந்த விளங்கிவரும் அஜித்குமார் கார் ரேசிங் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் கார் ரேசில் அஜித்தின் ரோல் மாடலும் மறைந்த கார் ரேஸ் வீரருமான அயர்டன் சென்னாவிற்கு நடிகர் அஜித்குமார் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாழ்ந்தால் இப்படி வாழனும் என்று சிலர் நம்மை வியக்க வைப்பார்கள். அதுபோல ஒருவர் தான் நடிகர் அஜித்குமார். பிற நடிகர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று சினிமாவில் மட்டுமே சாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அஜித்குமார் தன்னுடைய ஆசை கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான் நான் சினிமாவிற்கு வந்தேன் என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் தனக்கு கார் ஓட்டுவது தான் ரொம்ப பிடிக்கும் கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக என்னுடைய அப்பாவிடம் கேட்டபோது, அவர் என்னால் என்னுடைய கனவுகளுக்கு உதவ முடியாது. ஆனால், நீயே அதை நிறைவேற்றிக் கொள்ளும் போது நான் தடுக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.

அஞ்சலி செலுத்திய அஜித்குமார்
அதனாலேயே சினிமாவில் மாடலாக அறிமுகமாகிய பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடித்து கதாநாயகனாகவும் புகழின் உச்சத்தில் அமர்ந்து விட்டார். சினிமாவில் பலருடைய மனதை கொள்ளை கொண்ட அஜித்குமார் தன்னுடைய கனவை நிறைவேற்றிக் கொள்வதிலும் கவனமாக இருக்கிறார். 54 வயதான அஜித்குமார் இப்போதும் கார் ரேஸில் கலந்து கொண்டு அனைவரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
அஜித் குமார் வீடியோ
இந்த நிலையில் நேற்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "இமாலோ சர்க்யூட்டில் டம்பெரெல்லௌ கார்னரில் மே ஒன்று அன்று நடைபெற்ற கார் பந்தய போட்டியில் உயிரிழந்த கார் ரேஸ் வீரரும் மூன்று முறை ஃபார்முலா 1 உலக சாம்பியன்ஷிப் வென்ற பிரேசில் நாட்டு வீரருமான அயர்டன் சென்னாவிற்கு அஜித் குமார் அஞ்சலி செலுத்தினார்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குட் பேட் அக்லி வெற்றி
அஜித் உடைய குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வெற்றி பெற்றிருந்த நேரத்திலேயே துபாயில் நடந்த கார் பந்தயம் போட்டியில் அஜித்தின் அணி மூன்றாவது இடம் பிடித்த அசத்தியது. அதைத்தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற 12வது மிச்செலின் முகெல்லோ கார் ரேசில் அஜித்குமார் பங்கேற்ற கார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியிருந்தது.
சினிமாவுக்கு முடிவு இல்லை
அதைத் தொடர்ந்து பெல்ஜியம் ஸ்பா பிரான்ஸ் பந்தயத்தில் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறது. குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு புதியதாக எந்த படத்தில் அஜித் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அது பற்றி எந்த அப்டேட்டும் அஜித் தரப்பிலிருந்து கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் நான் ஓய்வு பெறப்போவது இல்லை என்றும் அஜித் கூறியிருந்தார்.
செம பிளான்
அதுபோல அஜித் ஒரு பேட்டியில் பேசும்போது ரேஸையும் சினிமாவையும் மாறி மாறி செய்து கொண்டிருக்கிறேன். அதனால் ஏற்ற இறக்கங்கள் இருந்தன. ஒரு கட்டத்தில் அது ஒர்க் அவுட் ஆகாது என்பது நன்றாக தெரிந்து விட்டது. இந்த நிலையில் தான் ரேஸ் இருக்கும் காலகட்டத்தில் படம் தொடர்பான கமிட்மெண்ட்டுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்க நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான ரேஸ் இல்லாத காலகட்டத்தில் ஒரு படம் நடிக்க முடிந்தால் ஒவ்வொரு ஆண்டும் என்னால் ஒரு படத்தை வெளியிட முடியும், இப்படி செய்தால் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அதாவது ரேசிங்கில் என்னால் கவனம் செலுத்த முடியும்.
தனித்தனியாக கவனம்
ஒரு அணியின் உரிமையாளர் ஆக இருந்தாலும், சரி ஓட்டுனராக இருந்தாலும் சரி, ஒரு நடிகராகவும் எனது பெயரை நான் காப்பாற்றிய வேண்டி இருக்கிறது. ரேசிங் மற்றும் சினிமா என இரண்டு துறைகளும் தனித்தனியாக நேரம் ஒதுக்குவதால் என்னுடைய வேலைகளில் சரியாக கவனத்தை செலுத்த முடிகிறது என்று அஜித் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications