அஜித்துக்கு அந்த நடிகரின் அப்பா செய்வினை வைத்தாரா? வலது நெஞ்சில் அம்மனை பச்சை குத்தியது ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித் குமார் தன்னுடைய நெஞ்சில் சாமி உருவத்தை பச்சை குத்தியிருக்கிறார்.. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அது என்ன சாமி? என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.. பிறகுதான், அது குல தெய்வமான ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மனின் உருவத்தை தான் தன் நெஞ்சில் அஜித் பச்சை குத்தி இருக்கிறார் என்பது தெரியவந்தது.. இந்நிலையில், இவ்வளவு நாள் இல்லாமல் திடீரென அஜித் பச்சை குத்தி கொள்ள என்ன காரணம் என்பதை மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு விளக்கி உள்ளார்.

Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, "ஊட்டுக்குளங்கராவிலுள்ள பகவதி அம்மன்தான் அஜித்குமாரின் குலதெய்வம்.. கேரளாவை சேர்ந்தவர்.. அம்மா சிந்தி. எனினும் தமிழ்நாட்டு பையனாகவே வளர்ந்தவர் அஜித்.. அஜித்தை ஒருகாலத்தில் கடுமையாகவே விமர்சனம் செய்தார்கள்... இந்து மதத்தின் தீவிர வெறி கொண்டவர், சங்கி என்றெல்லாம் விமர்சித்தார்கள்..

Television Ajith Kumar Top Actor

ஓம் சின்னம் - சத்தம்

நான் பலமுறை அஜித்தை சந்தித்திருக்கிறேன்.. அபிராமிபுரத்திலுள்ள அவருடைய அலுவலகம் ஏகே இன்டர்நேஷனல் பின்பக்கம் ஓம் என்ற பெரிய சின்னம் இருக்கும்.. அதிலிருந்து ஓம் என்ற சத்தம் ஒலித்து கொண்டேயிருக்கும். டேபிள் மீது சாமி படம் வைத்திருப்பார். குலதெய்வ கோயிலுக்கு சமீபத்தில் குடும்பத்துடன் அஜித் சென்றிருந்தார்..

வலது நெஞ்சில் ஏன் பச்சை குத்தினார்? அப்படி பச்சை குத்தியதை அஜித் ஏன் வெளியே காட்டினார்? டவல் போர்த்தியும் அது விலக்கப்பட என்ன காரணம்? என்றெல்லாம் கேள்விகள் வலம் வந்தவாறு உள்ளன.. சமீபகாலமாகவே அஜித்துக்கு எதிரிகள் தொல்லைகள் உள்ளதாக தெரிகிறது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே இந்த தொல்லை அவருக்கு உள்ளது..

பெரிய நடிகரின் அப்பா

அஜித் சினிமாவுக்குள் வரவே கூடாது என்று பலரும் பல வேலை பார்த்திருக்கிறார்கள்.. ஒரு குறிப்பிட்ட நடிகரின் அப்பா, அஜித்துக்கு செய்வினை வைத்துவிட்டதாக சொன்னார்கள்.. இதை அஜித்திடமே சொல்லியும்கூட, சிரித்துகொண்டே, அப்படியெல்லாம் இருக்காது, நான்தான் உடம்பை சரியாக கவனித்து கொள்ளவில்லை" என்றாராம் அஜித்.

கடவுள் பக்தி அதிகம் இருந்தாலும், மூடநம்பிக்கைக்குள் செல்லாதவர் அஜித்.. முக்கியமாக சுயமரியாதை கொண்டவர்..
இதற்கு உதாரணமாக ஆஞ்சநேயா படத்தின் ஷூட்டிங் ஆந்திராவில் நெல்லூரில் நடந்துகொண்டிருந்தது,.

அப்போது அந்தபகுதியில் ரோடு வேலை செய்யும் தமிழகத்தை சேர்ந்தவர்கள், அஜித்தை பார்த்துவிட்டார்கள்.. அதிலிருந்த ஒரு அம்மா, தூளியில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை தூக்கி கொண்டு அஜித்திடம் ஓடிவந்தார்..

சார், நான் தமிழ்நாட்டை சேர்ந்தவள்.. என்னுடைய குழந்தைக்கு நீங்கள்தான் பெயர் வைக்க வேண்டும் என்றார்..

சுயமரியாதை கொள்கை

உடனே அஜித், உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் உரிமையை அடுத்தவர்களிடம் தராதீர்கள்..அது நல்லது கிடையாது.. உங்கள் குழந்தைக்கு நீங்கள்தான் பெயர் வைக்க வேண்டும். உங்களுக்கு பிடித்தமான பெயர் அல்லது உங்களது குலதெய்வத்தின் பெயரை வையுங்கள் என்று அந்தம்மா கையில் பணத்தை தந்து அனுப்பி வைத்தார்.

இப்படியொரு சுயமரியாதை கொள்கையை கடைப்பிடிக்கும் அஜித், குலதெய்வ வழிபாட்டையும் அப்போதிருந்தே கடைப்பிடித்து வருகிறார்..

இப்போது தன்னுடைய குலதெய்வத்துக்கு பச்சை குத்தி வழிபாடு நடத்த காரணம், அஜித் சமீப காலமாகவே தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறாராம்.. 4 மணி நேரம்தான் தூங்குகிறாராம்..

4 மணி நேரம் தூக்கம்

சமீபத்தில் ரேஸ் முடிந்துமே, இந்தியா டுடே பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில், "தினமும் 4 மணி நேரம்தான் தூங்குகிறேன்.. இப்படி தூங்காததால்தான் என் படங்களையே நான் பார்ப்பதில்லை, பிறரது படங்களையும் பார்க்க முடிவதில்லை.. வெப்சீரிஸ்களையும் பார்க்க முடிவதில்லை.

4 மணிநேரத்துக்கு மேலாக என்னால் தூங்க முடியாததற்கு காரணம் தெரியவில்லை. ஆனால் நான் ஆக்டிவ்வாகவே இருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

அந்த அளவுக்கு தூக்கமின்மை பிரச்சனை அஜித்தை பாதித்துள்ளது. இதற்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அஜித் வந்ததாககூட சொன்னார்கள். ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வந்தன..

பச்சை குத்தி வழிபாடு

பிறகு ஜோதிடரிடம் சென்று இந்த தூக்கமின்மை பிரச்சனைக்கு பிரசன்னம் பார்த்துள்ளார்..
அப்போதுதான் ஊட்டுக்குளங்கரா குலதெய்வம் படத்தை பச்சை குத்தி கொண்டால், பிரச்சனைகள் தீரும், நினைத்தது நடக்கும், காரியங்கள் கைகூடும் என்று ஜோதிடர் சொன்னாராம்.

எனவேதான் இதுவரை எந்த அடையாளத்தையும் காட்டாத அஜித், இப்போது ஊட்டுக்குளங்கரா குலதெய்வத்தை வழிபட்டு உடலில் பச்சை குத்தியிருக்கிறார்.. வழிபாடுகள் என்பது அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம், தன்னுடைய பிரச்சனையிலிருந்து விடுபட்டு விரைவில் அஜித் நடிக்க வரவேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+