பிஸ்கட் விளம்பரத்தில் நடிக்கும் அஜித்.. ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி.. ரசிகர்களின் சந்தேகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜித்குமார் ரேசிங் அணியுடன் ரிலையன்ஸ் நிறுவனம் மீண்டும் கை கோர்த்துள்ளது. இந்த முறை கூல்ட்ரிங்க்ஸ் கிடையாது, பிஸ்கட். ரிலையன்ஸ் நிறுவனத்தின் இண்டிபெண்டன்ஸ் பிராண்டில் புதிதாக 9 வகையான பிஸ்கட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் பவர் ரப் என்ற பிஸ்கட்டின் அறிமுகத்திற்காக அஜித் ரேசிங் அணியுடன் பிராண்ட் கூட்டணி வைத்திருக்கிறார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து அஜித்தின் விளம்பர பயணம் குறித்த விவாதமும் சோசியல் மீடியாவில் சூடு பிடித்திருக்கிறது.

அஜித் பொதுவாக சினிமா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார், விளம்பரங்களிலும் அதிகம் தலை காட்டாத நடிகர் என்ற பிம்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. தனது படங்களுக்கு கூட நேரடியாக விளம்பரம் செய்யாமல் இருப்பவர். பல வருஷங்களாக ஊடகத்தை விட்டு விலகியே இருக்கிறார். நல்ல படம் தானாகவே மக்களை சென்றடையும் என்ற எண்ணம் தனக்கு இருக்கிறது என்று அவர் சொல்லி இருக்கிறார்.

Ajith Kumar Racing Reliance Tamil Cinema

விளம்பரத்தில் அஜித்குமார்

தமிழ் செய்தி சேனல்களை விட ஆங்கில ஊடகத்திற்கு மட்டும் அடிக்கடி பேட்டி கொடுக்கிறார் இதுவும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் கார் ரேஸில் முழு கவனம் செலுத்த தொடங்கிய பிறகு இந்த நிலை இப்ப மாறி இருக்கிறது, அந்த வகையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கேம்ப்போ எனர்ஜி ஏற்கனவே அஜித் ரேசிங் அணியுடன் இணைந்துள்ளது. இதற்காக வெளியான விளம்பரங்களிலும் அஜித் நடித்திருந்தார். அப்போது படங்களுக்கு விளம்பரம் செய்யாதவர் தனது ரேசிங் அணிக்காக மட்டும் விளம்பரத்தில் நடிப்பது ஏன்? என்று சில கேள்வி எழுப்பி இருந்தனர்.

பிஸ்கட் விளம்பரம்

இப்போது அதே ரிலையன்ஸ் நிறுவனத்துடன் அடுத்த கூட்டணி வைத்திருக்கிறார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எஃப் எம் சி ஜி பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் லிமிடெட் தனது இண்டிபெண்டன்ஸ் பிஸ்கட் பிராண்டில் 9 புதிய ரகங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. மொத்தம் 28 புதிய பேக் வகைகளுடன் இந்த பிஸ்கட்டுகள் நவம்பர் 2ம் தேதி முதல் தமிழ்நாட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. பவர் ஆப் , மில்கி பவர், பட்டர்பிளக்ஸ், கோகோ, வெண்ணிலா என பல வகைகள் இதில் இருக்கின்றன.

போட்டோக்கு பஞ்சாயத்து

குறிப்பாக இந்த பிஸ்கட் 5 ரூபாய் முதல் 125 ரூபாய் வரையிலான விலைகளில் வெவ்வேறு பேக் அளவுகளில் கிடைக்கிறது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அஜித் அவருடைய கார் ரேஸுக்காக மட்டும் விளம்பரங்களில் கலந்து கொண்டு இருக்கிறார் ஆனால் அவரை சினிமாவில் பிரபலப்படுத்திய இயக்குனர் நடிகர், பாடகர்கள், மறைவுக்கு வருத்தம் கூட தெரிவிக்க மாட்டார், இது எந்த வகையில் நியாயம்? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஏற்கனவே ரேசிங் போட்டியின் போது ரசிகர்கள் இவரிடம் போட்டோ எடுக்க முயற்சி செய்தபோது அவர்களைப் பார்த்து முறைப்பது, தள்ளி விடுவது போன்ற செயலையும் ட்ரோல் பண்ணுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+