உஷாவால் பிரகாசமான டி. ராஜேந்தர் வாழ்வு.. அமலா தரும் மரியாதை.. டி.ஆரிடம் வலிய வழிந்த பிரபல நடிகை யார்
சென்னை: "பெற்ற தாயை பற்றி யார் பேசினாலும், டி.ராஜேந்தர் அழ ஆரம்பிச்சிடுவாரு.. தன்னுடைய அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு யார் சொன்னாலும், டி.ராஜேந்தர் கலங்கிடுவார்.. உடனே பணத்தை எடுத்து தந்து, கூடவே இருந்து அம்மாவை கவனிச்சுக்க சொல்லுவார்" டி.ராஜேந்தர்" என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பாராட்டி பேசியிருக்கிறார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "ஆரம்ப காலத்தில் சிரமப்பட்டுதான் சினிமாவுக்கு வந்தார் டி.ராஜேந்தர்.. முஸ்லிம் நண்பர்கள் அவருக்கு நிறைய உண்டு.. ஒரு தலைராகம் படத்துக்கு தயாரிப்பாளர் இப்ராஹிம் என்பவரும் இவரும் மயிலாடுதுறையை சேர்ந்தவர்தான்.

ஓரங்கட்டப்பட்ட டி.ராஜேந்தர்
ஆனால், நல்லதை கெடுக்கவும், குடைச்சலை தரவும் யாராவது நிச்சயம் இருப்பார்கள்.. அதுபோல டி.ராஜேந்தருக்கும் செய்துவிட்டதால், இயக்குனராக இவரது பெயர், முதல் படத்தில் வரவில்லை. ஒரு வாரத்துக்கு பிறகு, அந்த படம் சக்கை போடு போட்டது. சென்னை லிபர்ட்டி தியேட்டரில் மட்டும் 1 வருஷம் ஓடியது. படத்தின் வெற்றி விழா நடந்தபோது, டி.ராஜேந்தரை எல்லாரும் சேர்ந்து ஓரங்கட்டிவிட்டார்கள்..
ஆனாலும், மேலே வரணும்ன்னு போராடிட்டு இருந்தபோதுதான், உஷா மேடமை சந்தித்து அவருடன் நட்பு கிடைத்தது.. ஜேப்பியார் கிட்ட பேசி, வசந்த அழைப்புகள் படம் எடுத்தார்.. அந்த படம் ஓரளவு ஓடியது.. பிறகு, உயிருள்ளவரை உஷா படம் வெளியானபோது, அந்த படத்தையும் யாருமே வாங்கவில்லை. அதற்கு பிறகுதான் சக்கை போடு போட்டது.
காதல் தோல்வி நடிகை
உஷா வேறொருவரை காதலித்து கொண்டிருந்தார். ஆனால் அந்த காதல் தோல்வி அடைந்துவிட்டதுமே, தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தார்.. அப்போதுதான் டி.ராஜேந்தர் அவருக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் தந்தார்.. உஷா வந்தபிறகு, டி.ராஜேந்தரின் வாழ்க்கையும் பிரகாசமானது..
7 படங்கள் வரிசையாக ஹிட்டாயின.. தங்கைக்கோர் கீதம், என் தங்கை காதலி, தாயின் சபதம், மைதிலி என்னை காதலி இப்படி எல்லா பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானதுமே, ராஜா உட்பட எல்லாருமே திணறி போயிட்டாங்க. இதற்கு நடுவில் படங்களுக்கு மியூசிக் போடவும் வாய்ப்புகள் வரத்துவங்கியது.. கிளிஞ்சல்கள், பூக்களை பறிக்காதீர்கள் என அந்த படங்களும் ஹிட்டானது.
ஜென்டில்மேன் டி.ராஜேந்தர்
கிசுகிசு என்பதே டி.ராஜேந்தரை பற்றி வந்ததேயில்லை.. அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால்தான், ஹீரோயின் வாய்ப்பு தருவதாக பலர் சொல்லி கொண்டிருந்தபோது, டி.ஆரிடம் அப்படியொரு பழக்கமே இலலை.
ஒரு பிரபல நடிகையை பற்றி இங்கு சொல்ல வேண்டும். அந்த நடிகை, பின்னாளில் இன்னொரு பிரபலமான நடிகரை திருமணம் செய்தார்.. அவர் இப்போதும் டிவி சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார்.
ஆனால், அந்த நடிகையை, தன்னுடைய படத்தில் அறிமுகப்படுத்தியபோது, அந்த நடிகையின் மாமாவே, டி.ராஜேந்தரிடம் சென்று அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி பேசினார்.. அத்துடன் நடிகையின் வீட்டுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.. ஆனால், டி.ராஜேந்தர், "அந்த பொண்ணை ஒழுங்காக நடிச்சு தரச்சொல்லு போதும்" என்று சொல்லிவிட்டாராம். ஆனால், மற்றவர்கள் எல்லாம் டி.ராஜேந்தர் போல இருக்க மாட்டார்கள். அமலாவுக்கு இன்றுவரை டி.ராஜேந்தர் மீது அவ்வளவு மரியாதை உண்டு
அம்மா அம்மா அம்மா
இலங்கை வானொலியில் எப்போதும் டி.ஆர். பாடல்கள் ஒலித்து கொண்டே இருந்தது.. சென்ட்டிமென்ட்டானவர்.. தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லேன்னு யார் சொன்னாலும்சரி, கலங்கிடுவார்.. பணம் தந்து, உடனே போய் பார்த்துவர சொல்லுவார்.. அம்மா மீது நிறைய பிரியம் உண்டு.. ஷூட்டிங், சட்டசபை என எங்கு கிளம்பினாலும், தன்னுடைய அம்மா படத்தை கும்பிட்டு, கீழே விழுந்து 3 முறை சாஷ்டாங்கமாக வணங்கிவிட்டுதான் கிளம்புவார்" என்றெல்லாம் புகழ்ந்து பேசியிருக்கிறார் சபிதா ஜோசப்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications