அம்பானி வாங்கிய விஜய் டிவி.. காலை தூக்கி கணவர் அமீர் மீது போட்ட பாவனி! நாசமா போன கலாச்சாரம்: பிரபலம்
சென்னை: கல்வியை தராமல் அடிமையாகவே வைத்திருக்க நேரிடுவதால்தான், வடஇந்தியாவிலிருந்து வருபவர்கள் 12 மணி நேரம் உழைக்கிறார்கள்.. அம்பேத்கர் சொன்னதைபோல, கல்வி கிடைக்கவேண்டுமானால், இந்து மதத்திலிருந்து வெளியேற வேண்டுதான்" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார். அத்துடன், விஜய் டிவியையும் சரமாரியாக பேட்டி ஒன்றில் சாடியிருக்கிறார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாண்டியன், "விஜய் டிவியில் வடஇந்திய பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. ஆர்எஸ்எஸ்ஸின், பாஜகவின் பிம்பமாக விஜய் டிவி இருக்கிறது. எனவே, கோபிநாத் போன்றவர்கள் சன்டிவி செல்ல நேர்ந்தால், திமுகவை அனுசரித்தே செல்ல வேண்டியிருக்கும்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பிரியங்காவுககு பதிலாக நடிகை லட்சுமி பிரியா என்பவர், மாகாபாவுடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். 15 வருடம் விஜய் டிவி செய்த ஒரே நல்ல காரியம் பிரியங்காவை மாற்றியதுதான் என்று மாகாபா சொல்கிறார்.. பிரியங்காவும் இனி லண்டனில் வசியுடன் செட்டில் ஆக போகிறார்..
அமீர் - பாவனி வீடியோ
ஆனால், கலாச்சார சீரழிவை தந்தது விஜய் டிவிதான்.. பாவனி - அமீர் இருவரும் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள்.. அதில் தன்னுடைய காலை தூக்கி அமீர் மீது வைத்துள்ளார் பாவனி.. உடனே அமீர், பாவனியின் பாதத்தை அழுத்தி விடுகிறார்.. இதென்ன நீலப்படமா? கணவன், மனைவியாகவே இருந்தாலும், மனைவியின் காலை கணவன் அழுத்திவிடுவதை உலகத்திலுள்ளவர்கள் எல்லாரும் பார்க்கணுமா? அப்படின்னா படுக்கையறையிலும் ஒரு கேமராவை வைத்துவிடுங்களேன்..
எல்லா பெண்களும் இப்படித்தான் கணவன் மீது காலை தூக்கி போட்டு, கணவன் காலை அழுத்திக் கொண்டிருக்கிறார்களா? இதெல்லாம் கலாச்சார சீரழிவு இல்லையா? இதுபோன்ற கழிசடைகளின் செயல்கள்,கேரளா அல்லது கர்நாடகாவில் நடந்தால், இதுபோன்றவர்களின் நிறமே மாறிவிடும். மக்களுக்கு நல்ல கருத்தை சொல்வதற்குதான் மீடியா.. சீரழிவை சொல்லித்தருவதற்கு சின்னத்திரையும், சமூகவலைதளமும் இல்லை.
கலாச்சார சீரழிவு
தமிழகத்தில் கலாச்சார சீரழிவுக்கு 100% காரணம் விஜய் டிவிதான். வடஇந்திய ஆதிக்கத்தின் பிடியில், அதிலும் ஒரு கட்சியின் கன்ட்ரோலில் சேனல் உள்ளது.. எனினும், கலாச்சார சீரழிவின் உருவாக்கமே விஜய் டிவிதான். அம்பானியின் கைக்கு இப்போது சேனல் போய்விட்டது. எனினும், அனைத்தையும் மக்களே பார்த்து கொள்வார்கள்.. ஆதிக்கத்தை இங்கே செலுத்த முடியாது.
ஆஸ்திரேலியா யுனிவர்சிட்டியை பொறுத்தவரை, 5 மாநிலத்திலிருநது வரக்கூடிய மாணவர்களை சேர்த்து கொள்வதில்லை.. குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார் இந்த 5 மாநிலங்களிலிருந்து மாணவர்களை ஆஸ்திரேலியா யூனிவர்சிட்டி திருப்பியனுப்பி விடுகிறது. ஏனென்றால், ஆடு மேய்ப்பவர்கள்கூட பிஎச்டி சார்டிபிகேட்டுடன் வருகிறார்கள்.
பெட்ரோல் பங்கில் வேலை
இப்படி படிப்பறிவே இல்லாதவர்களுக்கு கூட, 5 மாநிலங்களிலும் டாக்டர் பட்டம் தருகிறார்கள். இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சென்றால், அங்கே பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கிறார்கள்.. இதெல்லாம் சாதீய கட்டமைப்புதான்.. சாதீய சனாதனத்தை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று துடிக்கிறது இந்து மதமும், பார்ப்பனிய மதமும். அதனால்தான் கல்வியை தராமல் அவர்களின் உழைப்பை உறிஞ்சுகிறது.
கல்வியை தராமல் அடிமையாகவே வைத்திருக்க நேரிடுவதால்தான், வடஇந்தியாவிலிருந்து வருபவர்கள் 12 மணி நேரம் உழைக்கிறார்கள்.. அம்பேத்கர் சொன்னதைபோல, கல்வி கிடைக்கவேண்டுமானால், இந்து மதத்திலிருந்து வெளியேற வேண்டுதான்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications